வாழ்க்கை முறை மாற்றங்கள் :-
ஆரோக்கிய வாழ்வின் அடிப்படை நியமம், வாழும் முறைகள். எல்லாம் அளவோடு இருந்தால், வாழ்க்கை சீராக ஓடும். அளவை மீறினாலோ, அல்லது குறைந்தாலோ வாழ்வு சுமையாகிவிடும்.
நமது ஆயுர்வேத மருத்துவம் வலியுறுத்துவது இதைத்தான். சொல்லப் போனால் ஆயுர்வேதம் ஒரு ‘முழுமையான’ வாழும் முறை, மருத்துவ சிகிச்சை, மனசிகிச்சை, யோகா இவை மட்டுமல்லாது, வாழும் முறைகளையும் ஆயுர்வேதம் போதிக்கிறது. உடல் ஒரு அழகிய கட்டிடம். திறமையாக இயங்கும் பல அவயங்களை உடையது.
வெளியில் புலப்படும் தேகத்தை ‘ஸ்தூல சரீரம்’ என்றும், புலப்படாத பகுதிகளை ‘ஸஷ்ம சரீரம்’ என்றும் சொல்லப்படும். இவை இரண்டையுமே மனிதன் கவனிக்க வேண்டும்.
ஆயுர்வேத மேதை சரகர் சொல்வது – க்ருத யுகத்தில் மனிதர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்ததால் ஆரோக்கியமாக இருந்தனர். த்ரேதாயுகத்தில், குடியிருப்புகளை உருவாக்கி அதில் வசிக்க முற்பட்டதால், மனிதர்கள் வாழ்க்கை முறை மாறி, ஆரோக்கிய குறைபாடு ஏற்பட்டு, பிணிகள் உருவாகின. இதனால் ரிஷிகள் ஒன்று சேர்ந்து, இந்திரனின் உதவியுடன் ஆயுர்வேதத்தை உருவாக்கினர்.
சரகர், தனது ஸம்ஹிதையில் வாழ்க்கை நெறியை பற்றி பல ஆலோசனைகளை கூறியிருக்கிறார். இந்த அறிவுரைகள் இன்றும் பயனளிக்கும்.
மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ, குறிப்பாக ஜீரண மண்டல பாதுகாப்பான வழிகளை, வாழ்க்கை முறைகளை (உணவுக்கட்டுப்பாடு தவிர) இங்கு பார்ப்போம்.
உணவைப்பற்றிய விதிமுறைகள் பின்னர் வரும் பக்கங்களில் விவரிக்கப்படுகின்றன.
நோயற்ற வாழ்க்கை முறை:
1. மனிதனின் குணாதிசயங்கள் மூன்று. ரஜோகுணம் – காமக்குரோதங்கள் அகம்பாவம், அழுக்காறு போன்ற கர்வத்தால் உண்டாகும் குணங்கள். தாமஸ குணம்- மந்த புத்தி, சோம்பல், அறியாமை இந்த குணத்தின் லட்சணங்கள். சாத்வீககுணம் – கர்வமின்மை, நிதானம், சத்யம், போன்ற நற்குணங்கள் முதல் இரண்டு குணங்களை வளர்த்துக் கொண்டே போனால் ஆரோக்கிய குறைவு, மன உளைச்சல்கள் உண்டாகும். வயிறு பாதிக்கப்படும். மனிதன் உதவி, தியானம் இவற்றால் தமோ, ரஜோ குணத்தை, சாத்வீக குணமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
2. உடல் நலத்திற்கு தூக்கம் அவசியம். எவ்வளவு தூக்கம் தேவை என்பது மனிதருக்கு மனிதர் வித்தியாசப்படும். இரவு உண்டவுடன் படுக்காமல் சிறிது நடை பயிலவும்.
தூக்கமின்மை வியாதியால் தவிப்பவர்கள் மருத்துவ உதவியை நாடவும்.
3. படுக்கப்போகும் முன்பு சுத்தமான நீரால் 10 – 15 தடவை ‘கண்டூஷம்’ (வாய்கொப்பளிக்க) செய்யவும். இதனால் வாய் சுத்தமாகும். வயிறு சரிவர இயங்கும். ஜீரணம் நன்கு நடைபெறும் கொப்பளிக்கும் போது மேலும், கீழும், அண்ணாந்தும், குனிந்தும் கொப்பளித்து துப்ப வேண்டும். தூக்கமின்மை வாயுவை தூண்டும். அதிக தூக்கம் கபத்தை அதிகரிக்கும். இரண்டையும் சமஅளவில் வைக்க வேண்டும்.
