ஏகபாத சிரசாசனம்
செய்முறை
—————–
1.விரிப்பில் கால்களை நீட்டி அமர்ந்து கொள்ளவும்.
2.மெதுவாக வலதுகாலை, இடது கையை கணுக்காலின் கீழாகவும் வலதுகையை
கணுக்காலின் மேலாகவும் வைத்துபிடித்து நெற்றியை நோக்கி கொண்டு வரவும்.
3. பிறகு வலதுகையை காலின் உள்புறமாக கொண்டுவந்து கழுத்தின் பின்புறம்
வலது காலை வைத்துக்கொள்ளவும்.
4. இடதுகாலை மெதுவாக மடக்கி தொடை
பகுதியை ஒட்டியவாறு
வைத்துக்கொள்ளவும்.
5. கொஞ்சம் நிமிர்ந்து கைகள் இரண்டையும் ஒன்றினைத்து நேராக பார்க்கவும்.
6.இப்படியே 10 முதல் 30 விநாடிகள் வரை சாதாரண சுவாசத்தில் இருந்துவிட்டு
பிறகு கைகளை பிரித்து மெதுவாக கைகளால் கழுத்திலிருக்கும் காலை கீழே கொண்டு
வந்துவிடலாம்.
இதுபோல் இடதுபுறமும் ஒருமுறை செய்து விட்டு அடுத்த ஆசனம் பழகலாம்.
* மாற்று ஆசனமாக வீராசனம்/ சாந்தியாசனம்
செய்துகொள்ளலாம்.
பலன்கள்
————
1. நரம்புத்தளர்ச்சியை போக்கும்.
2.குடலிறக்க நோயை குணப்படுத்தும்.
3.மலச்சிக்கலை போக்கும்.
4.அடிவயிற்று பெருக்கத்தை தடுக்கும்.
5.மாதக்கோளாறு , கர்பபை சரிவு இறக்கம்,
கரு தங்காமை ஆகியவற்றை தடுக்கும்.
6.நுரையீரல் கோளாறு,
இருதய பலவீனம் நீங்கும்.
7.தொடக்கநிலை விரைவீக்கத்தை சரிசெய்யும்.
8.வெரிக்கோஸ் வெயின் எனும் கால் நரம்பு புடைத்திருப்பதை சரிசெய்யும்.
9.கால் ,கை நடுக்கம், மற்றும் உள்ளங்கை, உள்ளங் கால்களில் வரும் வியர்வையை நிறுத்தும்.
10. தொடர்ந்து செய்துவருபவர்களுக்கு வசியசக்தி ஏற்படும்.
* நமது அனுபவம் எனது மகனுக்கு சென்ற சிலமாதங்களுக்கு முன்னால் சைக்கிளில் அடிப்பட்டு நன்றாக வீங்கிவிட்டது. அதோடு கடுமையான வலியோடும் துடித்து வந்தான். கசாயம், பற்று, சூரணம் போன்ற பல சித்தா வழிமுறைகளையும் பின்பற்றியும் வீக்கம் குறையாததோடு வலியும் அதிகரித்து வந்தது. என் மனைவியின் நச்சரிப்பால் இதற்கான ஆங்கில சிறப்பு மருத்துவரிடம் கொண்டு காட்டினேன். அவர்பார்த்து ஊசிப்போட்டு சில மாத்திரைகளையும்
தந்ததோடு அறுவை சிகிட்சை செய்ய வேண்டியது வரலாம். என்று அறிவுறுத்தினார். நமக்கு அதில் உடன்பாடு இல்லாததால் வீட்டிற்கு வந்ததும் தொடர்ந்து 10 நாட்கள் பத்ராசனம், ஹனுமானாசனம், மேற்கண்ட ஏகபாத சிரசாசனம் போன்றவற்றோடு நாவல்பட்டை, பூண்டு, பால்காயம், சுக்கு தட்டிப்போட்டு ஒரு கசாயத்தையும் தயார் செய்து கொடுத்துவந்தோம்.
மூன்றாம் நாளிலிருந்து வீக்கம் குறைந்து பத்து நாட்களில் முழுவதும் குணமாகி விட்டது.