கடலில் வசிக்கும் எட்டு கால்கள் கொண்ட உயிரினம் ஆக்டோபஸ். இதன் கால்களில் வட்ட வடிவத்தில் காணப்படும் கொடுக்குகள் போன்ற அமைப்பு பிற உயிரினங்களின் ரத்தத்தை உறிஞ்சுவதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. ஆனால், ஓர் ஆக்டோபஸ் மற்றொரு ஆக்டோபசின் ரத்தத்தை உறிஞ்சி குடிப்பதில்லை.
ஏனென்றால், ஆக்டோபஸ் தோலில் உருவாகும் வேதி பொருள் மற்றொரு ஆக்டோபஸ் ரத்தம் உறிஞ்சுவதை தடுக்கும் வகையில் செயல்படுகிறது என்று ஜெருசலேம் நகரில் உள்ள ஹீப்ரூ பல்கலை கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், ஆக்டோபஸ் மற்றொன்றால் சுற்றி வளைக்கப்படுவதில்லை.
தலைமை ஆய்வாளர் கய் லெவி கூறும்போது, மிக எளிதாக கண்டுணர கூடிய இதனை இதற்கு முன்பு யாரும் கவனிக்கவில்லை என்பதை அறிந்து நாங்கள் ஆச்சரியமடைந்துள்ளோம். மிக சிக்கலான பிரச்சனைக்கு ஆக்டோபசின் மிக திறமையான மற்றும் எளிதான தீர்வானது எங்களை முழுவதும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. ஆய்வகத்தில் அதன் ஆக்டோபசின் கரமானது தனியாக வெட்டி வைத்திருக்கும்பொழுது அது ஒரு மணிநேரம் வரை செயல்படும் தன்மையுடன் இருந்ததை ஆய்வாளர்கள் கண்டனர்.
ஆனால், அந்த கரங்கள் மற்றொரு ஆக்டோபசின் கரத்தை பிடிக்க கூடியதாக இருந்தாலும், ஆக்டோபசின் தோலை அது பிடிக்கவில்லை. ஆக்டோபசின் தோல் பகுதி உணவாக மாற்றி வைக்கப்பட்டபோதும், ஆக்டோபசின் கரங்கள் அதனை கவ்வி பிடிக்கவில்லை. மாறாக ஆக்டோபசின் தோல் பகுதியில் இருந்து உருவாக்கப்பட்ட சாறு கொண்ட உணவு பகுதியையும் ஆக்டோபசின் கரங்கள் கவ்வி பிடிக்கவில்லை.
இந்த முடிவுகள், ஆக்டோபசின் தோல் பகுதி மற்றொரு ஆக்டோபசின் கரம் பிடிக்க வருவதை தடுக்கும் வகையில் செயல்படுவதை அறிவித்துள்ளன. எனவே, தோல் பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட வேதி பொருள் மற்றொரு ஆக்டோபசிடம் இருந்து வேறுபடும் வகையில் அதாவது அதன் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் வகையில் தடுக்கும் நடுநிலையாளராக செயல்படுவது தெரிய வந்துள்ளது.