மூங்கில் அரிசி:
மூங்கில் 60 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும்.இந்த மூங்கில் பூக்கள் மூங்கில் நெல்லை விளைவிக்கின்றது.
மூங்கில் அரிசி பற்றி நம்மில் பலபேர் கேள்விப்பற்றிருப்போம், சில பேர் மட்டும் தான் பார்த்திருப்போம், அதில் ஒரு சிலர் மட்டுமே அதை ருசித்திருப்போம்.அந்த ஒரு சிலரில் நாமும் என்பதில் மகிழ்ச்சி.
காடுகளில் வாழும் பழங்குடி மக்களின் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணமான உணவு வகையில் இந்த மூங்கில் அரிசியும் முக்கியமான ஒன்று.
மூங்கிலரிசியைச் சமைத்து சாப்பிட்டு வர உடல் இறுகி உடல் திடம் பெரும்.உடலில் நோய் ஏதிர்ப்பு சக்தியை உருவாக்குவதால் நோய்கள் நம்மை அண்டாது.
சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்தவர்கள் கூட சீரான உடலமைப்பை பெற மூங்கில் அரிசி உதவும்.
மக்கட்பேறு உருவாக்குவதில் கூட முக்கிய பங்கு வகிக்கிறது.பழங்குடி மற்றும் மலைவாழ் மக்களில் மக்கட்பேறு இல்லாமல் யாரும் இருக்க மாட்டார்கள் இதற்கு மூங்கில்அரிசியும் ஒரு காரணம் .
” மூங்கில் பூத்தால் வெள்ளாமை பொய்க்கும் ” என்று சொல்வார்கள் அதன் மெய் பொருள் மூங்கில் அரிசியை எலிகள் சாப்பிடுவதால் ,எலிகள் வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் குட்டிகளை ஈனும், அதனால் எலிகள் கூட்டம் பெருகும்.
பல மடங்காக பெருகி இருக்கும் எலிகள் கூட்டம் அருகில் இருக்கும் வயல்களில் உள்ள வெள்ளாமையை உண்ண சென்று விடும்.
அதனால் அந்த வருடம் விவசாயம் வழக்கத்தை விட அதிக சேதாரத்தை சந்திக்கும், அதனால்தான் மூங்கில் பூத்தால் வெள்ளாமை பொய்க்கும் என்று சொல்கின்றார்கள்.