Home » 2016 » May (page 4)

Monthly Archives: May 2016

விவேகானந்தரைப் பற்றி மகாகவி பாரதியார்!!!

விவேகானந்தரைப் பற்றி மகாகவி பாரதியார்!!!

ஆஹா! சுவாமி விவேகானந்தரைப் போன்று பத்து பேர் இப்போது இருந்தால், இன்னும் ஒரு வருடத்திற்குள் இந்து தர்மத்தின் வெற்றிக்கொடியை உலகம் எங்கும் நாட்டலாம். சுவாமி விவேகானந்தர், யோசனை செய்யாத பெரிய விஷயமே கிடையாது. அவருக்குத் தெரியாத முக்கிய சாஸ்திரம் எதுவுமே கிடையாது. அவருடைய அறிவின் வேகத்திற்குத் தடையே கிடையாது. அவருடைய தைரியத்திற்க்கோ எல்லையே கிடையாது. கண்ணபிரான் கீதை உபதேசம் செய்து, எல்லா விதமான மக்களின் சந்தேகளையும் அறுத்து வேதஞானத்தை நிலைநிறுத்திய காலத்திற்குப் பிறகு, இந்துமதத்தின் உண்மைக் கருத்துக்களை ... Read More »

தீவு ஈஸ்டர் தீவு – மோய் சிலைகள்!!!

தீவு ஈஸ்டர் தீவு – மோய் சிலைகள்!!!

பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கில் அமைந்துள்ள தீவு ஈஸ்டர் தீவு. இத்தீவு ஜகோப் ரோகுவீன் எனும் டச்சு மாலுமியால் வெளியுலகுக்கு அறியபடும் பகுதியானது. ஈஸ்டர் தினத்தில் (5, ஏப்ரல், 1722) டச்சுக்காரர்கள் இத்தீவில் இறங்கியதால் ஈஸ்டர் தீவு என அழைக்கப்படுகிறது. பழைய பெயர் (Rapanui) ரபானூய். சிந்து, ஹரப்பா இப்படி வரிசையில் இது “கடைசி நாகரீகம்” என அழைக்கப்படுகிறது. இத்தீவு ஒரு யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாகும்.10000 ஆண்டுகளுக்கு முன்பு இத்தீவில் எரிமலை சீற்றம் இருந்ததாக மதிப்பிடப்படுகிறது. ஈஸ்டர் ... Read More »

அரிய தகவல்கள்:-  தெரியாதது!!!

அரிய தகவல்கள்:- தெரியாதது!!!

01. டால்பின்களுக்கு குரல்வளை கிடையாது. எனினும், காற்றைஊதி 32 விதமான ஒலிகளை வெளிப்படுத்துகின்றன. 02. அமெரிக்கக் கடல் பகுதியில் வாழும் எலக்ட்ரிக் ஈல் எனப்படும் ஒருவகை மீன் 10 மின் விளக்குகளை ஒரே சமயத்தில் எரியச் செய்யும் அளவிற்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் பெற்றவை. 03. கொலம்பியாவில் உள்ள ஷனீகர் என்ற நதியில் மீன்களே இல்லை. 04. கர்னார்டு என்ற வகை மீன் மனிதனிடம் பிடிபட்டதும் உடனே தன் கோபத்தை உறுமிக் காட்டும். ஆழ்கடலில் மட்டுமே ... Read More »

பழமொழிகள்-2……

பழமொழிகள்-2……

ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும். ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும். ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள். ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு! ஆசை வெட்கம் அறியாது. ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம். ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும். ஆடிப் பட்டம் தேடி விதை. ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும். ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும். ... Read More »

மன்னிக்க முடியாத பகை- பழி!!!

மன்னிக்க முடியாத பகை- பழி!!!

பகை- பழி ”மன்னிக்க முடியாத கோபம் யார் மீதேனும் இருக்கிறதா உங்களுக்கு? சந்தர்ப்பம் கிடைத்தால் யாரையேனும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா, நீங்கள்?” – மாணவர்களிடம் கேட்டார் ஆசிரியை. எல்லா மாணவர்களும் ஒரே குரலில் ‘ஆமாம்…’ என்றனர். அவர்களை, ஒவ்வொருவராக அருகில் அழைத்த ஆசிரியை, ”மன்னிக்கவும் மறக்கவும் முடியாத அளவுக்கு எத்தனை கோபங்கள் உள்ளன?” என்று கேட்டார். ஒருவன் ‘பத்து’ என்றான்; அடுத்தவன் ‘பதினைந்து’ என்றான்.இப்படியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொன்னார்கள். இதையடுத்து அவர்களிடம் சிறிய பை ஒன்றைக் ... Read More »

ஜாதிக்காயின் மருத்துவ குணங்கள்!!!

ஜாதிக்காயின் மருத்துவ குணங்கள்!!!

ஜாதிக்காயின் மருத்துவ குணங்கள்.. ஜாதிக்காய் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இது ஜீரணத்திற்கு மிக சிறந்த மருந்தாகும். முகத்தை அழகாக்கும்: ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும், முகம் பொலிவடையும். ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளில் பயன்படுத்தப்படுகிறது. அம்மை கொப்புளங்கள் சரியாகும்: அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை போடி செய்து உணவிற்கு முன் ... Read More »

மலர்களும் மருந்தாகும்!!!

மலர்களும் மருந்தாகும்!!!

இலுப்பைப் பூ இலுப்பை பூவை பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை பருகி வந்தால் தாது விருத்தி ஏற்படும். மேலும் தாகத்தையும் இது விரட்டியடிக்கும். ஆவாரம் பூ ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கசாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்து குளிக்க ... Read More »

பழமொழிகள்-1…

பழமொழிகள்-1…

அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. அகல இருந்தால் பகையும் உறவாம். அகல உழுகிறதை விட ஆழ உழு. அகல் வட்டம் பகல் மழை. அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை. அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன். அக்காள் இருக்கிறவரை மச்சான் உறவு. அகவிலை அறியாதவன் துக்கம் அறியான். அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு. அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான். ... Read More »

சிறந்த பொன்மொழிகள்!!!

சிறந்த பொன்மொழிகள்!!!

சிறந்த 25 பொன்மொழிகள் :- 1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது. 2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள். 3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம். 4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன். 5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். ... Read More »

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்!!!

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்!!!

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள் ! 1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும்சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள். 2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று. 3. உங்களால் எது ... Read More »

Scroll To Top