4. வாய் கொப்பளிப்பது நல்ல பழக்கம். வாய்ப்புண்களை தவிர்க்கலாம்.
5. விடியற்காலை எழுந்திருப்பது நல்லது. ‘பிரம்ம முகூர்த்தம்’ எனப்படும் காலை 3 மணியிலிருந்து 5 மணி வரை உள்ள நேரத்தில் எழுந்தால் நல்லது.
6. சுத்தமான பற்களை தேய்ப்பதால் பற்கள் பாதுகாக்கப்படும். உணவை கடித்து உண்ண உதவும். ஒவ்வொரு உணவிற்கு பின்னும் பல்துலக்க வேண்டும். இயலாவிட்டால் காலை எழுந்தவுடனும், இரவில் படுக்கப் போகும் முன்பும் இருவேளை பல் துலக்கவும். நாக்கை வழிக்க வேண்டும்.
7. காலைக்கடன்களை முடித்த பின் கை, கால்களை சுத்தமான, சோப்பினால் நன்றாக கழுவவும்.
8. நடப்பது எளிமையான ஆனால் அநேக பலன்களை தரும் ஒரு பயிற்சி. வாரத்தில் ஐந்து நாட்கள் செய்தால் போதும். தினசரி 30 நிமிடம், நன்றாக கைவீசி நடக்கவும்.
9. உடற்பயிற்சி, யோகாசனங்கள் செய்யவும்.
உடற்பயிற்சியும், யோகாசனங்களும் முறையாக கற்ற பின் செய்வது நல்லது. சிறுவர்கள் 7 – 8 வயது வந்ததுமே அவர்களை உடற்பயிற்சியில் ஈடுபடுத்துவது நல்லது.
10. வாரத்தில் ஒரு நாளாவது எண்ணை தேய்த்து குளிக்கவும்.
11. தினமும் ஒரு வேளையாவது உடல் அழுக்க போக குளிக்க வேண்டும்.
12. இயற்கை உந்துதல்களை அடக்கக் கூடாது. அடக்கினால் நோய்கள் வரும்.
13. பதட்டம், பரபரப்பை தவிர்க்கவும். எந்த வேலை செய்தாலும் அவசரப்படாதீர்கள். செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிட்டு செய்யுங்கள். இதனால் ஸ்ட்ரெஸ், டென்ஷன் குறையும். கவலைப்படுவதால் பிரச்சனைகள் தீராது. பிரச்சனைகளை நேருக்கு நேர் சந்தியுங்கள். மனஅழுத்தத்தை குறைக்க சிகிச்சை மேற்கொள்ளுங்கள். பணக்குறைபாடுகள், ஏழ்மை இவற்றை உழைப்பால் வெல்ல முயற்சி செய்யுங்கள்.
14. சிகரெட், மது பானம், லாகிரி வஸ்துக்களுக்கு அடிமை ஆகாதீர்கள். இவற்றின் கெடுதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இந்த கெட்ட பழக்கங்களை விட்டுத்தான் ஆக வேண்டும். புகையிலை கலந்த பான்மசாலா போன்ற பொருட்களையும் விலக்கவும். இவற்றால் வாய்புற்று வருவது நிச்சயம்.
15. உங்கள் உடல் பருமனாக இருந்தால் அதை குறைக்க முயற்சிகளில் ஈடுபடவும்.
16. சரீர உழைப்பில்லாமல், எப்போதும் ஓய்வில் இருந்தால், உண்டது ஜீரணமாகாது. மலச்சிக்கல் ஏற்படும். பிறகு எல்லாவித பாதிப்புகளும் வந்து விடும்.
வாழ்க்கை, முறை, மாற்றங்கள், ஆரோக்கியம், ஆயுர்வேத மருத்துவம், மருத்துவ சிகிச்சை, மனசிகிச்சை, யோகா, சரகர், ஜீரண மண்டலம், நோயற்ற, வாழ்க்கை முறை, ரஜோகுணம், தாமஸ குணம், சாத்வீக குணம், மனிதன், உதவி, தியானம், மருத்துவம், உடற்பயிற்சி, யோகாசனங்கள், ஸ்ட்ரெஸ், டென்ஷன், சிகிச்சை, சிகரெட், மது பானம், லாகிரி, வாய்புற்று, மலச்சிக்கல்,வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆரோக்கிய வாழ்வின் அடிப்படை நியமம், வாழும் முறைகள். எல்லாம் அளவோடு இருந்தால், வாழ்க்கை சீராக ஓடும். அளவை மீறினாலோ, அல்லது குறைந்தாலோ வாழ்வு சுமையாகிவிடும்.