வேலைக்கு ஆள் எடுக்கும் தேர்வு.சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தாள் நிர்வாக அதிகாரி
மூன்று இளைஞர்கள் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளித்துத் தேர்வாகினர்.தகுதிகளும் சரிசமம்!
மூவரில் ஒருவரை எப்படித் தேர்ந்தெடுப்பது என விழிபிதுங்கினார்.
இறுதியாக மூன்று பேருக்கும் ஐந்து கூடைகள் நிறைய ரோஜாவை எண்ணும் பணி கொடுக்கப்பட்டது.
ஏன் இந்தப் பணி எனத் தெரியாமலேயே மூவரும் செவ்வனே எண்ணி முடித்தனர்.அவரவர் நண்பர்களை அவர்களிடம் பேசவிட்டு உன்னிப்பாய் ம்றைந்து கவனிக்கலானார் நிர்வாக அதிகாரி .
“டேய்,இந்த வேலைக்கு இந்தப்பூவையெல்லாம் எண்ணித் தொலைக்கணும்னு என்தலையெழுத்தைப் பாருடா”-இது முதலாமவன்.
“வேற வேலை கிடைக்கற வரைக்கும்இந்தக் கோமாளித்தனத்தை செஞ்சுதானே ஆகணும்
வயித்துப்பாட்டுக்கு”-இது இரண்டாமவன்.
“பூக்களைத் தொட்டு எண்ணும்போது ஏற்பட்ட உணர்வும் வாசமும் ஒருவித புதுத் தெம்பைக்
கொடுத்துச்சு.ரொம்ப ரசிச்சுச் செஞ்சேண்டா”-இது மூன்றாமவன்.
மூன்றாமவனுக்கே கிடைத்தது வேலை!
இந்த கதையில் இருந்து புரிந்து,தெரிந்து கொள்ள வேண்டிய து என்ன?
நேர்முக தேர்வுக்கு போகிறவர்கள் எல்லாவற்றுக்கும் தயாராக போக வேண்டும்.