Home » படித்ததில் பிடித்தது » நம்பினால் நம்புங்கள்-4
நம்பினால் நம்புங்கள்-4

நம்பினால் நம்புங்கள்-4

* சீனாவிலுள்ள  Qingdao  – Haiwan   சாலைப் பாலத்தின் நீளம் 42.4 கிலோமீட்டர். 2007ல் தொடங்கி, 2011ல் கட்டி முடிக்கப்பட்டது இப்பாலம்.

* போலி மதுபானங்களைக் கண்டறியவும் லேசர் தொழில்நுட்பம் உதவும்.

* 2050ம் ஆண்டுக்குள், நம் மூளையிலுள்ள அத்தனை தகவல்களையும் ஒரு கணிப்பொறிக்குள் ‘பேக் அப்’ செய்துவிட முடியும் என எதிர்காலவியல் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

* 14ம் நூற்றாண்டின் மத்தியில் ஏற்பட்ட பூபோனிக் பிளேக் நோய் தாக்குதலில் 2.5 கோடி மக்கள் பலியானார்கள்.

* 2009ல் வட கொரியாவில் நிலத்தடி அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டது. அப்போது 4.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

* பாதிக்கப்படும் பரப்பளவு அடிப்படையில், நெதர்லாந்திலேயே மிக அதிக சூறாவளிகள் ஏற்படுகின்றன. அங்கு ஒவ்வொரு 1,991 சதுர கிலோமீட்டருக்கு ஒரு சூறாவளி. சூறைப்புயல்களுக்குப் புகழ்பெற்ற அமெரிக்காவிலோ, இது 8,187 ச.கி.மீ-க்கு ஒன்றாக இருக்கிறது.

நம் காதிலுள்ள மெழுகும், தாடையின் அசைவும் இணைந்து தூசுகள், இறந்த செல்கள் போன்றவற்றை வெளித்தள்ளி விடுகின்றன.

* பூமராங் நெபுலா – பால்வீதி மண்டலத்திலேயே மிகக் குளிர்ச்சியான இடம் இதுதான். பூமியிலிருந்து 5 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிற இதன் வெப்பநிலை மைனஸ் 272 டிகிரி செல்சியஸ். இது ஹைட்ரஜனையே உறைய வைக்கிற அளவு குளிர்!

* ஒரு விண்கல்லில், சூரிய மண்டலத்தின் வயதை விடவும் பழமையான வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

* யுரேனஸ் சூரியனை ஒருமுறை சுற்றி வர 84.01 ஆண்டுகள் ஆகின்றன.

* ‘ஈபே’ இணைய தளத்தில் விண்கல் கூட விற்கிறார்கள்!

* எரிமலை வெடித்துச் சிதறும்போது, மின்னல் கீற்றுகள் போன்ற ஒளி வெப்பமும் உள்ளிருந்து வெளிப்படும்.

* பெரும்பாலான ஆப்ரிக்க யானைகளின் காதுகள், அக்கண்டத்தின் வரைபடம் போலவே அமைந்துள்ளன!

* சிவப்பு க்ரேயானில் மட்டுமே 29 ஷேடுகள் உள்ளன.

* சில வகை மீன்கள் தரையில் நடக்கவும் செய்யும்!

* ஜப்பானில் ஸ்கூபா டைவர்களுக்காகவே கடலுக்கு அடியில் 33 அடி ஆழத்தில் ஒரு போஸ்ட் பாக்ஸ் வைத்திருக்கிறார்கள். அவர்கள் கடலடியில் இருந்தே போஸ்ட் கார்டு அனுப்ப முடியும்!

* டால்பின்களால் நீருக்கு அடியில் 24 கிலோமீட்டர் தொலைவிருந்து கூட ஒலியைக் கேட்க முடியும்.

* காட்டெருமையையும் பசுவையும் கலப்பினமாக்கி   ஙிமீமீயீணீறீஷீ   என்ற புதுவகை விலங்கு உருவாக்கப்பட்டுள்ளது. பாதி எருதும் பாதி பசுவும் கலந்த புதுமை!

* முன்னொரு காலத்தில் வௌவால் எச்சத்திலிருந்து துப்பாக்கிக் குண்டுகளுக்கான மருந்து தயாரிக்கப்பட்டிருக்கிறது.

* முள்ளம்பன்றிகளால் நீரில் மிதக்கவும் முடியும்.

* தொடும்போது மட்டுமல்ல… பலத்த காற்று, அதிர்வு மற்றும் வெப்பம் போன்ற காரணங்களாலும் தொட்டாற்சிணுங்கி செடிகள் சட்டென வாடிவிடும்.

