ஒரு துறவிகிட்ட சாப்ட்வேர் இன்ஜினியர் வந்தார்.. நல்ல தெய்வ பக்தி,அறிவாளி.
ஆனா அவருக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். அதாவது இந்த பூமியில பிறந்துட்டோம். ஒரு நாள் இந்த
உலகத்தை விட்டு போகத்தான் போறோம்.
அப்படி இருக்கும்போது ஏன் நாம நல்லது மட்டும் தான் செய்யணும். கெட்டது செஞ்சா, அடுத்தபிறவியில
அனுபவிக்கணும். அதாவது கர்மாவிடாதுன்னு எல்லா பெரியவங்களும் சொல்றாங்க.
ஆனா எனக்கு அதுல உடன்பாடு இல்லை. எல்லாம் சுத்த பொய். அது எப்படி நாம செத்துபோய்ட்டா கர்மா நம்ம
கூடவே வருதும்னு அவருக்கு சந்தேகம்.
அவருடைய சந்தேகத்தை துறவிகிட்ட சொன்னார்..துறவி கேட்டார். உனக்கு ஒரு வேலை கொடுக்கிறேன்.
அதை செய்வாயா?
கண்டிப்பா செய்யறேன். ஒகே.. நீ இன்னையிலிருந்து ஒரு பத்து நாளைக்கு நீ ஏதாவது ஹாஸ்பிடலுக்கு போய்ட்டு வ பத்து நாள் கழிச்சு நீ இங்க வான்னார்..
அதுக்கு நா இன்ஜினியர்.. நான் டாக்டர் இல்லை.
அதுக்கு அந்த துறவி எனக்குத்தெரியும்..சந்தோஷமா போய்ட்டுவா.. இவரும் பத்து நாட்கள் கழித்து வந்தார்.
அப்ப அந்த துறவி எப்படி இருந்தது என்றார். அதற்கு அந்த இன்ஜினியர், நான் கேன்சர் ஹாஸ்பிடலுக்கும், இருதயம் அறுவை சிகிச்சை ஹாஸ்பிடலுக்கும் போனேன்.
அதற்கு அந்த துறவி கேட்டார். கேன்சர் ஹாஸ்பிடலுக்கு போன, அதைப் பத்தி என்ன சொல்ற.
இன்ஜினியர், சிலருக்கு சாப்பாட்டினால, அல்லது பரம்பரைல யாருக்காவது கேன்சர் இருந்ததால வந்திருக்கு.அதேபோலத்தான் ஹார்ட் ப்ராப்ளமும்.
சில வியாதி பரம்பரையா ஜீன்ல இருக்கு.அதனால சிலருக்கு வந்திருக்கு.
நல்ல வேளை எனக்கு அதெல்லாம் இல்லை. என்ன சுகர் மட்டும் தான். அதுக்கு துறவி,உனக்கு மட்டும் தான்
சுகரா..இல்லை உங்க குடும்பத்தில யாருக்காவது இருக்கா?
அந்த இன்ஜினியர்,எங்க பரம்பரையில நிறைய பேருக்கு இருக்கு. ஜீன்ல யாருக்காவது இருக்கும் போல. அதான எனக்கும் இருக்கு.
அப்ப அந்த துறவி சொன்னாரம். ஒரு டாக்டர் சில சமயம், சில வியாதிகளைப்பற்றி பரம்பரை வியாதி,அல்லது ஜீன்ல இருக்கு என்று சொல்லும்போது, டாக்டர் சொல்றதை நம்புறீங்க.
நீங்க ஆராய்ச்சி பண்ணல, அதுபோலத்தான் இந்த கர்மாவும். நீங்க அறிவியல் பூர்வமா யாராவது சொன்னா நம்புறீங்க.
அதுபோலத்தான் இதுவும் ஒரு ஆன்மீக அறிவியல். நம்ம முன்னோர்கள் டாக்டர் சொல்றாப்ல சொல்லி இருக்காங்க.
உனக்கு சுகர் பரம்பரையா வந்தது.அதுபோலத்தான் கர்மாவும். உன்னுடைய கர்மா மனம் என்ற
ஆன்மீக ஜீனில் இருக்கு.
நல்லது செஞ்சா,நல்லது வரும். மற்றவர்களுக்கு தீமை செஞ்சா நம் கர்மா பரம்பரையா வர்ற வியாதி மாதிரி ஜென்ம ஜென்மா வரும்.
இதுதான் ஜீன் ஜென்(மா) தத்துவம் என்றார்.
”நல்லதையே செய்வோம். நல்லதே நடக்கும்.”