தன்னம்பிக்கை சிந்தனைகள் :-
1. திட்டமிடுவதும் அதன்படி நடப்பதுமே வெற்றி தரும்.
2. வெற்றிபெற எண்ணுபவன் சோர்வதுமில்லை, தடுமாறுவதும் இல்லை..
3. நடக்கும் என்ற எண்ணத்தோடு செயற்பட்டு, எந்தத் தடைக்கும்
அஞ்சாமல் முன்னேறு…
4. உனக்கே நீ ஆணை பிறப்பித்து செயற்பட்டு வெற்றிபெறு, மற்றவரின் ஆணைக்காக பார்த்திருக்காதே…
5. மாறி வரும் விஞ்ஞான உலகத்திற்கு ஏற்றவகையில் தங்களை மாற்றிக்கொள்ள முடியாத காரணத்தாலேயே பலர் தோல்வி அடைகிறார்கள்…
6. எதையும் பின் போடாதே கண்டிப்பாய் இன்றே முடித்துவிட வேண்டுமென எண்ணிச் செயற்படு…
7. எவ்வளவுதான் சிந்தனை இருந்தாலும் அதைச் செழுமையாக்கி ஒரே சமயத்தில் வலுவான விதமாக செலுத்த அழுத்தமான நிர்வாகத்திறன் வேண்டும்.
8. எல்லாப்பக்கமும் திரும்பாமல் ஒரே குறியாக ஒன்றைத் தேர்ந்தெடுத்து முழுக்கவனத்தையும் செலுத்தினால் மாபெரும் வெற்றி கிடைக்கும்.
9. வெவ்வேறு திட்டங்களை தூக்கியெறிந்துவிட்டு ஒரே இலக்கை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதில் வரும் சிக்கல்களை ஆராய வேண்டும். அதை வரிசைப்படுத்தி ஒவ்வொன்றாக தீர்க்க முயல வேண்டும்.
10. மனதை ஒரு நிலைப்படுத்த இப்போதே பழகுங்கள் வெற்றி தானாகத் தேடி வரும்.