ஒரு மிகப் பெரிய செல்வந்தன் இருந்தான் ஏராளமான தொழில் செய்பவன்..! ஊருக்கு வெளியே ஒரு ஜவுளித் துணி குடோனும் அதனருகில் ஒரு கோழிப்பண்ணையும் வைத்திருந்தான்..அருகில் உள்ள காட்டில் ஒரு ஓநாய் இருந்தது..!
அது தினமும் அந்த பண்ணைக்கு வந்து 4 கோழிகளை பிடித்து சாப்பிட்டு ஓடிவிடும்..அதனால் செல்வந்தனுக்கு மிகப்பெரிய நஷ்டம்..ஓநாயின் இந்த அட்டகாசத்தை ஒழிக்க ஆட்களை ஏற்பாடு செய்து அதை பிடிக்க முடிவு செய்தான்.. அதன் படி ஆட்களையும் நியமித்தான்..!
அந்த பொல்லாத ஓநாய் பிடிக்க வந்தவர்களை எல்லாம் தாக்கியது.. நான்கு ஐந்து முறை முயற்சித்தும் அது பிடிபடவில்லை..இந்நிலையில் அவ்வூருக்கு ஒரு பெரிய வேடன் வந்தான்.. அவனைப்பற்றி கேள்விப்பட்ட செல்வந்தன் அவனை அழைத்து விவரம் சொன்னான்..!
அதற்கு அந்த வேடன்”கவலையை விடுங்க உயிரோடு வேண்டுமா இல்லை பிணமாகவா?” என்று அவன் கேட்ட கேள்வியே செல்வந்தனுக்கு பிடித்து போனது.. இவ்வளவு நாள் போக்கு காட்டிய அந்த ஓநாயை உடனே கொல்வதா..!? அதற்கு ஒரு பாடம் புகட்டவேண்டும்..!
அந்த ஓநாயை சித்திரவதை செய்து நாம் கொல்வதைக் கண்டு இனி எந்த மிருகமும் நம் எல்லைக்குள் வரக்கூடாது எனவே உயிருடன் வேண்டும் என்றான்..சரி என்று புறப்பட்டு போன வேடன் அன்றிரவு தன் அனுபவத்தால் ஓநாயை உயிருடன் பிடித்து விட்டான்…!
தகவல் அறிந்து அங்கு விரைந்த செல்வந்தன் வேடனுக்கு ஏராளமான பணத்தை கொடுத்து அனுப்பி விட்டு கட்டிப் போட்டிருந்த ஓநாயை ஆசை தீர நையப் புடைத்தான்.. அதுவும் வலி தாங்காமல் அலறியது..கை ஓய்ந்த பின் அடுத்து என்ன சித்திரவதை என யோசித்தான்…!
இந்த ஓநாய் பலத்த காயங்களுடன் காட்டுக்கு போனால் தான் அதைப் பார்த்த மற்ற மிருகங்கள் இங்கு வர பயப்படும் என்று முடிவு செய்து.. பெட் ரோலில் நனைத்த துணியை அதன் வாலில் சுற்றி தீ வைத்து ஒழிந்து போ என கட்டவிழ்த்து விரட்டி விட்டான்..!
உயிர் பயத்தில் அலறி ஓடிய ஓநாய் சட்டென்று அருகில் உள்ள செல்வந்தனின் ஜவுளி குடோவுனுக்குள் ஓடியது அதன் வாலில் இருந்த தீ அந்த குடோவுன் முழுதும் பரவி அனைத்து ஜவுளிகளும் எரிந்து சாம்பலாகின.! அதை பழிவாங்கிய செல்வந்தனுக்கு தான் பெருத்த நஷ்டம்..!
நீதி : பிறரை பழி வாங்கும் போது நமக்கு துன்பம் வரும்…!