Home » தன்னம்பிக்கை » அறிவுக்கு விருந்தாகும் அறிவுரைகள்!!!
அறிவுக்கு விருந்தாகும் அறிவுரைகள்!!!

அறிவுக்கு விருந்தாகும் அறிவுரைகள்!!!

அறிவுக்கு விருந்தாகும் சில அறிவுரைகள்

1. உழைப்பு உடலை வலிமையாக்கும். கஷ்டம் மனதை வலிமையாக்கும் -செனகா.

2. கடினமான உழைப்பே சிறந்த அதிர்ஷ்டமாகும் -டெம்பஸ்

3. நம்பிக்கை இல்லாத இடத்தில் அன்பு இருக்காது.

4. திறமைதான் ஏழையின் மூலதனம் -எமர்சன்

5. பசியுடையவனின் புன்னகை, செயற்கையாயிருக்கும்.

6. பெரிய பெரிய சாதனைகளனைத்தும் செய்து முடிக்கப்படுவது ஆழ்ந்த மௌனத்தினால்தான் -மேலை நாட்டறிஞர்

7. மன அமைதியோடு இருப்பவனுக்கு என்றும் ஆபத்து இல்லை -லாவோட் ஸே

8. அறிவாளி, ஒருபோதும் சோம்பேறிகளுடன் நேரத்தை வீணடிக்க மாட்டான்.

9. அரிய செயலைச் செய்து முடிப்பது வலிமையால் அல்ல; விடாமுயற்சியால்தான் -ஜேம்ஸ் ஆலன்

10. கீழ்த்தரமான தந்திரத்தால் இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்து விட முடியாது -விவேகானந்தர்

11. நேரப்படி வேலையைச் செய்கிறவர்கள் முறையான சிந்தனை வளத்தைப் பெற்றவர்கள் – பிட்டின்

12. துணிவுமிக்கவர்களின் அருகிலேயே எப்போதும் அதிர்ஷ்டம் நிற்கிறது. – வெர்ஜில்

13. கண்ணைக் குருடாக்கி, காதைச் செவிடாக்கி, மூளையை மழுங்கச் செய்கிறது ஆசை!

14. எழுத்துப் பயிற்சி மூலம் கையெழுத்தைத் திருத்துவது போல, உண்மை பேசும் பழக்கமும் பயிற்சியினால்தான் வரும் -ஜான் ரஸ்கின்

15. அளவுக்கு மீறிய சுதந்திரம் ஆபத்தானது.

16. ஒவ்வொரு நிமிடமும் நல்ல பண்புடன் வாழ்வதில் அக்கறையுடன் இருந்தாலே, இவ்வுலகில் எந்நேரமும் மகிழ்ச்சியுடன் வாழலாம் – பிராங்கிளின்

17. எப்போதும் மனம் தூய்மையாக இருந்தால், முகம் புத்துணர்ச்சியுடன் பிரகாசிக்கும் – எமர்சன

18. நாளை நான் வாழ்வேன் என்கிறான் மூடன். இன்று என்பதும் காலம் கடந்ததே. அறிவாளிகள் நேற்றே வாழ்ந்து விட்டனர். -மார்ஷியல்

19. அறிவு தலைக்கு கிரீடம்! அடக்கம் காலுக்கு செருப்பு!

20. அடக்கம் என்பது ஓர் அணிகலன் மட்டுமல்ல; அது ஒழுக்கத்தின் பாதுகாப்பும் ஆகும் -அடிசன்

21. நோயைவிட அச்சமே அதிகம் கொல்லும்

22. பிரார்த்தனை என்பது கடவுளிடம் ஏதாவது கேட்பதல்ல. அது ஆன்மாவின் ஏக்கமாகும்.

23. நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால், நம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும். நாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால், நம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும் – ஆப்ரகாம் லிங்கன

24. முழுக்க முழுக்க சர்க்கரையாக இருந்து விடாதே; உலகம் உன்னை விழுங்கி விடும். -பாரசீகம்

25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது -ஹென்றி போர்டு

26. எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள். -இங்கிலாந்து.

27. உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன். -யேசுநாதர்.

28. ஒரு வெள்ளாட்டை முன்னால் இருந்தும் குதிரையை பின்னால் இருந்தும் முட்டாளை எந்த பக்கத்திலிருந்தும் நெருங்கக் கூடாது

29. எவ்வளவு தான் பந்த பாசமானாலும் இடையில் ஒரு வேலி மெலிசா இருந்துகிட்டே இருக்கணும்.

30. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

31. அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது.

32. நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌கிடைத்தே தீரும்.

33. வாழ்வில் உன் தோல்வியைக் கண்டு மகிழும் ஒருவரையேனும் நீ பெற்றிருப்பின், உன் வாழ்வின் மிக‌ப் பெரிய முதல் தோல்வி அதுவாகவே இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top