சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள்:-
இக்காய் கசப்பும் துவர்ப்பு சுவை உடையது. வயிற்றில் உள்ள கிருமிகளையும் பூச்சுகளையும் எடுக்க வள்ளது. வயிற்றுக்கு இதம் அளிக்கும்.
கடுமையான ஜலதோஷ்த்திற்கு சுண்டைக்காய் பொடி, வற்றல், குழம்பு என சமைத்து சாப்பிட்டால் மார்பு சளி நீங்கும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் சுண்டைக்காய், வேப்பம் பூ, பாகற்க்காய் பொன்ற் கசப்பு சுவையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும்.
கிருமிகளை ஒழிக்கும் சுண்டைக்காய்:
சுண்டைக்காய், கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என்று கசப்புடனும் கசப்பின்றியும் கிடைக்கின்றது. சுண்டக்காயை வாங்கி மோரில் ஊறவைத்து, வற்றலாகப் போட்டு வறுத்தும், குழம்பில் சேர்த்தும் சாப்பிடலாம்.
கசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளுக்கு நல்ல மருந்து ஒரு குடும்பத்தினருக்கு (5 பேர் அடங்கியது) வருடத்திற்கு 2 லிட்டர் கசப்பு சுண்டைக்காய் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, கிருமித் தொந்தரவு இருக்காது அமிபீயாஸிஸ் போன்ற கிருமிகளையும் சுண்டைக்காய் விரட்டி விடும்.