Home » உடல் நலக் குறிப்புகள் » மங்குஸ்தான் பழம்!!!
மங்குஸ்தான் பழம்!!!

மங்குஸ்தான் பழம்!!!

பழங்களின் அரசி:-
கணனியில் வேலை செய்யும் இளைய தலைமுறையினருக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும்.இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள்.
இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும்.
அதிகப்படியான உடல் கொழுப்பைக் குறைத்து மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு நோய்களைத் தவிர்க்க மங்குஸ்தான் பழச்சாறு குடிக்கலாம் என்று அமெரிக்க ஆய்வில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.மங்குஸ்தான் பழச்சாறு பருகினால், சி-ரீயாக்டிவ் புரோட்டினின் அளவு நம் உடலில் கணிசமாகக் குறையும். உடல் எடை குறையும். நீண்ட ஆயுளும் கைகூடும்.

சிறுநீர் நன்கு வெளியேறினால் தான் உடலில் தங்கியுள்ள தேவையற்ற அசுத்த நீர் வெளியேறும். சிறுநீர் நன்கு வெளியேற மங்குஸ்தான் பழம் சிறந்த மருந்தாகும்.

இருமலை தடுக்கும், சூதக வலியை குணமாக்கும், தலைவலியை போக்கும், நாவறட்சியை தணிக்கும்.
பொதுவாக பழங்கள் எல்லாம் விட்டமின்கள் நிறைந்தவை . எண்கள் உடம்புக்கும் நல்லது. சாப்பாட்டுக்கு பின் ஒரு பழம் சாப்பிடுங்கோ என்கிறார்கள் பெரியோர்.
பழங்களில் இதுவும் ஒரு ருசியான பழம் தான் மங்குஸ்தான் பழம். இது மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும்.
இந்தப்பழத்தின் தோல் பகுதி தடிப்பாக  இருக்கும். இப்பழத்தின் தோல் பகுதியை உடைத்தால் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும்.
 
உடல் சூட்டைத் தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும், வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.
வயிற்றில் புண் இருந்தால் வாயில் புண் ஏற்படும். இதனால் வாய் துர்நாற்றம் வீசும், மேலும் உண்ணும் உணவுப் பொருட்கள் பல் இடுக்குகளில் தங்கி விடுகின்றன.
இதனால் உண்டாகும் கிருமிகளால் வாய் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். மங்குஸ்தான் பழத்தை நன்கு சுவைத்து சாப்பிட்டு, அல்லது அதன் தோலை காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
கணனியில்  வேலை செய்யும் இளைய தலைமுறையினருக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும்.
இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும்.
அதிகப்படியான உடல் கொழுப்பைக் குறைத்து மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு  நோய்களைத் தவிர்க்க மங்குஸ்தான் பழச்சாறு குடிக்கலாம் என்று அமெரிக்க ஆய்வில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சிறுநீர் நன்கு வெளியேறினால் தான் உடலில் தங்கியுள்ள தேவையற்ற அசுத்த நீர் வெளியேறும். சிறுநீர் நன்கு வெளியேற மங்குஸ்தான் பழம் சிறந்த மருந்தாகும். இருமலை தடுக்கும், சூதக வலியை குணமாக்கும்,  தலைவலியை போக்கும், நாவறட்சியை தணிக்கும்.
பழங்களின் அரசி என்று பெருமையுடன் அழைக்கப்படும் மங்குஸ்தான் பழம் மலைப் பகுதிகளில் விளையக் கூடியவை.
தென்னிந்தியாவில் மலைப் பகுதியில் தோட்டப் பயிராக வளர்க்கப்படுகிறது. இது மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென் அமெரிக்க நாடுகள், பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கிடைக்கிறது.
இதற்கு சூலம்புளி என்ற பெயரும் உண்டு இதை தென்கிழக்கு ஆசியநாடுகளில் பழங்காலத்தில் தோல், பற்களின் ஈறு நோய்களுக்கும், பல்வலி, தொற்நோய் கிருமிகளையும் (Infection), காளான்களையும் (Fungus) அழிக்க பயன்படுத்தினர்.

