ராகம் – பூபாளம் மன்னும் இமயமலை யெங்கள் மலையே மாநில மீதிது போற்பிறி திலையே! இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே? பன்னரும் உபநிடநூ லெங்கள் நூலே பார் மிசை யேதொரு நூல்இது போலே? பொன்னொளிர் பாரதநா டெங்கள் நாடே போற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே. மாரத வீரர் மலிந்தநன் னாடு மாமுனி வோர்பலர் வாழ்ந்த பொன்னாடு நாரத கான நலந்திகழ் நாடு நல்லன யாவையும் நாடுறு நாடு பூரண ஞானம் பொலிந்தநன் ... Read More »
Monthly Archives: April 2016
காலை வெட்டிய வீரம்!!!
April 15, 2016
ஒரு நாள் மாலை நேரம் அரண்மனை தோட்டத்தில் அரசரும் பெரிய தனவந்தர்களும் படைத் தளபதிகளும் கூடி இருந்தனர். ஒவ்வொருவரும் அவர்கள் சண்டையில் செய்த வீர தீரச் செயல்கள் பற்றி பேசிப் பெருமைபட்டுக் கொண்டிருந்தனர் . அப்போது தெனாலி ராமனும் அங்கு இருந்தான் . அவர்கள் பேச்சையும் கேட்டுக் கொண்டு இருந்தான் . அவர்கள் பேச்சு அவனுக்கு பிடிக்கவில்லை. போங்கள் அய்யா , நீங்கள் எல்லாம் என்ன பிரமாதமாக சாதித்து விட்டீர்கள் . நானும் போர்களம் சென்று இருக்கிறேன் ... Read More »
குளிரில் நின்றால் பரிசு!!!
April 15, 2016
ஒரு நாள் இரவு நேரத்தில் அக்பரும், பீர்பாலும் உரையாடிக்கொண்டிருந்தார்கள். குளிர் அதிகமாக இருந்ததால் சால்வையை இருக்கமாக இருவரும் போர்த்திக்கொண்டிருந்தனர். அப்படியும் குளிர் அக்பரை மிகவும் வாட்டியெடுத்தது. அக்பர் பீர்பாலை பார்த்து ” பீர்பால் இந்த குளிரின் கொடுமையை பார்த்தீரா… எதிரிகளுக்கு அஞ்சாத நெஞ்சம் இருந்தும் இந்த குளிருக்கு அஞ்சாமல் இருக்க முடியவில்லையே! இந்த குளிரை பொருட்படுத்தாமல், யமுனை ஆற்றில் ஒரு இரவு முழுக்க, கழுத்தளவு நீரில் யாராலும் நிற்க இயலுமோ! அவ்வாறு நின்றால், அவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் ... Read More »
சங்க நாதம்!!!
April 15, 2016
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! ... Read More »
பெண்கள் விடுதலைக் கும்பி!!!
April 14, 2016
காப்பு பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள் பேசிக் களிப்பொடு நாம்பாடக் கண்களி லேயொளி போல வுயிரில் கலந்தொளிர் தெய்வம்நற் காப்பாமே. 1. கும்மியடி!தமிழ் நாடு முழுதும் குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி! நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின நன்மை கண்டோ மென்று கும்மியடி! (கும்மி) 2. ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென் றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்; வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார். (கும்மி) 3. மாட்டை யடித்து வசக்கித் தொழுவினில் ... Read More »
பாவேந்தர் பாரதிதாசன்!!!
April 14, 2016
தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்! தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்! தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்! தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! ... Read More »
பாரதியார் படைப்புகள்
April 14, 2016
காற்று வெளியிடைக் கண்ணம்மா – நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் -அமுது ஊற்றினை ஒத்த இதழ்களும் – நிலவு ஊறித் ததும்பும் விழிகளும் – பத்து மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் – இந்த வையத்தில் யானுள்ள மட்டிலும் – எனை வேற்று நினைவின்றித் தேற்றியே – இங்கோர் விண்ணவ னாகப் புரியுமே! இந்தக் (காற்று) நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! – எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன் – துயர் போயின, போயின துன்பங்கள் நினைப் பொன்எனக் கொண்ட பொழுதிலே – என்றன் வாயினிலே அமு தூறுதே – கண்ணம்மா என்ற பேர்சொல்லும் போழ்திலே கண்ணம்மா ம்ம்ம் கண்ணம்மா ம்ம்ம் – கண்ணம்மா என்ற பேர்சொல்லும் போழ்திலே – உயிர்த் தீயினிலே வளர் சோதியே – என்றன் சிந்தனையே, என்றன் சித்தமே! – இந்தக் (காற்று) Read More »
வாதுக்கு வந்த பண்டிதர்!!!
April 14, 2016
பெயர் பெற்ற ஒரிய நாட்டுப் பண்டிதர் ஒருநாள் “திடுதிடுப்” பென்று விஜயநகரம் வந்து சேர்ந்தார். நேரே அரண்மனைக்குச் சென்றார். அரண்மனை முன்வாசலில் கட்டியிருந்த அந்தப் பெரிய வெண்கல மணியை அடிக்கத் தொடங்கினார். விஜயநகரப் பேரரசின் பண்டிதர்களை வாதுக்கு இழுக்கும் அறிகுறி அல்லவா அது! அந்த மணி ஓசை கேட்டு அரசர் கிருஷ்ணதேவராயர் திடுக்கிட்டார். உடனே ஒரிய நாட்டுப் பண்டிதரை வாதுக்கு இழுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்! அப்பொழுது அரண்மனைப் பண்டிதர்களுக்கு ஆள் அனுப்பினார். அவர்களை உடனே அந்த ... Read More »
பாரத மாதா நவரத்தின மாலை!!!
April 14, 2016
(இப்பாடல்களில் முறையே ஒன்பது இரத்தினங்களின் பெயர்கள் இயற்கைப் பொருளிலேனும் சிலேடைப் பொருளிலேனும் வழங்கப் பட்டிருக்கின்றன) (காப்பு) வீரர்முப் பத்திரண்டு கோடி விளைவித்த பாரதமா தாவின் பதமலர்க்கே – சீரார் நவரத்ன மாலையிங்கு நான் சூட்டக் காப்பாம் சிவரத்தன மைந்தன் திறம். (வெண்பா) திறமிக்க நல்வயி ரச் சீர்திகழும் மேனி அறமிக்க சிந்தை அறிவு – பிறநலங்கள் எண்ணற் றனபெறுவார் இந்தியா என்ற நின்றன் கண்ணொத்த பேருரைத்தக் கால். (கட்டளை கலித்துறை) காலன் எதிர்ப்படிற் கைகூப்பிக் கும்பிட்டுக் கம்பனமுற் ... Read More »
தமிழறிவோம்!!!
April 13, 2016
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம் அ —–> எட்டு ஆ —–> பசு ஈ —–> கொடு, பறக்கும் பூச்சி உ —–> சிவன் ஊ —–> தசை, இறைச்சி ஏ —–> அம்பு ஐ —–> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு ஓ —–> வினா, மதகு – ... Read More »