வரலாற்றில் இன்று : ஜூலை 18
நிகழ்வுகள்
64 – ரோமில் பெரும் தீ பரவி நகரின் வர்த்தக மையத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று சொல்லப்படுகிறது.
1656 – போலந்து, மற்றும் லித்துவேனியப் படைகள் வார்சாவில் சுவீடனின் படைகளுடன் போரை ஆரம்பித்தன. சுவீடிஷ் படைகள் இப்போரில் வெற்றி பெற்றனர்.
1872 – ஐக்கிய இராச்சியத்திலும் அயர்லாந்திலும் இரகசிய வாக்கெடுப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
1916 – யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பெரும் சூறாவளியில் பலர் கொல்லப்பட்டனர். வீடுகள், மற்றும் பல தொலைத்தொடர்பு சாதனங்கள் சேதமடைந்தன.
1944 – இரண்டாம் உலகப் போர்: போரில் ஏற்பட்ட பல தோல்விகளை அடுத்து ஜப்பானியப் பிரதமர் ஹிடெக்கி டோஜோ பதவியைத் துறந்தார்.
1965 – சோவியத்தின் சோண்ட் 3 விண்கலம் ஏவப்பட்டது.
1966 – நாசாவின் ஜெமினி 10 விண்கலம் ஏவப்பட்டது.
1977 – வியட்நாம் ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்தது.
1982 – குவாத்தமாலாவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 268 மாயன் பழங்குடியினர் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1984 – கலிபோர்னியாவில் மக்டொனால்ட் உணவகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 21 பேர் கொல்லப்பட்டனர் 19 பேர் படுகாயமடைந்தானர். துப்பாக்கிதாரி ஜேம்ஸ் ஹியூபேர்ட்டி காவற்துறையினரால் கொல்லப்பட்டான்.
1995 – கரிபியன் தீவான மொன்செராட்டில் சௌபியரே மலை வெடித்ததில் வெடித்துச் சிதறியதன் காரணமாக மொன்செராட்டின் தலைநகரம் அழிக்கப்பட்டதுடன் மண்டலத்தின் மக்கட்தொகையின் மூன்றில் இரண்டு பகுதியினர் தீவை விட்டு வெளியேறினர்.
1996 – ஓயாத அலைகள் ஒன்று: முல்லைத்தீவு இலங்கைப் படைமுகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டது.
1997 – மும்பாயில் 10 சிறுவர்கள் காவற்துறையினரால் கொல்லப்பட்ட நிகழ்வுக்குப் பின்னர் சுமார் 8000 தலித் மக்கள் கலகத்தில் ஈடுபட்டனர்.
1998 – பப்புவா நியூ கினியில் 23-அடி கடற் சூறாவளியில் 3,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
2007 – மும்பாயில் ஏழு மாடிக் கட்டிடம் உடைந்து வீழ்ந்ததில் 29 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1909 – அந்திரே குரோமிக்கோ, சோவியத் அதிபர் (இ. 1989)
1918 – நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் கறுப்பினத் தலைவர், நோபல் பரிசு பெற்றவர்.
1935 – ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இந்து ஆன்மிகத் தலைவர்.
1950 – சேர் றிச்சர்ட் பிரான்சன், உலகின் பெரும் பணக்காரர்களுள் ஒருவர்.
இறப்புகள்
1817 – ஜேன் ஒஸ்டென், ஆங்கில நாவலாசிரியை (பி. 1775)
1892 – தோமஸ் குக், ஆங்கிலேய பிரயாண முகவர் (பி. 1808)
1968 – கோர்னெல் ஹேமன்ஸ், நோபல் பரிசு பெற்றவர்.
சிறப்பு நாள்
உருகுவே – அரசியலமைப்பு நாள் (1830)
நெல்சன் மண்டேலா நாள் (ஐநா)
நெல்சன் மண்டேலா பிறப்பு
நெல்சன் மண்டேலா 18 .07 .1918 – ஆம் நாளன்று ஆப்பிரிக்கப் பழங்குடி மக்கள் அதிகம் வாழும் ட்ரான்ச்கெய் பகுதியில் உள்ள கியூனுவில் பிறந்தார்.
இவர் “ரிசாசா” என்னும் செல்வாக்கு மிக்க ஆப்பிரிக்கப் பழங்குடியினரின் “தெம்பு” அரச குடும்பத்தை சேர்ந்தவர்.
1938 -ஆம் ஆண்டில் “போர்ட் காரே” பல்கலைக் கழகத்தில் படிப்பைத் தொடர்ந்த காலகட்டத்தில் மாணவர்கள் வேலை நிறுத்தம் ஒன்றில் தீவிர அரசியல் உணர்வோடு பங்கேற்றதால் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார்.
அஞ்சல் வழியில் படித்து இளங்கலை பட்டதாரி ஆனா பின்னர் சொகனசுபர்க்கில் உள்ள விட்வாட்டார் சுரான்ட் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றார்.
1948 -இல் ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரசு இவரை இளைஞர் அணியின் தேசியச் செயலாளராகத் தேர்ந்தெடுத்தது.
பின்னர் 1950 -ஆம் ஆண்டு அதன் தலைவராக்கப்பட்டார். சட்டமறுப்பு, சட்டமீறல், வேலை நிறுத்தம், புறக்கணிப்பு, ஒத்துழையாமை போன்ற புதிய போராட்ட வடிவங்களை இவர் முன்னெடுத்தார்.
