Home » படித்ததில் பிடித்தது » பொன் மொழிகள் – 3
பொன் மொழிகள் – 3

பொன் மொழிகள் – 3

அறிஞர்களின் பொன் மொழிகள்:-* எளிமையும் தூய்மையும் ஒருவனை உயர்ந்த மனிதனாக உயர்த்துகின்றன. அநீதியானது மனிதர்களிடையே சச்சரவுகளை விளைவிக்கிறது. நீதியோ தோழமையை வளர்க்கிறது.* அறிவுள்ளவன் தன் செல்வத்தை மூளையில் வைத்திருக்க வேண்டும். தன் இதயத்தில் வைத்திருக்கக் கூடாது.

* உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமானால் யாருக்காகவும் காத்திருக்காதீர்கள். நேரத்தை வீணாக்காதீர்கள்.

* சட்டங்கள் ஏழைகளைக் கசக்கிப் பிழிகின்றன. பணக்காரர்களே சட்டத்தை ஆட்சி செய்கின்றனர்.

* அறிவாளிகள் பணத்திற்கு அடிமையாக இருப்பதால் தம் அறிவை விலை கூறுகின்றனர்.

* வேதனையைச் சகித்துக் கொண்டவனே எப்போதும் வெற்றி பெறுவான். ஒருவனிடம் அச்சம் கொண்டால் அவனிடம் அன்பு கொள்ள முடியாது.

* ஒருவனுக்கு நீ செய்த உதவிகளை அவனிடம் அடிக்கடி நினைவூட்டிக் கொண்டிருப்பது அவனைப் பழிப்பது போலாகும்.

* சோம்பலும் சோர்வு கொண்டு நூறு ஆண்டு வாழ்வதை விட ஒருநாள் பெரு முயற்சியோடு வாழ்வது மேலானது.

* பண்பில்லாத நண்பனை விட, பண்புள்ள பகைவன் மேலானவன்* துன்பம் இல்லாமல் இன்பத்தை அடைந்தவனுக்கு அவனடைந்த இன்பமே ஒருநாள் துன்பமாகும்.* இன்பத்தில் பங்கெடுத்து துன்பத்தில் தூரச் செல்பவன் உறவை துண்டிப்பதே மேல்.

* நண்பனின் உடலில் ஒரு பாகமாக இரு அப்போதுதான் அவனுக்கு ஏற்படும் காயம் உனக்கும் வலிக்கும்.

* கால்விரல் இல்லை என்பதற்காக கவலைப்படாதே காலே இல்லாதவனைப் பார்த்து நீ ஆறுதல் அடைந்து கொள்.

* நீ வாழ்க்கையை நேசிக்கின்றாயோ அப்படியானால் நேரத்தை வீணாக்காதே ஏனெனில் வாழ்க்கை நேரத்தால் உருவாக்கப்பட்டது.

* இளமையில் தோல்வியடைந்தால் கவலை கொள்ளாதீர். அடுத்தடுத்து முயன்று வெல்லுங்கள். இளமை வெகுவிரைவில் கடந்து சென்றுவிடும்.

* நன்மை செய்ய பிறந்த நீ நன்மை செய்யாவிட்டாலும் தீமையாவது செய்யாதிரு.

* பிறர்படும் துன்பத்தை கண்டு கண்ணீர் விடுவதை விட அவர்களது கண்ணீரை துடைக்க ஏதாவது செய்வதே மேல்.

* ஒரு மணிநேரத்தில் ஒரு சிறந்த நண்பனை இழந்து விட முடியும். ஆனால் ஓர் ஆண்டு சென்றாலும் ஓர் நல்ல நண்பனை பெற முடியாது.

* நம்பியது தோல்வியடையும் போது எல்லாமே நிலைமாரி விட்டதாக தோன்றும் ஆனால் தோல்வியிலும் முயற்சியை கைவிடக் கூடாது.

* எல்லாமே போய்விட்டதென கவலைப்படாதே உன்னிடம் எவராலும் வெல்ல முடியாத உள்ளம் இருக்கிறது.

* குறைவாக சிந்திக்கும் மனிதர்கள் தான் அதிகமாக பேசுவார்கள்.

* உலகத்தை நேசிக்க கற்றுக் கொள் ஆனால் ஒருவரையும் ஆழமாக நம்பி விடாதே.

* நீ வாழ்க்கையில் உயரும் போது மனிதர்களிடம் சுமுகமாக இரு ஏனெனில் நீ கீழே இறங்கும் போது அவர்களை சந்திப்பாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top