தாமஸ் ஆல்வா எடிசன் பற்றிய தகவல்கள்:-
இன்றைய உலகம் சூரியன் மøந்த பின் இரவிலும், பகலைப் போல மன்னுகிதே. அதற்கு காரணம் தாமஸ் ஆல்வா எடிசனின் கண்பிடிப்புகள். இவர் அமெரிக்காவின் நகரில் 1847ல் பிப்., 11ல் பிறந்தார். தனது அரிய கண்டுபிடிப்பால் உலகுக்கே வெளிச்சம் கொடுத்தார். இவர் மின் விளக்கு மட்டுமல்லாமல், போனோகிரால், டெலிபிரின்டர், பேட்டரி, சிமென்ட், நிலக்கரி, கேமரா, ஒலி நாடா உள்ளிட்ட ஏராளமான கண்டுபிடிப்புகளை உருவாக்கினார். இவர் அமெரிக்காவில் மட்டும் தன் பெயரில் 1093 கண்டுபிடிப்புகளுக்கான உரிமங்களை பதிவு செய்துள்ளார். சில படைப்புகள், ஏற்கன÷ கண்டுபிடிக்கப்பட்டதை மேம்படுத்தி உருவாக்கப்பட்டவை.
அறிவியல் ஆர்வம்
ஏழாவது குழந்தையாக பிறந்தவர் எடிசன். பள்ளி பருவத்திலேயே காது கேளாமையால் பாதிக்கப்பட்டார். ஆசிரியர் திட்டியதால் பள்ளிக்க செல்வதை நிறுத்தினார். இவரது தாயார் ஆசியை என்பதால், வீட்டிலேயே கல்வி கற்றார். 12வது வயதிலேயே படிப்புக்கு முடிவு கட்டினார். காரணம் அறிவியலில் கொண்ட ஆர்வம். டெட்ராய்ட் ரயில் நிலையத்தில் செய்தித்தாள், காய்கறி விற்றார். அப்போதெல்லாம், தந்திப்பதவு (டெலிகிராப்) மூலம் ரயில் போக்குவரத்து நடந்தது.புள்ளிக் கோடுகளாக பதிவதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் ஆப்பரேட்டர் வேலையில் சேர்ந்தார். 1871ல் திருமணம் செய்தார். மூன்று குழந்தைகள் பிறந்தன.
முதல் கண்டுபிடிப்பு
டெலிகிராப் ஆப்பரேட்டர் வேலையில் இருந்து விலகி நியூயார்க் சென்றார். அங்கு, ‘போனோகிராப்’ எனும் ரிகார்டிங் கருவி, ஒலிநாடா, மின் டெலிகிராப் கருவிகளை கண்டுபிடித்தார். டெலிகிராப் மட்டும் 10 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு விலை போனது. இதன் மூலம் தொழில் அதிபராக உயர்ந்தார்.
சரித்திர கண்டுபிடிப்பு
அக்காலத்தில் வாயு விளக்குகள் தான் பயன்பாட்டில் இருந்தன. மின் விளக்கு கண்டுபிடிப்பது பலரது கனவு. மின் விளக்கு ஆராய்ச்சிக்காக,’எடிசன் மின்விக்கு கம்பெனி’தொடங்கப்பட்டது. பிரான்சிஸ் அப்டன் என்பவரும் எடிசனின் ஆய்வுக்கூட்த்தில் சேர்ந்தார். இவர்கள் 1879ல், பிளாட்டினம் கம்பிச்சுருளை, வெற்றிட பல்ப் ஒன்றில் பயன் படுத்தி கட்டுப்படுத்திய மின்னோட்டத்தில் , உலகின் முதல் மின்விளக்கை கண்டுபிடித்தனர். பின் எலக்ட்ரிக் மோட்டார், சினிமா கேமரா உள்ளிட்ட கண்டு பிடிப்புகளø உருவாக்கினார். இவரிடம் எப்படி இவ்வளவு கண்டு பிடிப்புகளை உருவாகினீர்கள் என்று கேட்ட போது, படைப்புக்கு தேவை ‘ஒரு சதவீதம் ஊக்கமும் 99 சதவீதம் கடின உழைப்பும் தான்’ என்றார்.
இறுதி மரியாதை
எடிசன், 1931 அக் 18ல் வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் மறைந்தார். அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஹெர்பர்ட் ஹூவர், எடிசனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, நாடு முழுவதும் தேவையான விளக்குகள் தவிர மற்ற அனைத்தையும் ஒரு நிமிடம் அணைக்க உத்திரவிட்டார்.