Home » படித்ததில் பிடித்தது » மீனாட்சி அம்மன் கோயிலின் அற்புதங்கள்!!!
மீனாட்சி அம்மன் கோயிலின் அற்புதங்கள்!!!

மீனாட்சி அம்மன் கோயிலின் அற்புதங்கள்!!!

வரலாறும், புராணமும்!

கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து அழகிய நகரமாக்கும்படி பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றிக் கூறியதாக புராணம் கூறுகிறது. அப்போது கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தை கண்டறிந்த மன்னன் முதலில் மீனாட்சி அம்மன் கோயிலையும், பின் மதுரை நகரத்தையும் நிர்மாணித்ததாக சொல்லப்படுகிறது. மேலும் கோயிலின் பல்வேறு அங்கங்கள், பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு மன்னர்களால் கட்டப்பட்டிருப்பதாக வரலாறு சொல்கிறது.

கோயில் அமைப்பு!

15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோயில் 8 கோபுரங்களையும், 2 விமானங்களையும் கொண்டுள்ளது. இத்திருக்கோயில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. மேலும் ஒரு ஏக்கர் பரப்பளவில் கோயில் வளாகத்தில் பொற்றாமரைக்குளமும் அமையப்பெற்றுள்ளது.

கோபுரங்கள்!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மொத்தம் 10 கோபுரங்கள் உள்ளன. இவற்றில் 1559-ஆம் ஆண்டு கட்டப்பட்ட தெற்கு கோபுரம் 170 அடி உயரத்தில் உயரமான கோபுரமாக திகழ்கிறது. மேலும் கிழக்கு பக்கத்தில் உள்ள கோபுரம் 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதுடன் கோயிலின் பழமையான கோபுரமாகவும் அறியப்படுகிறது.

கருவறை விமானம்!

இக்கோயிலின் கருவறை விமானமானது, இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிம்ம உருவங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.

பொற்றாமரைக்குளம்!

மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்திலுள்ள பொற்றாமரைக்குளம் செவ்வக வடிவில்,165 x 120 அடி (37 மீட்டர்) பரப்பளவில் அமைந்துள்ளது. பொன் + தாமரை + குளம் என பொருள்படும் வகையில் பொற்றாமரைக்குளம் என்று இது அழைக்கப்படுகிறது. இந்தக் குளத்திற்கு ஞான தீர்த்தம், முக்தி தீர்த்தம், உத்தம தீர்த்தம், ஆதி தீர்த்தம் போன்ற பெயர்களும் வழங்குகின்றன. இதன் வடக்கு கரையில் உள்ள தூண்களில் சங்கப் புலவர்களின் உருவங்கள் காணப்படுகின்றன. அதோடு தென்கரை மண்டபச் சுவர்களில் திருக்குறள் பாக்கள் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், சுற்றுச் சுவர்களில் திருவிளையாடல் புராணக் கதைகள் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன. பல நூறு வருடங்களுக்கு முன் இந்த பொற்றாமரைக் குளத்தில் கிடைக்கப்பெற்ற படிக லிங்கம், இன்றும் மதுரை ஆதீனத்தில் வழிபாட்டில் உள்ளது.

கவின் கொஞ்சும் மண்டபங்கள்!

அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், முதலி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கம்பத்தடி மண்டபம், கிளிக்கூட்டு மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம், சேர்வைக்காரர் மண்டபம் போன்ற கவின் கொஞ்சும் மண்டபங்கள் கோயிலில் அமைந்துள்ளன. அதோடு கோயிலின் கிழக்குக் கோபுரத்திற்கு எதிரே 124 சிற்பத்தூண்கள் அடங்கிய புது மண்டபத்தில் தற்போது சிறு வணிகக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மீனாட்சி அம்மன் சந்நிதியின் முன்பகுதியாக எட்டு சக்தி (அஷ்டசக்தி) மண்டபம் உள்ளது. இவையெல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போல கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் 985 தூண்கள் கொண்டு அமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் அழகுடனும், மிளிர்ச்சியுடனும் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.

ஆயிரங்கால் மண்டபம்!

கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் அவருடைய அமைச்சர் அரியநாத முதலியாரால் ஆயிரங்கால் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. எந்தத் திசையிலிருந்து பார்த்தாலும் நேராக இருப்பது போன்ற தூண்களைக் கொண்ட இந்த மண்டபத்தில் 985 தூண்கள் அமைந்துள்ளன.

நடராஜர் சிலை!

மீனாட்சி அம்மன் கோயிலில் சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் குடிகொண்டுள்ள சிவபெருமான், சொக்கநாதர் என்ற பெயரிலும் அறியப்படுகிறார். மற்ற எல்லா சிவத்தலங்களிலும் வலது காலை தூக்கி தாண்டவமாடும் கோலத்தில் இருக்கும் நடராஜர் சிலை இங்கு இடதுகாலை தூக்கி ஆடும் தோற்றத்தில் காணப்படுகிறது.

மீனாட்சி அம்மன் விக்கிரகம்!

கருவறையில் மீனாட்சி அம்மன் இரண்டு திருக்கரங்களுடன் ஒரு கையில் கிளியை ஏந்தி அருட்காட்சி தருகிறார். இந்த விக்கிரகம் மரகதக்கல்லால் ஆனது என்பதால் மரகதவல்லி என்ற பெயரிலும் மீனாட்சி அம்மன் அறியப்படுகிறார். மேலும் அங்கயற்கண்ணி, தடாதகை, கோமளவல்லி, பாண்டியராஜகுமாரி, மாணிக்கவல்லி, சுந்தரவல்லி என்ற பெயர்களிலும் அம்மன் அழைக்கப்படுகிறார்.

விஷ்ணு நடத்திவைத்த திருமணம்!

விஷ்ணு பகவான் தன் தங்கை மீனாட்சியை சிவபெருமானுக்கு மணமுடித்து வைக்கும் காட்சி சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

17-ஆம் நூற்றாண்டு ஓவியம்!

கோயில் சுவர்களில் காணப்படும் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுவர்ச் சித்திரம்.

கோயில் கோபுரத்தில் காணப்படும் சிற்ப வேலைப்பாடுகள்.

மகாபாரத காட்சி!

அர்ஜுனனும் அவனுக்கு தேரோட்டியாக இருந்த கிருஷ்ணரும் ரதத்தில் செல்வது போன்ற மகாபாரத காட்சி.

மீனாட்சி அம்மன் கோயில் யானை வெளிநாட்டு பெண் ஒருவருக்கு ஆசிர்வாதம் செய்யும் காட்சி.

நாயன்மார்களில் சிறப்புடன் அறியப்படும் அப்பர், சம்பந்தர் மற்றும் சுந்தரரின் சிலைகள்.

விநாயகர் சந்நிதியில் காட்சியளிக்கும் பிள்ளையாரும், வழிபடும் பக்தர்களும்.

கோயில் முழுக்க மின் விளக்குகளால் அலங்கரிக்கப்படிருப்பதும், அதன் பிம்பம் பொற்றாமரைக்குளத்தில் விழுவதும் என மனதை கொள்ளைகொள்ளும் காட்சி.

மீனாட்சி அம்மன் கோயிலின் மாதிரி வடிவம் பக்தர்களுக்காக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

கைலாயத்தை தூக்கும் இராவணனின் அற்புத சிற்பம்.

கோயிலில் உள்ள நந்தி மண்டபமும், கொடிமரமும்.

கோயிலில் உள்ள அனுமார் சந்நிதியும், அனுமார் சிலையும்.

கோயில் வளாகத்தில் காணப்படும் யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட சிலைகள்.

கோயில் கோபுரங்களில் காணப்படும் பிரம்மாவின் சிலை.

மீனாட்சியம்மன் கோயிலில் காணப்படும் மகாகாளியின் வடிவம்.
மீனாட்சியம்மன் கோயிலில் காணப்படும் ஊர்த்துவதாண்டவரின் அழகிய சிற்பம்.

மஞ்சள் கோலத்தில் காட்சியளிக்கும் சரபேசுவரர் சிலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top