கிளிகள் பற்றிய தகவல்கள்:-
கிளி சித்தாசிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை. இவற்றுள் சுமார் 86 இனங்களைச் சார்ந்த 372 வகைகள் உள்ளன. இவை சிறப்பியல்பான வளைந்த சொண்டைக் (அலகு) கொண்டன.
ஆத்திரேலியாவிலும் தென் அமெரிக்காவிலுமே மிக அதிக வகையிலான கிளிகள் உள்ளன. தமிழ்நாட்டில் பொதுவாக காணப்படுவது சிவப்பு வளைய கிளியாகும் (Rose Ringed parakeet)
கிளிகள் அதாவது ஒவ்வொரு காலிலும், முன்பக்கம் இரண்டும், பின்பக்கம் இரண்டுமாக நான்கு விரல்கள் அமையப் பெற்றவை. அறுநூறுக்கும் மேற்பட்ட விதவிதமான கிளிகள் உள்ளன.
கிளியால் தன் அலகுகளின் மேல் அலகை மட்டுமே அசைக்க முடியும். கேட்கும் சக்தி அதிகம். கிளி ஓராண்டிற்கு ஒரு முட்டை மட்டும் இடும்.
பண்டைக்காலம் முதலே மனிதன் தனக்கு தீங்கு செய்யாத மென்மையான சில பிராணிகளை வீட்டில் வைத்து வளர்த்து வந்தான். நாய், பூனை மற்றும் கிளிகள் அந்த வகையில் அடங்குபவை. இவை செல்லப் பிராணிகள் எனப்படுகின்றன.
இந்தியப் புராணங்களில் பச்சைக்கிளிகள் சிறப்பிடம் பெறுகின்றன. அது காமதேவனின் வாகனம். மதுரை மீனாட்சி அம்மன் கையில் கூடப் பச்சைக் கிளி இருக்கும்.
சிளிகள் மனிதனைப்போன்று குரல் எழுப்பக் கூடியவை. இத்தனைக்கும் அதற்கு மனிதனுக்கு இருபபதைப் போன்று குரல்வளைகூடக் கிடையாது.
பரிணாம வளர்ச்சியில் கிளி மற்றப் பறவைகளைப் போலவே மிகவும் பழமையானது. ஏழு கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கிளியின் அலகை ஒத்திருந்த மூக்குப் பகுதியைக் கொண்டிருந்த டைனோசரின் உடலின் படிமம் கிடைத்துள்ளது. கிளிகளை விஞ்ஞானிகள் “ட்ரூ பேரட்’ மற்றும் “கோகைடு’ என இரு இனங்களாகப் பிரிக்கின்றனர்.
உலகம் முழுவதும் சுமார் 350க்கும் அதிகமான கிளி வகைகள் உள்ளன. வெப்பமான பிரதேசங்களில் அவை அதிகம். கிளிகள் பெரும்பாலானவை பச்சை நிறம் உடையவை. எனவே, அவை பச்சைக்கிளி என்றே அழைக்கப்படுகின்றன. சிலவகைக் கிளிகளின் உடலில் பல வண்ணங்கள் கலந்திருக்கும். அவற்றில் பஞ்சவர்ணக்கிளி முக்கியமானது. பெயருக்கு ஏற்ப, அதன் உடலில் ஐந்து வண்ணங்கள் இருக்கும்.
கோகைடு வகையைச் சேர்ந்தவை முழு வெள்ளை அல்லது கருப்பாக இருக்கும். அவற்றின் தலையில் கொண்டை போன்ற உறுப்பு காணப்படும்.
விதைகள், கொட்டைகள் மற்றும் பழங்கள் கிளிகளின் உணவாகும். லாங்ரி, லாங்ரி கீட், ஸ்விஃப்ட் பேரட், ஹேங்கிங் பேரட் போன்ற வகைகிளிகள் பூக்கள் மற்றும் பழங்களின் சாற்றை உறிஞ்சிக் குடிக்கும். வேறு சில வகைகள் சிறுசிறு புழுப்பூச்சிகளைக் கொத்தித் தின்னும். மரங்கொத்திப் பறவையைப் போன்று இருக்கும் பூச்சிகளைக் கொத்தித் தின்னும் கிளிகளும் உண்டு.