* வைரத்துக்கு அடுத்து கடினத்தன்மை கொண்ட தாது  கோரண்டம். இதை விடவும் 90 மடங்கு கடினத்தன்மை கொண்டது வைரம்!

* அதிகபட்சமாக 15 ஆயிரம் அடி உயரமுள்ள தென்மேற்கு சீன மலைப் பகுதியில் கூட மரங்கள் வளர்கின்றன.

* கி.பி.829 மற்றும் 1010ம் ஆண்டுகளில் நைல் நதி உறைந்து கிடந்தது.

* பொதுவாக முற்றிய தேங்காய்கள் இரவு நேரத்திலேயே மரத்திலிருந்து விழுகின்றன.

* முதல் பலூன் பந்தயம் பாரிஸில் 1906ம் ஆண்டு நடைபெற்றது. 7 நாடுகளிலிருந்து 15 போட்டியாளர்கள் பங்குகொண்டனர். 22 மணி 28 நிமிடங்களில் 635 கிலோமீட்டர் பறந்து சென்ற அமெரிக்க போட்டியாளருக்கு பரிசு கிடைத்தது. இதே காலகட்டத்தில்தான் ரைட் சகோதரர்கள் ஆகாய விமானத்தை மேம்படுத்தினர்.

* ஜப்பானில் உள்ள ஷிமீவீளீணீஸீ சுரங்கப்பாதை 53.9 கிலோமீட்டர் நீளமானது. இதுவே இப்போது பயன்பாட்டில் உள்ள நீளமான, ஆழமான ரயில் சுரங்கப்பாதை. இதில் 23.3 கிலோமீட்டர் தூரம் கடல் படுகைக்கும் கீழே உள்ளது.

* இந்தியாவில் தோன்றிய தாமரை மலர், கி.மு. 6ம் நூற்றாண்டில் எகிப்து சென்றிருக்கிறது. அங்கு தாமரையின் விதை, வேர், இலை என அனைத்துமே உணவாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

* அதிக அளவு புரதம் கொண்ட கடல் உணவுகளை (ஷிமீணீயீஷீஷீபீ ஷிtமீஷ்) சாப்பிடுவதாலேயே, ஜப்பானிய சுமோ வீரர்கள் ‘அந்த’ உருவத்தைப் பெறுகிறார்கள்!

* இங்கிலாந்தைச் சேர்ந்த ஜில் ஸ்காட் என்பவரே, கார் ரேஸில் மணிக்கு 193 கிலோமீட்டர் வேகத்தை எட்டிய முதல் பெண்மணி. இந்நிகழ்வு 1928ல் புரூக்லேண்ட்ஸில் நடந்தது.

* பனிக்கட்டிகளில் 90 சதவீதம் காற்றுதான்!

* உலகின் மிக லேசான பாலூட்டி  ‘பம்பிள்பி பேட்’ என்கிற வௌவால். இதன் எடை 2 ஜெம்ஸ் மிட்டாய்கள் அளவுக்குத்தான் இருக்கும்!

* அந்துப்பூச்சிகளால் பல கிலோ மீட்டர் தொலைவிலிருந்தும் பரஸ்பர வாசனையை உணர முடியும்.

* தன் சிலையை தானே உருவாக்கியிருக்கிறார் ஹானானுமா மஸாகிச்சி என்ற ஜப்பானிய சிற்பி. தன்னுடைய முடி, பற்கள் மற்றும் நகங்களையே பயன்படுத்தி அச்சு அசலாக அவரையே செய்தது தான் விசேஷம்!

* சில வகை தவளைகளால் 50 அடி உயரம் கூட காற்றிலே மிதக்க முடியும்.

* சில நத்தைகள் 3 ஆண்டுகள் வரை கூட தொடர்ந்து உறங்கும்.

* வெட்டுக்கிளிகள் மனிதனைப் போல பெரிய உருவமாக இருந்தால், அவை ஒரே தாவலில் ஒரு கூடைப்பந்து மைதானத்தையே கடந்து விடும்!

* அலிகேட்டர் முதலைகள் 80 ஆண்டுகள் வரை வாழும்.

* டிராகன்ஃப்ளை என்றதும்பியால் ஒரே நேரத்தில் அனைத்துத் திசைகளிலும் பார்க்க முடியும்.

* குதிரைகள் விரல்நுனிகளில் அழுத்தம் கொடுத்தே ஓடுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top