” குலதெய்வம் எதுன்னே தெரியாதா?” (மகா பெரியவா விளக்கம்) மகா பெரியவர் ஊர் ஊராகச் சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த ஒருநாள் அது. அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, ஒரு விவசாயி மகா பெரியவரை மிகவும் பிரயாசைப்பட்டு வந்து சந்தித்தார். அவரிடம் துளியும் உற்சாகமில்லை. முகமும் இருளடைந்து போயிருந்தது. வாயைத் திறந்து தன் துன்பங்களைக் கூற அவசியமே இல்லாதபடி, பார்த்த மாத்திரத்தில் அவரின் துன்பம் மகா பெரியவருக்கு விளங்கி விட்டது. இருந்தும் அந்த விவசாயி, சாமி… ... Read More »
Daily Archives: May 1, 2016
பூச்சிகளை ஒழிக்க சில யோசனைகள் :-
May 1, 2016
கொசுத் தொல்லை ஒழிய… கொசுத்தொல்லைக்கு குட்நைட் போன்றவற்றை பணம் செலவழித்து வாங்க முடியாதவர்கள். வீட்டில் அருகே வளரும் தும்பைச் செடியை அரைத்து இரவில் பூசிக்கொண்டு படுத்தால் கொசுக்கள் கடிக்காது. தும்பைச் செடி உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. ஈ மொய்ப்பதை தடுக்க… சமையலறை, டைனிங் டேபிள் ஆகிய இடங்களில் ஈ மொய்த்தால் ஒரு குவளை நீரில் 2 டீஸ்பூன் உப்பு கலந்து அந்த இடங்களில் தெளித்து விட்டால் ஈ மொய்க்காது. பல்லியை விரட்ட… வீட்டில் பல்லிகள் நடமாடும் இடத்தில் ... Read More »
நுரையீரல் புற்றுநோயை தவிர்க்கும் காய்கறிகள்!!!
May 1, 2016
காய்கறிகள் என்பது இயற்கை நமக்கு அளித்துள்ள கொடை எனலாம். காய்கறிகளில் நார்ச்சத்து, வைட்டமின், கனிம சத்துகள் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான எண்ணற்ற சத்துகள் உள்ளன. காய்கறிகளை உண்பதால் உடல் எடை அதிகரிக்காது. கலோரி அளவும் குறைவாகவே இருக்கும். பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்திலான காய்கறிகளை நாம் அதிகம் உண்பதால் தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதில் தப்பிக்கலாம். இந்த வகை காய்கறிகளில் பீட்டா கரோட்டின், உடலுக்கு வைட்டமின் ஏ சத்தினை அளிக்கக்கூடிய பொருட்கள் உள்ளன. பீட்டா ... Read More »
மனைவி கடிதம் எழுதியிருந்தாள்!!!
May 1, 2016
ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய மனைவி கடிதம் எழுதியிருந்தாள். !!! அன்புள்ள கணவருக்கு.. நீங்கள் கடத்தல் வழக்கில் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம். நம் வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம் அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச் செல்லலாம் என்று எண்ணுகிறேன்.. ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான் தெரியவில்லை. கைதி பதில் எழுதினான். அன்பே.. குடும்பச் செலவுக்காக வேறு ஏதாவது வழி செய்து கொள்..பின்னாலிருக்கும் நிலத்தில் கை வைக்காதே. ... Read More »
எல்லாருமே கெட்டவர்கள்தான்!!!
May 1, 2016
முன்னொரு காலத்தில் அங்கிரசர் என்றொரு ரிஷி, வனத்தில் வசித்து வந்தார். அவர் மிகவும் புகழ் பெற்றவர். அவரிடம் மாணாக்கர்கள் பலர் இருந்தனர். அவருடைய ஞானத்தில் இருந்து கணிசமான அனுகூலத்தை அவர்கள் பெற்றிருந்தனர் எனலாம். அந்த மாணவர்களில் சிலர், பக்தியும், கடமையுணர்வும் கொண்டவர்கள். மற்றவர்களைவிட எளிதில் எதையும் கிரகித்துக் கொள்ளக் கூடியவர்களாக அவர்கள் இருந்தனர். அவர்களுடைய நற்பண்புகள் காரணமாக மற்ற மாணவர்களால் அவர்கள் மதிக்கப்பட்டனர். ஆனால், அறிவுக் கூர்மையற்ற சிலர் மட்டும், அந்த நல்ல மாணவர்களிடம் பொறாமை கொண்டிருந்தனர். ... Read More »