கோவில் கொடிமரம் ……………….. கோயிலுக்கு அழகு தருவது கொடிமரம். தீய சக்திகளை அகற்றுவதன் பொருட்டும், இறை ஆற்றலை அதிகரித்தல் பொருட்டும், கோயிலையும் பக்தர்களையும் பாதுகாத்தற் பொருட்டும் ஆலயங்களுக்கு முன்பாக கொடிமரம் நிறுவப்படுகிறது. கொடி மரத்தின் தண்டு நல்ல வைரம் பாய்ந்ததாக இருக்க வேண்டும். சந்தனம், தேவதாரு, செண்பகம், வில்வம், மகிழம் முதலிய மரங்களில் கொடிமரம் செய்வது உத்தமம் ஆகும். பலா, மா ஆகிய மரங்களில் கொடிமரம் அமைப்பது குறைந்த நன்மையைத் தருவதால் மத்திமம் ஆகும். கமுகு, பனை, ... Read More »
Monthly Archives: June 2016
நந்திதேவர்!!!
June 9, 2016
நந்திதேவர் சிவபெருமானிடம் பதினாறு பேறுகளை வரமாகக் கேட்டார். சிவபெருமானும் அப்பதினாறு பேறுகளையும் நந்திதேவருக்கு வழங்கினார். அவை:- 1. வேதங்களையும் சைவத்தையும் நிந்தனை செய்வதைப் பொறாத மனம். 2. ஐம்புலன்களுக்கு அடிமையாகி அவற்றுக்காகப் பணி செய்யாத நிலை. 3. பிறவி என்பது தீதென்று கருதி உலக சுகத்தைப் பெரிதென்று கருதும் பேதையரை விலகி நிற்கும் உறுதி. 4. நல்லறங்களைச் செய்தவர்களுடன் உறவு. 5. நல்லவர்கள் என்ன கேட்டாலும் உதவி செய்கின்ற இயல்பு. 6. அரும்தவம் செய்தோரை வணங்கிடும் பண்பு. ... Read More »
27 நக்ஷத்திரகளுக்கும் உரிய காயத்ரி மந்திரங்கள்!!!
June 9, 2016
27 நக்ஷத்திரகாரர்களுக்கும் உரிய நக்ஷத்ர காயத்ரி மந்திரங்கள் அசுவினி ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத் பரணி ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத் கிருத்திகை ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத் ரோகிணி ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத் மிருகசீரிடம் ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத் திருவாதிரை ஓம் மஹா ... Read More »
மாயையிலிருந்து விடுபடமுடியுமா!!!
June 9, 2016
மனிதர்கள், அறிவில் சிறந்தவர்களாக, அனைத்து வேதங்களையும் கற்றுணர்ந்தவர்களாக, முற்றும் துறந்த முனிவர்களாக இருந்தாலும், பிறவி என்று ஒன்று எடுத்து விட்டால், அதன் கர்மங்களிலிருந்தும், மாயைகளிலிருந்தும் விடுபடவே முடியாது. இது குறித்து, தேவி பாகவதம் எனும் நூலில், மகா விஷ்ணுவே, நாரதருக்கு, ஞான உபதேசம் செய்துள்ள சம்பவம் ஒன்று… மகாவிஷ்ணுவை தரிசிப்பதற்காக, பாற்கடலுக்குச் சென்றார் நாரதர். அவரைப் பார்த்ததும், மகாவிஷ்ணுவின் அருகில் இருந்த மகாலட்சுமி, நாணத்தோடு உள்ளே சென்று மறைந்து விட்டார். நாரதருக்கு மனம் பொறுக்கவில்லை. ‘பரந்தாமா… என்ன ... Read More »
ஆவதும் பெண்ணாலே.. அழிவதும் பெண்ணாலே!!!
June 9, 2016
ஆவதும் பெண்ணாலே.. அழிவதும் பெண்ணாலே… என்பதன் பொருள் தெரியுமா? பெண்களை தெய்வமாக வழிபட்டு வந்த நாடு நம் நாடு. ஒவ்வொரு பெண்மணியையும் அம்பாள், பரமேஸ்வரியாகவே பாவித்து மரியாதை செய்தனர். அந்தக் கால பெண்களின் தியாகமும், மகத்தானதாக இருந்தது. இப்படிப்பட்ட பெண்மணிகளை பரமேஸ்வரியாக பாவித்து, சுவாசினி பூஜை செய்வதைப் பார்த்திருக்கலாம். இவர்களுக்கு புது வஸ்திரம் அளித்து, புஷ்பம், மங்கல திரவியங்கள் கொடுத்து, பலகையில் உட்கார வைத்து, பூஜை செய்து நமஸ்காரம் செய்வர். இதில், வயது கணக்கில்லை. சுவாசினி என்றால் நமஸ்காரம் ... Read More »
மருதமலை!!!
