நெப்போலியனின் வெற்றிகள்
நெப்போலியன் ஜெர்மனி, ஆஸ்திரியா இவற்றை வென்று ரஷ்யாவில் மாஸ்கோ வரை வென்றுவிட்டார்.
பல போர்களில் ஆங்கிலேயர் நெப்போலியனிடம் தோல்வி கண்டனர். இந்தியாவின் தென்னகத்தில் பரவலான பல இடங்களில் திப்பு சுல்தானிடம் தோல்வி கண்டனர்.
இதனை அல்லாமா இக்பால் அவர்கள் திப்புவைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது “அன்று கிழக்கு தூங்கிக் கொண்டிருந்த வேளை அவன் மட்டும் தான் விழித்திருந்தான்” என சிறப்பித்தார். நெப்போலியனின் வெற்றிகள் தொடர்ந்த வேளை இந்தியாவில் நெப்போலியனுக்கும் திப்புவுக்கும் கடிதத் தொடர்புகள் ஆரம்பித்தன.
மாவீரன் நெப்போலியன் நைல் நதிப் பகுதியை வென்ற பின் இந்தியா மீது படையெடுக்கத் திட்டமிட்டிருந்தார். இதனையே திப்புசுல்தான் ஆவலோடு எதிர்பார்த்தார்.
கி.பி.1798 ஜனவரியில் பெரும்படையுடன் மத்திய தரைக்கடலைக் கடந்து அரபிக்கடலைக் கடந்து கி.பி.1798 மத்தியில் இந்தியக் கரையை அடைவதே மாவீரன் நெப்போலியனின் திட்டம்.
இத்திட்டம் திப்புசுல்தானிடம் தெரிவிக்கப்பட்டதும் ஆங்கிலேயரின் எதிர்ப்பை மீற் பாண்டிச்சேரியில் உள்ள பிரெஞ்சு கவர்னரிடம் 1798ல் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி மாவீரன் நெப்போலியன் அதேயாண்டு ஜூனில் அலக்ஸாந்திரியா துறைமுகத்தில் படையிறங்கினர்.
இருபதே நாட்களில் கெய்ரோ நகர் வீழ்ந்தது. எகிப்தை ஆண்ட துருக்கிய உஸ்மானிய சுல்தானின் பிரதி-நிதி மாவீரன் நெப்போலியனிடம் சரணடைந்தார்.