கிளிகள் மரப்பொந்துகளில் முட்டையிடும். மூட்டைகள் வெண்ணிறமானவை! மோங்க் பேராகீட் மற்றும் ஏகோ போர்னிஸ் ஆகிய இன ஐவகைக் கிளிகள் மட்டும் மரங்களில் கூடுகட்டி வசிக்கும்.
ஆஸ்திரேலியா மற்றும் நியூஜிலாந்தில் தரையில் வசிக்கும் கிளிகள் தரையிலேயே கூடுகட்டி வசிக்கின்றன. வேறு சில கிளிகள் பாறை வெடிப்புகள் மற்றும் நதிக்கரை ஓரங்களில் கூடுகட்டி வசிக்கும். அடைகாப்பது பெண் கிளி. அதற்கு உணவு தேடி வருவது ஆண் கிளி.
கிளிகளின் உடலமைப்பில் பல வேறுபாடுகள் உண்டு. பிக்மி பேரட் என்பதன் எடை பத்தே கிராம்; உயரம் 8 செ.மீ.
ஹாய்சிந்த் மாகாவோ என்பது ஒரு மீட்டர் உயரம் என்கிறார்கள்.
கைனககோவின் எடை 4 கிகி. வரை. சில வகைகளில் ஆண் பெண் இடையே நிறத்தில் வேறுபாடு காணப்படும்.
இந்தியாவில் காணப்படும் பச்சைக்கிளிகள் இந்தியன் ரிங் நெக். அதன் கழுத்தில் சிவப்பு வளையம் காணப்படும். அலகும் சிவப்பு நிறம். கொக்கி போல் கூராக வளைந்திருக்கும். புத்திசாலித்தனம் மற்றும் பேசும் திறனில் உலகப் புகழ் வாய்ந்தது. இவ்வகை ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன.
மலைப் பிரதேசங்களில் வெள்ளை, மஞ்சள், நீலம் ஆகிய நிறக் கிளிகள் காணப்படுகின்றன. அவற்றின் உயரம் 14-16 அங்குலம் இருக்கும். சிறிய உடலமைப்பு. நீண்ட வால். கொக்கி போன்ற அலகு. எனவே இதைப் பைராகீட் வகை என்பர். ஆனால் கிளியின் கழுத்தில் கருப்புக் கோடு இருக்கும். அதன் ஓரத்தில் ரோஜா நிற வெளிக்கோடு காணப்படும்.
ஆப்பிரிக்காவின் பழுப்புக் கிளிகள் மிகவும் புத்திசாலி. சிறிய சொற்களின் பொருளைப் புரிந்து கொண்டு சிறு வாக்கியமாகப் பேசும். பொருள்களைப் பார்த்ததும் அது என்ன என்பதை அறிந்து கொள்ள முடியும். எண்ணிக்கையையும் அறிய முடியும் என்கிறார்கள் இந்த திறமைக்காகவே அவை சந்தைக்கு விற்பனைக்கு வருகின்றன. எனவே, இது பாதுகாப்பு ஆபத்து உள்ள இனம்.
விதைகளும், பழங்களும், கொட்டைகளும், பூக்களும், மொட்டுக்களும் மற்றும் தாவரம் சார்ந்த பிற பொருட்களுமே கிளிகளின் முக்கிய உணவு. கியா என்ற பெயர் கொண்ட ஆஸ்திரேலியா கிளிகள் மாமிசம் மற்றும் அழுகியவற்றை தின்பவை.
கிளியின் சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டுகள்.கிளிகள் உலகின் அனைத்து வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல கண்டங்களிலும் காணப்படுகின்றன.
ஆஸ்திரேலியா, மத்திய அமெரிக்கா மற்றும் தென்னமெரிக்கா பகுதிகளில் காணப்படுவனவற்றுள் அதிக வேறுபாடுகளைக் காணமுடிகிறது.
பத்து கிராம் அளவில் இருந்து 4 கிலோ வரையிலான எடையிலும், 8 செ.மீட்டர் முதல் ஒரு மீட்டர் வரையிலான அளவுகளிலும் காணப்படுகின்றன.
பொதுவாக இவை மரப்பொந்துகளில் வாழும். கிளிகள் மனிதர்களைப் போலவே ஒலி எழுப்ப வல்லவை. பயிற்சி அளித்தால் சில வார்த்தைகளை உச்சரிக்கும்.
ஆண் ஆப்பிரிக்க சாம்பல் கிளிகள் மனிதர்களின் பேச்சைப் புரிந்துகொள்வதில் சிறப்பு வாய்ந்தவை.