ஒட்டகத்தால் எப்படி தண்ணீர் குடிக்காமல் மாதக் கணக்கில் உயிர் வாழ முடிகிறது. என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்:-
ஒட்டகம் பாலைவன மிருகமாதலால் அதற்கு வறட்சியைத் தாங்கிக்கொள்ளும் அடாப்டேஷன் கிடைத்திருக்கிறது. அதன் முதுகில் உள்ள திமிளில் தண்ணீர் சேமிக்கப்படுவதில்லை.
வயிற்றிலும் சேமிக்கப் படுவதில்லை. இரத்தத்தில்தான் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. குறைவாக வியர்வை ஏற்படுவதால் தண்ணீர் வியர்வையாக விரையமாவதும் இல்லை.
ஒரு வேளைக்கு ஒட்டகம் 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். தண்ணீர் முழுவதும் இரத்தத்தில் சேர்ந்துவிடும். அப்படியானால் திமிள் எதற்காக என்று கேட்கிறீர்கள்.
திமிளில் உள்ள பொருள் கொழுப்பு. கொழுப்பு ஜீரணமாகும்போது நிறைய தண்ணீர் உற்பத்தியாகும். இந்த தண்ணீரை மெட்டபாலிக் தண்ணீர் என்பார்கள்.
ஒட்டகம் இரத்தத்தில் தண்ணீர் குறையும்போது மெட்டபாலிக் தண்ணீரை உற்பத்தி செய்துகொள்ளும்.
அப்போது திமிளின் அளவும் குறைந்துவிடும் கொழுப்பு கரைந்து திமிள் தொளதொளவென்றாகிவிடும். எனவே தான் ஒட்டகத்தால் மாதக் கணக்கில் தண்ணீர் குடிக்காமல் உயிர் வாழ முடிகிறது.