லக்ஷ்மணன் ஒரு குடும்பஸ்தன், அதீத கஷ்டத்தில், மன உளைச்சலில்,
குருஜியைப் பார்க்க வந்தான்.
குருஜி லக்ஷ்மணனை என்னவென்று விசாரிக்கவும், தன் பணக்கஷ்டத்தையும், தன் இயலாமையால் தன்னை தன் வீட்டில் உள்ளோர் கேவலமாக நடத்துவதையும் சொல்லிப் புலம்பினான்.
அப்போது நேநீர் நேரமாதலால், குருஜியின் ஆசிரமப் புதியப் பணியாள் ஒருவர் தேநீர் கொண்டு வந்தார்.
கொண்டு வந்தவர் சற்று குள்ளமாகவும், கறுப்பாகவும், அம்மைத் தழும்போடும் இருந்ததைக் கண்டு லக்ஷ்மணன் முகம் சுளித்தார்.
தேநீர் அருந்தியப் பின், “குருஜி, நீங்கள் ஏதாவது உதவுங்களேன்..”என்று கேட்ட லக்ஷ்மணனை குருஜி, “நீ அந்த பணியாளிடம் சென்று முதலில் மன்னிப்புக் கேட்டு வா..!”
“நான் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்..!”
“நீ அவனைப் பார்த்த் பார்வைக்காக..!”
லக்ஷ்மணன் மன்னிப்பு கேட்டப் பின் குருஜி, “நீ மன்னிப்பு கேட்டதற்கு அவன் என்ன சொன்னான்?”
“ஒண்ணும் சொல்லவில்லை குருஜி, திமிராய் அவன் வேலையைப் பாத்துக் கொண்டே இருந்தான்..!”
குருஜி சொன்னார், “அன்பனே, நீ உன் கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்.
அவனுக்கு காது கேட்காது.
உன்னை மன்னிப்பு கேட்கச் சொன்னது உனக்காக.
நீ வீட்டுச் சாப்பாட்டின் ருசியை மறந்து விட்டாய். இரவு உன் மகன் உன்னருகே உன்னை கட்டிக்கொண்டு தூங்கும் சொர்க்கத்தை உணரவில்லை.
இந்த பணம் மரியாதை எல்லாம் நிரந்தரம் அல்ல..! அமைதியாய் இரு..! காலம் உன் கஷ்டத்தைப் போக்கும். சுற்றி இருக்கும் இன்பத்தை நோக்கு, அனுபவி..!”
குருஜியிடம் அழுது அழற்றி, ஆசி பெற்று விடைபெற்றான் லக்ஷ்மணன்.