தன் முனைப்புக் (கர்வம்) கொள்!! தவறொன்றுமில்லை!!!
தன் முனைப்பு என்கிற அகங்காரம் கூடாது என எல்லா ஞானிகளும் காலங்காலமாய் சொல்லியே வந்திருக்கிறார்கள். ஆனால் தன் முனைப்புக் கொள்வதில் தவ்றொன்றுமில்லை…. கீழ்க்கண்ட தகுதிகள் நம்மிடம் இருந்தால்….
1. பிறப்பை தேர்ந்தெடுக்கும், இறப்பை தேர்ந்தெடுக்கும் உரிமை நம்மிடம் இருந்தால்……….
2. நிறத்தைத் தேர்ந்தெடுக்கும், முகத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை நம்மிடம் இருந்தால்……
3. தாயைத் தேர்ந்தெடுக்கும், தந்தையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை நம்மிடம் இருந்தால்……..
4. பஞ்ச பூதங்களில் ஏதாவது ஒன்றை நம்மால் உருவாக்க முடிந்தால்…..
5. உணவை ஏழு தாதுக்களாக்கும் உடலின் சித்து வேலை நம் கட்டுப்பாட்டில் இருந்தால்….
6. ஏழு தாதுக்களில் ஏதேனும் ஒன்றையாவது, நம் விஞ்ஞானக் கருவிகளைக் கொண்டு உருவாக்க முடிந்தால்……
7. இருதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளின் இயக்கங்களை மன விரும்பி இயக்கத்தின் (Central Nervous System) கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்தால்……
8. கோள்களின் இயக்கங்களை நம் விருப்பம் போல் மாற்றியமைக்க முடிந்தால்….
9. நம் மனதை அறிவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிந்தால்….
10. எண்ணங்கள் தானாக எழுந்து அலைவதை கட்டுப்படுத்த முடிந்தால்….
11. எண்ணங்களை ஆராய்ச்சியிலும், தூய்மையிலும் வைத்திருந்து, எண்ணங்களின் மீது அயராத விழிப்புணர்வு ஏற்படுத்த முடிந்தால்….
12. மரணத்தை வெல்ல முடிந்தால்….
13. முதுமையை வெல்ல முடிந்தால்…..
14. இயற்கையை வெல்ல முடிந்தால்….
15. உடலிலே EEG கருவியை பொருத்திக் கொண்டு, டெல்ட்டா அலையில் நீடித்து நிலைத்து நிற்க முடிந்தால்….
16. விழிப்புணர்வுவோடு பிறப்பையும், இறப்பையும் அனுபவமாக பெற முடிந்தால்
17. உடலிலிருந்து சிறுநீர், மலம் பிரியும் நேரத்தை நிர்ணயிக்க முடிந்தால்…..
18. பூவை, செடியை, விதையை, காயை, கனியை சுயமாய் உருவாக்க முடிந்தால்…..
19. மாதுளைக்கு உள்ளே மிக அழகாக விதைகள் அடுக்கப்பட்டிருப்பது போல நம்மால் அடுக்க முடிந்தால்….
20. தென்னை மரத்தைப் போல, எந்த மோட்டாரின் உதவியுமின்றி சாக்கடை நீரைக் கூட, நிலத்திலிருந்து மேலேற்றி, இள நீராக மாற்றும் வித்தை தெரிந்திருந்தால்….
21. தூக்கணாங்குருவியைப் போல ஒரு கூடு கட்டத் தெரிந்திருந்தால்…..
22. இன்னும் இயற்கையின் விந்தைகள் எத்தனை எத்தனையோ! அவைகளையெல்லாம் நம்மால் செய்ய முடிந்தால்…..
தன் முனைப்புக் கொள்…. அதில் தவ்றொன்றுமில்லை.
இத்தகுதிகள் நம்மிடம் இல்லையேல்……..சிந்திப்போம்.
ராகவேந்தர்