மங்குஸ்தான் பழத்தின் தோல் பகுதி தடிமனாக காணப்படும். பழத்தின் தோல் பகுதியை உடைத்தால் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும்.

 மன அழுத்தம் போக்கும்
நாட்பட்ட புண்கள், காயங்கள், காய்சல், இரத்தம் கலந்த வயிற்று போக்கு, உடல் மற்றும் மன சோர்வு, மன அழுத்தம், கவலை போன்றவைகளை குணமாக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது.வீக்கம் குறைக்கவும், புற்று நோய் எதிர்ப்பு சக்தி, வயதாவதை நிதானப்படுத்தவும், தோல்களின் சுருக்கத்தை குறைக்கவும், பாக்டீரியா  – வைரஸுக்கு எதிர்ப்பாகவும் பயன்படுகிறது.

உடல் சூட்டைத் தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும். வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.சீதபேதி இரத்தக் கழிச்சல் உள்ளவர்களுக்கு மங்குஸ்தான் பழத்தின் மேல் தோலை சுட்டு அல்லது பச்சையாக அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி உடனே குணமாகும்.

வாய் துர்நாற்றம் நீங்க

மங்குஸ்தான் பழத்தை நன்கு சுவைத்து சாப்பிட்டு, அல்லது அதன் தோலை காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். வயிற்றுப் புண், வாய்ப் புண் குணமடையும். கிருமிகளைக் கொள்ளும்.

கண் எரிச்சலைப் போக்க

கனிணியில் வேலை செய்பவர்களுக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும்.

இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும்.

சிறுநீர் நன்கு வெளியேற மங்குஸ்தான் பழம் சிறந்த மருந்தாகும்.அதுமட்டுமல்லாமல் இருமலை தடுக்கும், சூதக வலியை குணமாக்கும், தலைவலியை போக்கும்,நாவறட்சியை தணிக்கும்.

பெண்களுக்கு

மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப் போக்கை குறைக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது. மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

சீசன் காலங்களில் மங்குஸ்தான் பழத்தை வாங்கி சாப்பிடுவது நல்லது. அல்லது மங்குஸ்தான் பழத்தின் தோலை காய வைத்து பொடிசெய்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் அதிக இரத்தப் போக்கு குறையும்.

மங்குஸ்தான் பழம் மலைப் பகுதியில் விளையக்கூடியவை, இந்தப்பழத்தின் தோல் தடிப்பாக இருக்கும்.
பழம் நீலம் கலந்த சிவப்பு கலரில் இருக்கும். இப்பழத்தின் தோல் பகுதியை உடைத்தால் நுங்கு போன்று நான்கு அல்லது ஐந்து, ஆறு சுளைகள் சுளைகள் இருக்கும்.  சுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்திலும் இருக்கும்.
மங்குஸ்தான் பழம் பல நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது.  இருமலை தடுக்கும் சூதக வலியை குணமாக்கும் தலைவலியை போக்கும் நாவறட்சியை தணிக்கும்.
மங்குஸ்தான் பழத்தில்
நீர் (ஈரப்பதம்) – 83.9 கிராம்
கொழுப்பு – 0.1 கிராம்
புரதம் – 0.4 கிராம்
மாவுப் பொருள் – 14.8 கிராம்
பாஸ்பரஸ் – 15 மி.கி.
இரும்புச் சத்து – 0.2 மி.கி
உடலுக்குத்தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்ட இப்பழத்தை உண்டு பயனடைவோம்.
இது கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு பயனடையவும். மே, ஏப்ரல், ஜீன், ஜீலை மாதங்களில் கிடைக்கும். இது குற்றால சீசன் மாதங்களில் அங்கு அதிகமா விற்பனையாகும்.

மங்குஸ்தான் பழம் சிவப்பும், கருநீலமும் கலந்த வண்ணத்தில், உருண்டை வடிவில் பார்க்க அழகா கவும், சுவைக்க இனிதாகவும் இருக்கும்.

உலகின் கிழக்கத்திய நாடுகளில் வெப்பமண்டல பகுதியில் மட்டும் விளையும் சிறப்புக்குரிய கனி.

