சிந்தனை தத்துவங்கள் துளிகள்……
* ஆற்றில் ஓடுகின்ற நீரானது தடைகளை கண்டு நின்றுவிடாமல் வளைந்து, ஒதுங்கி ஓடுவதுபோல, நாமும் வெற்றியை நோக்கி செல்ல வேண்டும்.
* நேற்றைய கவலைகளை ஒதுக்கிவிட்டு, இன்றைய தினத்தை எப்படி பயனுடையதாக்குவது என்று சிந்திப்பவன் வாழ்வில் வெற்றி பெறுகிறான்.
* பின்விளைவுகளை பற்றி எண்ணி தயங்கிக் கொண்டு இருக்காமல், முயற்சியுடனும், முழு ஆர்வத்துடனும் செயல்படுபவர்களை வெற்றி தேடிச் செல்கிறது.
* எல்லாவற்றையும் சிறப்பாக செய்வதும், எதற்கும், எப்பொழுதும் தயாராக இருப்பதும் வெற்றியின் ரகசியம் ஆகும்.
* சரியாக திட்டமிட்டு, சுறுசுறுப்போடும், சிறப்பாகவும் செயல்படுபவர்களே பெரும் வெற்றியை அடைகிறார்கள்.
* மனம் தளராமல் நம்பிக்கையோடு உழைப்பவர்கள் நிச்சயமாக தங்களது குறிக்கோளை அடைய முடியும்.
* எந்த ஒரு சாதனையும் செய்யாமல் வாழ்க்கை முழுவதும் வாழ்வதைவிட, புகழ் சூழ்ந்த ஒரு மணி நேர வாழ்வு கூட மேன்மையானதாகும்.
* நமது லட்சியம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் நிச்சயம் நிறைவேறும்.
* வெற்றியின் உச்சிக்கு செல்ல விரும்பினால், உங்கள் பணியை கீழ் மட்டத்தில் இருந்தே சிறப்பாக செய்யுங்கள்.
* உங்களை ஓர் ஏழை என்று எப்போதும் நினைக்காதீர்கள், பணம் சக்தியல்ல, பணம் ஒன்றே வாழ்வின் இலட்சியம் என்றால் அது தவறான வழியிலேதான் தேடப்படும்.
பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஒழுக்கத்தை விற்று விடாதே.
பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம். அது இல்லாத வனுக்குக் கவலை சிலர் பணத்தை வெறுப்பதாகக் கூறுவர். ஆனால், அவர் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தை..
பணக்காரன் ஆக வேண்டுமா? அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை. தேவைகளைக் குறைத்துக் கொள்.
* நியாயத்திற்கு நன்மை உறுதி.
* வேலை செய்யாமல் பிறரிடம் பணம் பெறுவது பிச்சை எடுப்பதற்கு சமம். எவ்விதமான வேலையும் இல்லாமல் இருப்பவனைப் பார்ப்பது கூட, நமக்குத் தீமையை உண்டாக்கும்.
* ஆசைகள் வளர வளர அவனுடய தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.
* எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.
* மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.
* கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.
* அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.