Home » படித்ததில் பிடித்தது » மொபைலில் நாம் அறியாத சில தகவல்கள்!!!
மொபைலில் நாம் அறியாத சில தகவல்கள்!!!

மொபைலில் நாம் அறியாத சில தகவல்கள்!!!

மொபைலில் நாம் அறியாத சில தகவல்கள்:-

நாம் பயன்படுத்தும் மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை.

0 மற்றும் 1 எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன.

இவற்றைப் பயன்படுத்தித்தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அவசர அழைப்பிற்கு 100 எண் பயன்படுவது இதில் ஒன்று.

ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும்.

மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம்.

உங்கள் நெட்வொர்க்கினைத் தாண்டி விட்டீர்களா?

மொபைல் போனை ஆப் செய்வது நல்லது. அல்லது பேட்டரி பவர் வீணாகும்.

திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது.

எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும்.

போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம்.

போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இருக்கும்.

இது குறைவாக இருக்கும்போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும்.
சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும்.

மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும்.

எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதனைத் தடுக்கவும்

எப்ப பார்த்தாலும் செல்போன் பேசுறீங்களா?

டெல்லி:

உலக அளவில் செல்போன் பயன்படுத்துவதில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்திய அளவில் செல்போன் பயன்படுத்துவதில் தமிழக வாடிக்கையாளர்கள் இரண்டாம் இடத்தில் உள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் தான் அதிகமான செல்போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இம்மாநிலத்தில் மட்டும் 12.16 கோடி பேர் செல்போன்களை பயன்படுத்துகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவலின் அறிக்கையை கொஞ்சம் நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.

இந்தியா நம்பர் 2 

செல்போன் பயன்படுத்துவதில், சர்வதேச அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்துடன் சுமார் 86.166 கோடி செல்போன் இணைப்புகள் இருந்ததாகவும், இது ஜனவரி மாதம் வரை சுமார் 86.26 கோடியாக இருந்தது என்றும் ட்ராய் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் கடந்த ஜனவரியை விட பிப்ரவரி மாதம் சுமார் 0.11 சதவீதம் செல்போன் இணைப்புகள் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழகம் நம்பர் 2 

செல்போன் பயன்படுத்துபவர்களில் 7 கோடியே 18 லட்சம் வாடிக்கையாளர்களுடன் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. உ.பி, தமிழகத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிரம், ஆந்திரம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் செல்போன் பயன்படுத்தும் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகம்.

5 மாநிலங்கள் 

இந்த 5 மாநிலங்களில் உள்ள செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கையானது 36 கோடியாக உள்ளது என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கையில் 45 சதவீதம் ஆகும்.

500 கோடி செல்போன் இணைப்பு 

உலகில் 500 கோடி பேருக்கு செல்போன் இணைப்பு உள்ளது (உலக மக்கள் தொகை 750 கோடி). இதன்மூலம் நாம் குறைந்தபட்சம் புரிந்து கொள்ள வேண்டியது, இன்றைய மனித சமூகம் 20 வருடங்களுக்கு முன்பைவிட 500 கோடி மடங்கு அதிக கதிர்வீச்சை உள்வாங்குகிறோம் என்பதையே!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top