20 அடி முதல் 60 அடி உயரம் வரை வளரக்கூடியது மங்குஸ்தான் மரம். ‘குளுசியாசியே’ தாவர குடும்பத்தை சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் கார்சினியா மங்குஸ்தானா.

வெப்பமண்டல பகுதிகளில் உள்ள மழைக்காடுகளில் அதிகமாக வளரும். இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் மிகுதியாக வளர்கிறது.

இந்தியா மற்றும் இலங்கையிலும் விளைவிக்கப்படுகிறது. ஜூன் முதல் அக்டோபர் வரை மங்குஸ்தான் பழங்களின் ‘சீசன்’ ஆகும். மங்குஸ்தானில் பல வகைகள் உள்ளன.

மங்குஸ்தான் பழம், குறைந்த ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் சதைப்பற்றில் 63 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.

கொலஸ்டிரால் போன்ற கெட்ட கொழுப்புகள் மங்குஸ்தான் பழத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்துக்களை ஏராளமாக இருக்கிறது. 100 கிராம் பழத்தில் ஆர்.டி.ஏ. அளவில் 13 சதவீதம் நார்ப்பொருட்கள் அடங்கி உள்ளன.

எடை கூட விரும்புபவர்கள் மங்குஸ்தான் பழங்களை சாப்பிடலாம்.

‘வைட்டமின் சி’ நிறைந்தது மங்குஸ்தான். 100 கிராம் பழத்தில் 12 சதவீதம் ஆர்.டி.ஏ. அளவில் ‘வைட்டமின் சி’ உள்ளது. நீரில் கரை யத்தக்க சிறந்த நோய் எதிர்ப்பு பொருள் ‘வைட்டமின் சி’.

அதிக அளவு ‘வைட்டமின் சி’ சத்துள்ள உணவுப் பொருட்களை உடலில் சேர்ப்பது புளூ காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றுகள் ஏற்படாமல் காக்கும்.

உடலுக்கு தீங்கு தரும் ஆக்சிஜன் பிரீ-ரேடிக்கல்களை விரட்டும் தன்மையும் ‘வைட்டமின் சி’க்கு உண்டு.

பி-குழும வைட்டமின்களான தயாமின், நியாசின், போலேட் போன்றவையும் கணிசமான அளவில், மங்குஸ்தானில் காணப்படுகிறது.

கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்றவற்றின் வளர்ச்சிதை மாற்றப் பணிகளில் இந்த வைட்டமின்கள் துணைக்காரணியாக உதவுகின்றன.

அதிக அளவில் தாமிரம், மாங்கனீசு, மக்னீசியம், பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் இதில் உள்ளது.

உடற் செல்கள் வளவளப்புத் தன்மையுடன் இருப்பதற்கும், இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கவும் பொட்டாசியம் தாது அவசியமானது. பக்கவாதம் மற்றும் இதயவியா திகள் ஏற்படாமலும் காக்கும் ஆற்றல் கொண்டது.

 சாப்பிடும் முறை :

மேற்தோலை நீக்கிவிட்டு மங்குஸ் தான் பழங்களை அப்படியே சாப்பிடலாம்.

கோடை வெப்பம் தணிப்பதிலும், தாகம் தணிக்கவும் ஏற்றது மங்குஸ் தான் ஜூஸ்.

தேங்காய்ப்பால், மக்காச்சோள மாவு மற்றும் மங்குஸ்தான் பழத் துண்டுகள் சேர்த்து செய்யப்படும் ‘மங்குஸ்தான் கிளாபோட்டி’ சாப்பிட்ட பிறகு அருந்தும் பிரபல பானமாகும்.

இதை சாப்பிட்டால் மனநிலை சரியில்லாதவர்களுக்கு தீர்வு கிடைக்கும். பள்ளி குழந்தைகளுக்கு ஞாபக சக்தி தரும்.

இவ்வாறான பல அரிய குணங்களை கொண்ட பழம் இந்த மங்குஸ்தான் பழம் . எல்லோரும் சாப்பிட்டு பயம் பெறுங்கள் . இந்த பழத்தை சாப்பிடாதவர்கள் வாங்கி சாப்பிட்டு பாருங்கள் .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top