மூலவர் : முத்துக்குமார பாலதண்டாயுதபாணி
அம்மன்/தாயார்: வள்ளி, தெய்வானை
தல விருட்சம் : வில்வம்
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் : அலகுமலை
புராண பெயர் : வானவன்சேரி
மாவட்டம் : திருப்பூர்
திருவிழா :
தைப்பூசத் தேர்த்திருவிழா, சித்திரைத் திருவிழா(தமிழ் வருடப் பிறப்பு), கார்த்திகை தீபத்திருவிழா, மற்றும் பவுர்ணமி கிரிவலம்.
தல சிறப்பு :
ராமதூதன் ஆஞ்சனேயர் சிவபுத்திரன் திருத்தலத்தில் குடிகொண்டிருப்பது.
திறக்கும் நேரம் :
காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை.
முகவரி :
அலகுமலை அருள்மிகு முத்துக்குமார பாலதண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில், அலகுமலை கிராமம், அலகுமலை அஞ்சல், திருப்பூர் தாலுகா, திருப்பூர் மாவட்டம்- 6416665
பொது தகவல் :
கொங்குநாட்டின் புகழ்பெற்ற முருகன் திருதலங்களில் ஒன்று. திருப்பூரிலிருந்து தென்கிழக்கில் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. சுமார் 300 படிக்கடுகளுடன் இம்மலைக்கோவில் அமைந்துள்ளது.
பிரார்த்தனை :
கோவையில் புகழ்பெற்ற கேஜி குழும நிறுவனர் கோவிந்தசாமி நாயுடு அவர்கள் முதல் முறை இகோவிலுக்கு வந்தபோது அவரால் நடந்து மேலே செல்ல முடியவில்லை.
ஆனாலும் இக்கோவிலுக்கு பல திருப்பணிகளை செய்த அவர் பின்னர் பலமுறை வந்தபோது நடந்தே மேலே சென்றார்.
நேர்த்திக்கடன் :
இப்பகுதியில் வாழும் பலர் தங்கள் குடும்பத்தின் முதல் ஆண் குழந்தைக்கு முத்துக்குமார் என்று பெயர் சூட்டி முடி காணிக்கை செலுத்துவது வழக்கம்.
தலபெருமை :
இராம பக்த ஹனுமன் ஒரு முருகக் கடவுளின் சிவத்தலத்தில் இடம்பெற்றிருப்பது தனிச்சிறப்பு. இத்திருத்தலத்தின் பெருமைகள் அலகுமலைக் குறவஞ்சி எனும் நூலில் கூறப்பட்டுள்ளது.