June 8, 2016
கோவை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வாய்ந்தது மருதமலை முருகன் கோவில். அறு படை வீடுகளைக் கொண்டு குன்று தோறும் குமரன் எழுந்தருளி இருக்கும் இந்த மருதமலை 7-வது படைவீடு என பக்தர்களால் போற்றி வணங்கப்படுகிறது. மருதமலை……… எழில் கொஞ்சும் இயற்கையான சூழலில் அமைந்திருக்கும் மருதமலை, அதன் மூன்று புறங்களிலும் மலை அரண்களால் சூழப்பட்டு உள்ளது. கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலைகளின் இயற்கை அமைப்போடு சேர்த்து பார்க்கும் போது மயில் தோகை விரித்தாற்போல் காட்சி அளிக்கிறது. இதனால் முருகன் ... Read More »
நடராஜர் உருவான வரலாறு!!!
June 8, 2016
சிவ வடிவங்களில், நடராஜர் உருவம் முக்கியமானது. இது உருவான வரலாறைக் கேளுங்கள்: சோழ மன்னன் ஒருவன், சிவபெருமானின் நடனம் பற்றிய தகவலைப் படித்தான்; அந்தக் காட்சியை, சிலையாக வடிக்க எண்ணம் கொண்டான். தன் நாட்டிலுள்ள சிறந்த சிற்பிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் நடராஜர் சிலை யைச் செய்யும்படி வேண்டினான்; அவர்களும், ஒரு நல்ல நாளில் பணியைத் துவங்கினர். சிலைக்கான அச்சை வார்த்து, உலோகக் கலவையை அதில் கொட்டினர்; ஆனால், சிலை சரியாக வரவில்லை. பலமுறை முயற்சி செய்தும், இதே ... Read More »
ஸ்ரீராமகிருஷ்ணர் பற்றி விவேகானந்தர்!!!
June 8, 2016
ஸ்ரீராமகிருஷ்ணர் பற்றி சுவாமி விவேகானந்தர்…. ஒருவரிடம் கூர்த்த அறிவு, மற்றவரிடம் பரந்த இதயம். இந்த அறிவும் இதயமும் ஒருங்கே கொண்ட ஒருவர் பிறப்பதற்கான காலம் கனிந்தது. சங்கரரின் கூர்த்த அறிவும், சைதன்யரின் எல்லையற்ற பரந்த இதயமும் கொண்ட, எல்லா மதப் பிரிவுகளிலும் ஒரே இறைவனைக் காணக்கூடிய, ஏழைகள், பலவீனர்கள், கிழ்ஜாதியினர், தாழ்த்தப்பட்டவர் என்று இந்தியாவிலும் இந்தியாவுக்கு வெளியிலும் இந்த உலகிலுள்ள ஒவ்வொருவருக்காகவும் உருகும் இதயம்கொண்ட. அதே வேளையில் இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்தியாவிற்கு வெளியிலும் ஒன்றோடொன்று போராடிக் கொண்டிருக்கும் ... Read More »
வாழ்க்கையில் வெற்றி பெற ஆலோசனைகள்!!!
June 8, 2016
வாழ்க்கையில் வெற்றி பெற சில உளவியல் ஆலோசனைகள்…!!! பொருட்படுத்தாதீர்கள் (Objects do not) உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்…! எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள் (Do not expect anything to anyone) ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கைதான். எனவே , யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்…! எதிரிகளை ... Read More »
ஆன்மிகம் கூறும் நெல்லியின் மகத்துவம்!!!
June 8, 2016
ஏகாதசியில் நெல்லி மேல் பட்ட நீரில் நீராட, துவாதசியில் நெல்லி உண்பவன் கங்கையில் நீராடிய பயனும், காசியை பூஜித்த பலனையும் பெறுகின்றான். சூரியன் தவிர மற்றோரை நெல்லியால் பூஜிக்கலாம் அமாவாசையன்று நெல்லியை பயன்படுத்துதல் கூடாது. கோயில் கோபுரம் கலசங்களில் நெல்லியையும் போடுவர். மேலும் விமான உச்சிக் கலசத்தின் கீழாக நெல்லிக்கனி வடிவத்தில் ஒரு கல்லை செதுக்கி வைப்பார் இதற்கு ஆமலகம் என்று பெயர். நெல்லிக்கு ஹரிப்ரியா என்றும் பெயர் உண்டு. ஏகாதசியன்று நெல்லி இலை மற்றும் நெல்லி முள்ளி ... Read More »