1952 -இல் இனவேறுபாடு சட்டத்தை எதிர்த்துப் போரிடப் பல்வேறு நாடுகளிலிருந்து தொண்டர்களைத் திரட்டினார். 26 .06 .1952 -இல் ௫௧ ஆதரவாளர்களுடன் தடை ஆணையை முதன் முதலில் மீறினார்.
1953 – ஆம் ஆண்டு முடியும் வரை சட்டமறுப்பு இயக்கம் தொடர்ந்து நடைபெற்றது. நெல்சன்மண்டேலா தென் ஆப்பிரிக்காவில் தடைசெய்யப்பட்ட மாந்தர்” என வேலையர் ஆட்சி அறிவித்து அவரை பல இன்னல்களுக்கு ஆளாக்கியது.
பொது வாழ்வில் ஏற்பட்ட இன்னல்களைத் துணைவியாரால் பொறுத்துக் கொள்ள இயலாமையால் மன முறிவு ஏற்பட்டது.
மண்டேலாவுக்கும் இவரது போராட்டங்களை ஆதரித்த வின்னி என்ற பெண்ணுக்கும் காதல் மலரவே, 1958 -இல் இவர்களுக்குத் திருமணம் நடைபெற்றது.
திரட்டினார்:
“தேசத்தின் போர்வாள்” என்னும் புதிய அதிரடிப்படையின் தலைவர் பொறுப்பை மண்டேலா ஏற்றுக்கொண்டார்.
அரசின் அடக்கு முறையால் தலைமறைவாக வாழ்ந்த இவர் 11 .01 .1962 அன்று முதல், எதியோப்பியா மற்றும் விடுதலை பெற்ற அனைத்து ஆப்பிரிக்க நாடுகளுக்கும் சென்றார்.
அல்சீரியாவில் படைப்பயிற்சி பெற்றார். ௧௭ மாதங்கள் தலை மறைவு வாழ்க்கைக்கு பின் சிறைபிடிக்கப்பட்டு, 14 .06 .1964 அன்று வாழ்நாள் தண்டனை விதிக்கப்பட்டார்.
இராபன் தீவுச் சிறையில் இருந்தபோது, மண்டேலா இளம் அரசியல் சிறையாளிகளுக்குக் கல்வி புகட்டினார்.
அரைகுறைப் படிப்போடு சிறை சென்றவர்கள் பட்டதாரிகளாக வெளிவந்ததால் அந்த சிறைக்கு “மண்டேலா பல்கலைக் கழகம்”
எனப் பெயர் ஏற்பட்டு விட்டது. இதனால் இவர் போல்சுமூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.
12 .05 .1984 -இல் வின்னி மண்டேலாவை நேரடியாகச் சந்திப்பதற்கு 22 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு அனுமதி அளிக்கப்பட்டது.
மண்டேலாவை விடுதலை செய்யும்படி உலகத்தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். 31 .01 .1985 -இல் மண்டேலாவை நிபந்தனையுடன் விடுதலை செய்வதாக அரசு அறிவித்தது.
ஆனால் மண்டேலா, கீழ்காணும் கோரிக்கைகளை முன் வைத்தார்.
1 , அரசு முதலில் தனது இனப்பாகுபாட்டுக் கொள்கையைக் கைவிட வேண்டும்.
2 , 14 % மட்டும் உள்ள வெள்ளையர்கள் 87 % நிலத்தை உரிமைபடுத்தி கொள்வதற்கு வசதியான திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
3 , நாடு முழுவதும் எல்லா இனத்தவருக்கும் “ஒருவருக்கு ஓர் ஒப்போலை உரிமை” என்று இருக்க வேண்டும்.
4 , அரசியலில் கறுப்பர்களுக்கு சம உரிமை வழங்கப்படவேண்டும்.
1985 -இல் அறுவை மருத்தவம் செய்யவேந்தியக் கட்டாயத்தினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நலம் பெற்று சிறைக்கு திரும்பியவர், காச நோய் காரணமாக 12 .08 .1988 -இல் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
எப்.டபிள்யூ.கிளார்க் நாட்டின் தலைவராக இருந்த பொது 27 ஆண்டு சிறைவால்க்கையிளிருந்து 10௦.02 .1990 அன்று விடுதலை பெற்ற இவர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் துனைதளைவராகப் பொறுபேற்றார்.
1994 ஏப்ரல் 24 ஆம் நாள் அன்று நடந்த முதலாவது நிரவேற்றியற்ற இன ஒதுக்கல் இல்லாத தேர்தல் முறையில் மண்டேலா ஆட்சிக்கு வந்தார்.
தென்னாப்பிரிக்கா என்னும் நிறவெறி நாட்டை சிறந்த மக்களாட்சி நாடாக மாற்றி வளர்ச்சிப் பாதையில் நடைபோட வைத்தார்.
ஐந்து ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருந்து அடுத்த நூற்றாண்டை புதிய தலை முறையிடம் விட்டுவிட முடிவு செய்து, 1999 சூன் 16 -ஆம் நாள் 80 வயது நிறைந்த மண்டேலா மக்களாட்சித் தலைவர் பதவியிலிருந்து விடை பெற்றார்.
உலகிலேயே பதவியைத் துறந்து அமைதியாக வாழவும், ஓய்வு கொள்ளவும், இளைய தலைமுறைக்கு வலிவிடவும் விரும்பிய முதல் மாந்தர். “ஓர் அநீதியை மற்றோர் அநீதியால் எதிர் கொள்ள முடியாது” என்று மக்களுக்கு உணர்த்தியச் செம்மல் நெல்சன் மண்டேலா என்பது நினைவில் கொள்ளத்தக்கது.