Home » 2016 » June » 12

Daily Archives: June 12, 2016

வாழையின் பயன்கள்!!!

வாழையின் பயன்கள்!!!

வாழையின் பயன்கள் அன்றாட உபயோகம் மட்டுமல்ல, மருத்துவப் பயனும் நிறைந்த தாவரம் வாழை. பல்வேறு உடல்நல பாதிப்புகள், குறைவுகளுக்கு வாழை உதவுகிறது. தீக்காயம், வெந்நீர் காயம், சூடான எண்ணைய்பட்ட காயம் போன்ற இடத்தில் குருத்து வாழை இலையைச் சுற்றிக் கட்டுப் போடலாம். வாழை இலை அல்லது பூவைக் கசக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினாலும் பலன் இருக்கும். காயங்கள், தோல் புண்கள் உள்ள இடத்தில் தேங்காய் எண்ணையை மஸ்லின் துணியில் நனைத்து, புண்கள் மேல் போட்டு அவற்றின் மீது ... Read More »

வில்வம்!!!

வில்வம்!!!

மருத்துவக் குணங்கள்: வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் மரம். இமயமலையின் அடிவாரத்திலிருந்து ஜீலம், பலுசிஸ்தானம் கீழ்பகுதிவரையிலும் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியிலும் பரந்து விரிந்து காணப்படுகிறது. இலையுதிர் மரவகையைச் சார்ந்தது. கனி தொடர்பான, முட்கள் காணப்படும் 15 மீட்டர் வரை உயரும். இலை கூட்டிலை மூவிலை அல்லது ஐந்து இலை கொண்டது இதை மகாவில்வம் என்பார்கள். கூட்டிலையின் சிறிய இலைகள் நீள் வட்டமானது, ஈட்டி வடிவமானது, இலைப்பரப்பு வழவழப்பாக ஒளிரும் தன்மை உடையது. இலையடி ஆப்ப வடிவமானது அல்லது ... Read More »

மருதோன்றி மருத்துவக் குணங்கள்!!!

மருதோன்றி மருத்துவக் குணங்கள்!!!

மருத்துவக் குணங்கள்: மருதோன்றி இலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆபிரிக்காவிலும், ஆசியாவிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது முடியை நிறம் மாற்றவும், அதன் பூவில் இருந்து நறுமணபொருள் தயாரிக்கவும் பயன்பட்டு வருகிறது. எகிப்தின் மம்மியில் சுற்றப்பட்ட துணிகள் மருதோன்றி இலை சாரில்  நனைத்து  தயார் செய்யப்பட்டிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறைத்தூதர்  முகமது நபி அவர்களுக்கு மருதோன்றி பூவில் இ௫ந்து செய்யப் பட்ட வாசனை தைலம் மிகவும் பிடித்ததாகவும் ஒரு செய்தி உண்டு. இந்தியாவிலும் இது ஒரு மூலிகை அழகு சாதன பொருளாக ... Read More »

மூங்கில் அரிசி!!!

மூங்கில் அரிசி!!!

மூங்கில் அரிசி: மூங்கில் 60 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும்.இந்த மூங்கில் பூக்கள் மூங்கில் நெல்லை விளைவிக்கின்றது. மூங்கில் அரிசி பற்றி நம்மில் பலபேர் கேள்விப்பற்றிருப்போம், சில பேர் மட்டும் தான் பார்த்திருப்போம், அதில் ஒரு சிலர் மட்டுமே அதை ருசித்திருப்போம்.அந்த ஒரு சிலரில் நாமும் என்பதில் மகிழ்ச்சி. காடுகளில் வாழும் பழங்குடி மக்களின் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணமான உணவு வகையில் இந்த மூங்கில் அரிசியும் முக்கியமான ஒன்று. மூங்கிலரிசியைச் சமைத்து சாப்பிட்டு வர ... Read More »

விவேகானந்தரின் சிந்தனை துளிகள்!!!

விவேகானந்தரின் சிந்தனை துளிகள்!!!

* உங்கள் தவறுகளைப் பெரும்பேறாக நினையுங்கள். அவை நம்மை அறியாமலே நமக்கு வழிகாட்டும் தெய்வங்கள் என்றால் மிகையில்லை. * அழுகை பலவீனத்தின் அறிகுறி. அடிமைத்தனத்தின் அறிகுறி. தோல்விகள் இல்லாத வாழ்க்கையால் பயனேதும் இல்லை. போராட்டம் இல்லாத வாழ்க்கை சுவையாக இருக்காது. * தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. உன்னைத் தவிர யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது. * கோபப்படும் மனிதனால் அதிக அளவோ அல்லது செய்யும் பணியைச் சிறப்பாகவோ செய்ய முடியாமல் போய் விடும். ... Read More »

Scroll To Top