அமெரிக்கா – வியட்நாம் போர் நடந்த சமயம். யுத்தம், வியட்நாம் நாட்டை நார்நாராகக் கிழித்துப் போட்டிருந்தது. வீட்டை இழந்த மக்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள்.
கணவனை இழந்த மனைவி என்று நாடு முழுவதும் கண்ணீராலும் ரத்தத்தாலும் நனைந்திருந்தது. போரின் விளைவுகளைப் பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிதற்காக அமொரிக்க அரசு, இரண்டு தளபதிகளை அப்போது வியட்நாமுக்கு அனுப்பியது.
கை. கால் சிதைந்து துடிக்கும் சிப்பாய்கள், குழந்தையின் பிணத்துக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கதறும் தாய்மார்கள் என்று காட்சிகளைப் பார்த்த ஒரு தளபதியால் இந்தச் சோகத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை! தற்கொலை செய்து கொண்டு. அவர் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்!
இந்தத் தளபதி பார்த்த, அதே காட்சிகளை அடுத்த தளபதியும் பார்த்தார்.. பார்த்த பிறகு தனக்கிருந்த சின்னச் சின்னக் கவலைகளெல்லாம் இதற்கு முன் ஒன்றுமே இல்லை என்றாகி விட்டது அவருக்கு.
ஊர் திரும்பியதும் அவர், ‘கொடுத்த கடன் திரும்பி வரவில்லையே.. சொந்தமாக கார் வாங்க முடியவில்லையே..‘ என்பது போன்ற தினப்படிக் கவலைகளில் இருக்கும் மனிதர்களிடம், வியட்நாம் மக்களின் அவதிகளை எடுத்துச் சொன்னார்.
மக்கள் மனமுருகிக் கேட்டார்கள். அதன் பிறகு வியட்நாம் அனுபவம் பற்றிப் பேசச் சொல்லி இந்தத் தளபதிக்கு நிறைய அழைப்பு! இதை வைத்தே அவர் பொரி பணக்காரராகி விட்டார்!
ஒரு தளபதி தற்கொலை செய்து கொள்கிறார். அடுத்தவரோ, தனக்கிருந்தபிரச்னைகளையே மறந்து, மற்றவர்களின் பிரச்னைகளையும் மறக்கடிக்கிறார். ஆனால். அடிப்படையில் இருவரும் பார்த்த காட்சிகள் ஒன்றுதான்.
இதே மாதிரியே இன்னொரு உதாரணத்தைச் சொல்லிவிட்டு விஷயத்துக்கு வருகிறேன்- அது ஷூ தயாரிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனம்.
தனது கம்பெனியின்ஷூக்களுக்கு குறிப்பிட்ட ஓர் ஆப்பிரிக்க நாட்டில் எவ்வளவு ‘டிமாண்ட்‘ இருக்கிறது என்று தொரிந்து கொள்ள கம்பெனி முதலாளி அந்த நாட்டுக்கு ஒரு மேனேஜரை அனுப்பினார்.
போன வேகத்திலேயே தனது நாட்டுக்குப் பறந்து வந்த மானேஜர், ‘அந்த நாட்டில் நாம் ஷூக்களையே விற்க முடியாது..‘ என்று ரிப்போர்ட் கொடுத்தார்! ‘ஏன்..?‘என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில்.. ‘அந்த நாட்டில் யாருமே ஷூ அணிவதில்லை!‘
முதலாளி, ‘முடியாது‘ என்ற வார்த்தையை அத்தனை சுலபமாக ஏற்றுக் கொள்ளும் ரகம் கிடையாது.
அதே ஆப்பிரிக்க நாட்டுக்கு இன்னொரு மானேஜரை அனுப்பினார். அந்த நாட்டுக்குப் போய் ஸ்டடி செய்த இரண்டாவது மானேஜர் சந்தோஷத்தில் துள்ளிக் கொண்டு முதலாளியின் அறைக்குள் ஓடி வந்து சொன்னார்- ‘நமது கம்பெனியின் ஷூக்களுக்கு அங்கே மிகப் பொரி மார்க்கெட் இருக்கிறது!‘
‘எப்படி..?‘ என்று அவரிடம் முதலாளி கேட்டார் அதற்கு இரண்டாவது மானேஜர் சொன்ன பதில்.. ‘அந்த நாட்டில் யாருமே ஷூ அணிவதில்லை!‘
இதிலிருந்து நாம் படிக்கவேண்டிய பாடம் இதுதான்!
ஒவ்வொரு மனிதனும் அலுவலகம்,. வியாபாரம், வீடு என்று வகைவகையானசந்தர்ப்பங்களில் விதவிதமான அனுபவங்களுக்கு ஆட்படுகிறான்! ஆனால். என்னைப்பொறுத்தவரை, எல்லா அனுபவங்களையும் இரண்டே வகையாகத்தான் பிரிக்க முடியும்.
ஆட்படும் அனுபவம் எதுவாக இருந்தாலும், அதிலிருந்து ஏதாவது ஒரு பாடம் படிக்க வேண்டும் அது – சிறப்பான அனுபவம்!
எந்த அனுபவத்திலிருந்து அவன் பாடம் எதுவுமே கற்றுக் கொள்ளவில்லையோ, அது – மோசமான அனுபவம்!
மின்சார விளக்கைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன், தனது முதல்முயற்சியிலேயே வெற்றியைத் தொட்டு விடவில்லை.
ஏற்க்குறைய ஆயிரம்சோதனைகளுக்குப் பிறகுதான் அவர் ‘பல்ப்‘ கண்டுபிடித்தார். ‘நீங்கள் ஆயிரம்சோதனை செய்தீர்கள்.. அதில் 999 சோதனைகள் தோல்வியடைந்தன. ஒன்றே ஒன்றுதான் வெற்றி பெற்றது! இல்லையா..?‘ என்று அவரிடம் யாரோ ஒருமுறை கேட்டார்கள்;
அதற்கு எடிசன் சொன்னார் :-
‘முதல் 999 சோதனைகளிலும் நான் எதுவுமே கண்டுபிடிக்கவில்லை என்று யார் சொன்னது..? ஒரு பல்ப்பை உருவாக்கத் தவறாக முயற்சி செய்வது எப்படி..? என்று இந்த 999 சோதனைகளிலிருந்து நான் கற்றுக் கொண்டேனே!‘.