01. டால்பின்களுக்கு குரல்வளை கிடையாது. எனினும், காற்றைஊதி 32 விதமான ஒலிகளை வெளிப்படுத்துகின்றன.
02. அமெரிக்கக் கடல் பகுதியில் வாழும் எலக்ட்ரிக் ஈல் எனப்படும் ஒருவகை மீன் 10 மின் விளக்குகளை ஒரே சமயத்தில் எரியச் செய்யும் அளவிற்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் பெற்றவை.
03. கொலம்பியாவில் உள்ள ஷனீகர் என்ற நதியில் மீன்களே இல்லை.
04. கர்னார்டு என்ற வகை மீன் மனிதனிடம் பிடிபட்டதும் உடனே தன் கோபத்தை உறுமிக் காட்டும். ஆழ்கடலில் மட்டுமே இந்த வகை மீன்கள் காணப்படுகின்றன.
05. கடல் மட்டத்திற்கு கீழேயுள்ள நாடு டென்மார்க்.
06. ஒட்டகப் பால் மூன்று மாதங்களானாலும் கெட்டுப் போகாது.
07. எவரெஸ்ட் சிகரத்தில் பிராண வாயு கிடையாது.
08. மோனலிசாவிற்கு புருவம் இல்லாதது ஒரு குறை.
09. பூனையின் உரோமம் நச்சுத்தன்மை வாய்ந்தது.
10. எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ்க்கு அடிக்கடி தலைவாரிக் கொள்ளும் பழக்கம் இருந்தது.
11. நமது கண்களில் அமைந்துள்ள விழித்திரையில் 1,30,000,000 ஒளி உணர்வுள்ள செல்கள் ஒன்பது அடுக்குகளாக உள்ளன. அவை இழை நரம்புகளால் நடுவிழி நரம்புடன் இணைக்கப்பட்டுள்ளன.
12. இமயமலை பல மலைகளை உடையது. இதில் ஏழாயிரம் மீட்டருக்கு மேல் உயரம் உடைய மலைகள் 250 உள்ளன. எட்டாயிரம் மீட்டருக்கு மேல் உயரம் உடைய மலைகள் பதினான்கு இருக்கின்றன.
13. பாரத ஸ்டேட் வங்கி இந்தியாவின் முதல் அரசு வங்கியாக 1955-ம் ஆண்டு நிறுவப்பட்டது.
14. பிரிட்னி ஸ்பியர்ஸ் பாப் இசைப் பாடகிகளில் அதிகளவு சம்பாதித்த முதல் பாடகியாவார்.
15. உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் வயல் சவுதி அரேபியாவில் உள்ளது.
16. “பாரடே’ என்ற வார இதழ் மூன்று கோடியே 59 லட்சம் பிரதிகள் விற்பனையாகிறது.
17. அண்டார்டிகா கண்டத்தில் ஜலதோஷத்தை உண்டாக்கும் வைரஸ் கிருமிகளே இல்லை.
18. ஜார்ஜ் குக்கர் எனும் ஹாலிவுட் இயக்குனர் தன் 81-வது வயதில் 50-வது படத்தை இயக்கினார்.
19. அமைதியின் சின்னம் புறா ஓவியம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இதனை முதன்முதலில் வரைந்தவர் புகழ்பெற்ற ஓவியர் பிக்காசோ.
20. போலியோ எனும் இளம்பிள்ளை வாதத்திற்கு முதலில் மருந்து கண்டுபிடித்தவர் ஜோன்ஸ் சால்க் என்பவர்.
21. சர்வதேச இசை வித்வான்கள் விரும்பும் “கடம்’ மானாமதுரையில் தயாரிப்பவை.
22. இந்தியாவில் 1,25,000 கிராமங்களில் இன்னும் மின்சார வசதி கிடையாது.
23. லெனின் பரிசு பெற்ற இந்தியர் சர்.சி.வி.ராமன்.
14. இந்தியாவின் முதல் பெண் பத்திரிகையாளர் கமலா சுவாமிநாதன்.
25. குளிர்பிரதேசங்களில் பல்லிகள் இருக்காது…