நன்றிமறந்தசிங்கம்-பஞ்சதந்திரக்கதை:–
முல்லைமலர்என்றகாட்டில்விறகுவெட்டுவதற்காகசென்றுகொண்டிருந்தான்மனிதன்ஒருவன்.
அப்போதுகாட்டில்எங்கிருந்தோசிங்கத்தின்கர்ஜினைகேட்டது. பயத்துடன்ஓடத்தொடங்கினான்மனிதன்.
“மனிதனேபயப்படாதே!இங்கேவா!நான்உன்னைஒன்றும்செய்யமாட்டேன்”என்றகுரல்கேட்டது.
தயக்கத்துடன்குரல்வந்ததிசையைநோக்கிச்சென்றான்மனிதன்.
அங்குஒருகூண்டில்சிங்கம்அடைப்பட்டுஇருந்தது.வேட்டைக்காரர்கள்சிலர்சிங்கத்தைஉயிருடன்பிடிப்பதற்காகஒருகூண்டுசெய்துஅதற்குள்ஓர்ஆட்டைவிட்டுவைத்திருந்தனர்.ஆட்டிற்குஆசைப்பட்டசிங்கம்கூண்டிற்குள்மாட்டிக்கொண்டது.
மனிதனைப்பார்த்தசிங்கம்,“மனிதனே,என்னைஇந்தக்கூண்டிலிருந்துவிடுவித்துவிடு…நான்உனக்குப்பலஉதவிகளைச்செய்வேன்,”என்றது.
“நீயோமனிதர்களைக்கொன்றுதின்பவன்.உன்னைஎப்படிநான்விடுவிக்கமுடியும்?”என்றான்மனிதன்.
“மனிதர்களைக்கொல்லும்சுபாவம்எங்களுக்குஉண்டுதான்.அதற்காகஉயிர்காக்கும்உன்னைக்கூடவாஅடித்துக்கொன்றுவிடுவேன்.அவ்வளவுநன்றியில்லாதவனாநான்?பயப்படாமல்கூண்டின்கதவைத்திற.உன்னைஒன்றும்செய்யமாட்டேன்”என்றுநைசாகப்பேசியதுசிங்கம்.
சிங்கத்தின்வார்த்தையைஉண்மையென்றுநம்பிவிட்டான்மனிதன்.கூண்டின்கதவைத்திறந்தான்.அவ்வளவுதான்!நன்றிகெட்டசிங்கம்மனிதன்மேல்பாய்வதற்குதயாராயிற்று.
இதனைக்கண்டமனிதன்,“சிங்கமே,நீசெய்வதுஉனக்கேநியாயமா?உன் பேச்சைநம்பிஉன்னைக்கூண்டிலிருந்துவிடுவித்தேனே…அதற்குஇதுதானாநீகாட்டும்நன்றி”என்றான்.
“என்உயிரைக்காத்துக்கொள்வதற்காகநான்ஆயிரம்பொய்சொல்லுவேன்.அதைநீஎவ்வாறுநம்பலாம்?மனிதர்கள்என்றால்பகுத்தறிவுள்ளவர்கள்என்றுதானேபொருள்.அந்தஅறிவைக்கொண்டுஇதுநல்லது,இதுகெட்டதுஎன்றுபகுதித்தறியவேண்டாமா?முட்டாள்தனமானஉன்செய்கைக்குநான்எப்படிப்பொறுப்பாகமுடியும்?”என்றதுசிங்கம்.
“கடவுள்உன்னைதண்டிப்பார்.உன்உயிரைகாப்பாற்றியஎன்னையேசாப்பிடுவதுநியாயமா?
உன்னைவிடுவித்ததற்குஇம்மாதிரிநடந்துகொள்வதுமுறையல்ல”என்றான்மனிதன்.
அப்போது அவ்வழியாகஒருநரிவந்தது.
“இதனிடம்நியாயம்கேட்போம்”என்றுகூறியமனிதன்நடந்த கதையனைத்தையும்நரியிடம்கூறினான்.
“எங்கள்தொழில்அனைவரையும்அடித்துக்கொன்றுசாப்பிடுவதுதான்.இதுஇவனுக்குநன்றாகத்தெரிந்திருந்தும்கூடஎன்னைக்கூண்டிலிருந்துவிடுவித்தான்.முட்டாள்தனமானஇந்தச்செய்கைக்குஉரியபலனைஇவன்அனுபவித்தேதீரவேண்டும்.நீஎன்னசொல்றநரியாரே…”என்றது.
அனைத்தையும்கேட்டநரிக்குசிங்கத்தின்நன்றிகெட்டசெயல்புரிந்து விட்டது.உதவிசெய்தமனிதனைக்காப்பற்றிசிங்கத்தைகூட்டில்பூட்டிவிடதந்திரமாகசெயல்பட்டது.அதனால்ஒன்றும்புரியாததைப்போல்பாவனைசெய்து.
“நீங்கள்இந்தமாதிரிசொன்னால்எனக்குஒன்றுமேபுரியல.ஆரம்பத்திலிருந்துசொல்லுங்கள்”என்றதுநரி.
உடனேசிங்கம்சொல்லத்தொடங்கியது.
“நான்அந்தக்கூண்டிற்குள்அடைந்துகிடந்தேன்…”
“எந்தக்கூண்டிற்குள்?”என்றதுநரி.
“அதோஇருக்கிறதேஅந்தக்கூண்டிற்குள்”என்றதுசிங்கம்.
“எப்படிஅடைந்துகிடந்தீர்கள்?”என்றதுநரி.
சிங்கம்விடுவிடுவென்றுகூண்டிற்குள்சென்றது.இதுதான்சமயம்என்றுகருதியநரிசட்டென்றுகூண்டுக்கதவைஇழுத்துமூடியது.
“நரியாரே!இதுஎன்னஅயோக்கியத்தனம்!நியாயம்கூறுவதாகக்கூறிஎன்னைமறுபடியும்கூண்டில்அடைத்துவிட்டீரே!”என்றுகத்தியதுசிங்கம்
“நீங்கள்பேசாமல்கூண்டிற்குள்ளேயேஇருங்கள்.நான்ஒன்றும்இந்தமனிதனைப்போல்முட்டாள்அல்ல.உங்களுக்குச்சாதகமாகநியாயம்சொன்னால்முதலில்மனிதனைஅடித்துக்கொல்வீர்கள்.பிறகுஎன்னையேஅடித்துக்கொன்றுவிடுவீர்கள்.அதனால்தான்உங்களைக்கூண்டிற்குள்செல்லுமாறுசெய்துகதவைப்பூட்டிவிட்டேன்”என்றதுநரி.
நன்றிமறந்தசிங்கம்தான்செய்ததவறைஎண்ணிவருந்தியது.
நீதி:
ஒருவர்செய்தஉதவியைஎப்போதும்மறக்ககூடாது.