Home » படித்ததில் பிடித்தது » தியானம் செய்வதன் நன்மைகள்!!!
தியானம் செய்வதன் நன்மைகள்!!!

தியானம் செய்வதன் நன்மைகள்!!!

தியானம் செய்வதால் கிடைக்கும் உடல் மற்றும் உள்ளம் சார்ந்த நன்மைகள்!!!

1. தியானத்தால் நெறிமுறைகளுடன் இருக்கும் போது, நம்மால் ஒரு விஷயத்தை நேரடியாகப் பார்ப்பதை விடவும், ஆழமாகப் பார்த்து அலச முடியும். சாதாரணமாக இருக்கும் ‘பிளைன்ட் ஸ்பாட்ஸ்’ எனப்படும் மனதின் இருண்ட பகுதிகளை வெற்றி கொள்ள நெறிமுறைகள் உதவும் என்று ஜர்னல் ஆஃப் சைக்காலஜிக்கல் சயின்ஸின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் நிதர்சனத்தைத் தாண்டி, நாம் செய்யும் தவறுகளை அவை வெளிப்படுத்தவும் அல்லது குறைக்கவும் செய்கின்றன.

2.ஜர்னல் ஆஃப் ஹெல்த் சைக்காலஜி என்ற இதழில் கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஆய்வின் முடிவில், தியானத்தால் மனதை நிறைவாக வைத்திருப்பது குறைவான மன அழுத்த உணர்வைத் தருவதோடு மட்டுமல்லாமல், மன அழுத்தத்தை தூண்டும் கார்டிசோல் ஹார்மோன் குறைவாக சுரப்பதுடனும் தொடர்பு கொண்டுள்ளது.

3. 2011 ஆம் ஆண்டில் அன்னால்ஸ் ஆஃப் ரியூமேட்டிக் டிசீஸ் ஜர்னலால் (Annals of Rheumatic Disease) செய்யப்பட்ட ஆய்வுகள், தியான நெறிமுறைகளுக்கான பயிற்சியின் மூலம் நாள்பட்ட மூட்டுவலியால் பாதிக்கப்பட்டவர்களின் வலி குறையாவிட்டாலும், அவர்களுக்கு வரும் மன அழுத்தம் மற்றும் களைப்பை குறைக்க முடிகிறது என்று சொல்கிறது.

4. தியான வழிமுறையில், உடல்-மனம் ஆகியவற்றிற்கு ஒருங்கிணைந்த பயிற்சியளிப்பதன் மூலம் மன ரீதியான நோய்கள் வராமல் மூளையைப் பாதுகாக்க முடியும். தியானப் பயிற்சிகள் செய்வதன் மூலம் மூளைக்கு அக்ஸோனல் டென்சிட்டி (axonal density) என்ற சிக்னல் தொடர்புகள் செல்வது அதிகரிக்கிறது. அதேப்போல சின்குலேட் மூளைப் பகுதியின் முன்னால் உள்ள ஆக்ஸன்களைச் சுற்றிலும் மையிலின் என்ற பாதுகாக்கும் தசையின் அளவும் அதிகரிக்கிறது.

5. மனது நிறைந்த தியானம் செய்யும் போது நாம் இசையின் மீது வைக்கும் கவனம் மேம்படுகிறது. இதன் மூலம் நாம் எதைக் கேட்கிறோமோ அதை மிகவும் அனுபவித்துக் கேட்டு மகிழும் அனுவத்தைப் பெறுகிறோம் என்று ஜர்னல் சைக்காலஜி ஆஃப் மியூசிக் தெரிவிக்கிறது.

6.மனம் நிறைந்த தியானமானது, உடலின் விழிப்புணர்வு, சுய-விழிப்புணர்வு, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் கவனத்தைக் கட்டுப்படுத்துதல் போன்ற நான்கு மூலக்கூறுகளை தூண்டி நமக்கு உதவுவதாக பர்ஸ்பெக்டிவ்ஸ் ஆஃப் சைக்காலஜிக்கல் சயின்ஸ் ஆய்வு தெரிவிக்கிறது.

7.மனம் நிறைந்த தியானத்தை எப்படிச் செய்ய வேண்டும் என்று பள்ளியின் திட்டங்கள் வழியாக டீன்-ஏஜ் சிறுவர்-சிறுமியருக்கு சொல்லிக் கொடுப்பதன் மூலம், அவர்களுடைய மன அழுத்தம், பயம் மற்றும் அச்சத்தைத் தவிர்க்க முடியும் என்று லியூவென் பல்கலைக்கழகத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.

8.உடலில் தேவையில்லாமல் இருக்கும் சதையில் சில கிலோக்களை குறைத்து ஆரோக்கியமான எடையைப் பெற விரும்புகிறீர்களா? உங்களுக்கான சிறந்த நண்பனா மனம் நிறைந்த தியானம் உள்ளது. அமெரிக்க உளவியல் அமைப்பினால் நடத்தப்பட்ட நுகர்வோர் ஆய்வு அறிக்கைகளில் இந்த முடிவு வெளிவந்துள்ளது.

9.இறுதியாக நமக்குத் தேவையான சிறந்த விஷயத்தை நாம் காப்பாற்றிக் கொள்கிறோம். உடா பல்கலைக்கழகத்தினரால் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றில், மனம் நிறைந்த தியானப் பயிற்சி நமது உணர்ச்சிகள் மற்றும் மனநிலையை மேம்படுத்த உதவுவதால், நம்மால் இரவில் நிம்மதியாகத் தூங்க முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top