ஒருமுறை பீர்பால் தன் சொந்த வேலை காரணமாக அயல்தேசம் செல்ல நேரிட்டது. செல்லும் வழியில் அரண்மனை ஒன்று தென்பட்டது. மிகவும் அசதியாக இருந்த பீர்பால் அதில் சிறிது நேரம் தங்கிச் செல்லலாம் என முடிவு எடுத்தார். அது அயல்நாட்டு மன்னனின் அரண்மனையாகும். அந்த விஷயம் பீர்பாலுக்கு தெரியாது. அக்பரின் ஆளுகைக்குட்பட்ட மண்ணில் இருக்கும் அரண்மனை என்றே அவர் நினைத்தார். அந்த அரண்மனையின் பின்புறம் சென்று குதிரையைக் கட்டிவிட்டு பார்த்தார். ஆள் அரவமே இல்லை. அரண்மனைக்குள் புகுந்ததும் அடுக்களை ... Read More »
Monthly Archives: April 2016
டில்லி வந்து சேர்ந்த பீர்பால்!!!
April 17, 2016
டில்லி வந்து சேர்ந்த பீர்பால், புரோகிதர் தொழில் செய்து பிழைப்பு நடத்தினார். நாளடைவில் நகைச்சுவை கலந்த தன் பேச்சுத் திறத்தாலும், அறிவாற்றலாலும் டில்லி மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றார். இவரது புகழ் அக்பர் சக்கரவர்த்தியின் காதிலும் விழுந்தது. ஒரு நாள் அக்பரது பணியாள் அக்பருக்கு தாம்பூலம் கொடுக்கும் போது வெற்றிலையில் சுண்ணாம்பைச் சிறிது அதிகம் சேர்த்து விட்டான். அதை வாங்கி மென்ற சக்கரவர்த்தியின் வாயும், நாக்கும் எரிச்சலாகி புண்ணாகிவிட்டது. இதனால் கோபமடைந்த சக்கரவர்த்தி பணியாளுக்கு ஒரு விசித்திரமான ... Read More »
பாசிப்பயறு!!!
April 17, 2016
பாசிப்பயறு இந்தியாவில் விளையக்கூடிய சத்தான பயறுவகை உணவாகும். பண்டைய காலம் முதலே இது இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்துள்ளது. இதன்பின்னர் தெற்கு சீனா, இந்தோ – சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த நூற்றாண்டுகளில்தான் மேற்கு இந்திய தீவுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு விளைவிக்கப்படுகிறது. பாசிப்பயறில் உள்ள சத்துக்கள் இதில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன. கர்ப்பிணிகளுக்கு ஏற்றது கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். ... Read More »
மூவர் இரு காலால் நடக்கக் கண்டாயோ?
April 17, 2016
மூவருக்கு இரு கால் ஒரு கணவன் எதோ வருத்தத்தில் தன மனைவி மேல் கோபித்துக் கொண்டு அடித்துத் துரத்தி விட்டான்.முன் கோபத்தால் அப்படிச் செய்து விட்டாலும் பிறகு அவளைத் தேடிக் கொண்டு புறப்பட்டான். வழியிலே ஒருவனைக் கண்டு, ”ஆற்றுக்குக்குப் பகையாய் இருக்கும் மரத்தின் கீழே இருந்து வேலியைப் படல் கட்டுகிறவனே! மூவர் இரு காலால் நடக்கக் கண்டாயோ?”என்று கேட்டான். அதற்கு அவன் விடை சொல்கிறான், ”அவள் செத்து மூன்று நாள் ஆச்சு; அவளைக் கொன்றவன் செத்து ஆறு ... Read More »
காளைமாட்டின் பால்!!!
April 16, 2016
சக்ரவர்த்தி அக்பருக்கு பீர்பாலை மிகவும் பிடித்திருந்தது. அதைக்கண்டு தர்பாரில் பலருக்கு பீர்பால் மீது பொறாமை ஏற்பட்டது. அவர்களில் அரண்மனை வைத்தியரான ஹகீம் ஜாலிம்கானும் ஒருவர்! அவரும், பீர்பால் மீது பொறாமை கொண்ட மற்றவர்களும், பீர்பாலை சிக்கலில் ஆழ்த்த நல்லதொரு சந்தர்ப்பத்தை எதிர் நோக்கியிருந்தனர். ஒரு நாள் அக்பருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அரண்மனை வைத்தியர் ஜாலிம்கான் அவசரமாக வரவழைக்கப்பட்டார். அவர் பரபரப்புடன் அரண்மனையில் நுழைந்து கொண்டிருக்கையில் பீர்பால் மீது பொறாமை கொண்டிருந்த சிலர் அவரை வழி மறித்தனர். ... Read More »
பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி!!!
April 16, 2016
பொழுது புலர்ந்தது, யாம்செய்த தவத்தால், புன்மை யிருட்கணம் போயின யாவும், எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி, தொழுதுனை வாழ்த்தி வனங்குதற்கு இங்குஉன் தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே வியப்பிது காண்! பள்ளி யெழுந்தரு ளாயே! புள்ளினம் ஆர்த்தன! ஆர்த்தன முரசம், பொங்கியது எங்குஞ் சுதந்திர நாதம் வெள்ளிய சங்கம் முழங்கின, கேளாய்! வீதியெ லாம்அணு குற்றனர் மாதர்! தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன் சீர்த்திரு நாமமும் ... Read More »
தெனாலிராமன் குதிரை!!!
April 16, 2016
கிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படையும் வலிமையுள்ளதாக இருந்தது சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர். அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு குதைரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு ஊட்டளித்து வளர்த்தனர். அதே போல் தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது. ஆனால் தெனாலிராமனோ ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்து புல் போடுவதற்கு மட்டுமே ... Read More »
பிடித்த பொருள்களை எடுத்துச் செல்லலாம்!!!
April 16, 2016
சக்கரவர்த்தி அக்பர் திடீர் திடீரென உணர்ச்சிவசப்படுபவர்! அவர் எப்போது உற்சாகத்துடன் இருப்பார், எப்போது எரிந்து விழுவார் என்று சொல்ல முடியாது. பல சமயங்களில், அவரையே கேலி செய்வதுபோல் அமைந்துள்ள நகைச்சுவைத் துணுக்குகளைக் கேட்டும் கோபம் அடையாமல் சிரிக்கவும் செய்வார். ஆனால், சில சமயங்களில் சில சாதாரண துணுக்குகள் கூட அவரை கோபமுறச் செய்யும். தர்பாரிலுள்ள அனைவருக்கும் அக்பரின் அடிக்கடி மாறுபடும் மனநிலையைப் பற்றித் தெரியும். அக்பரின் பேகத்திற்கும் இது தெரியும். ஆனால், பேகம் அதைப் பொருட்படுத்தாமல் பல ... Read More »
புதுமைப் பெண்!!!
April 16, 2016
போற்றி போற்றி!ஓர் ஆயிரம் போற்றி! நின் பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றிகாண் சேற்றி லேபுதி தாக முளைத்த தோர் செய்ய தாமரைத் தேமலர் போலோளி தோற்றி நின்றனை பாரத நாடைலே; துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை சாற்றி வந்தனை,மாதரசே! எங்கள் சாதி செய்த தவப்பயன் வாழி நீ! 1 மாதர்க் குண்டு சுதந்திரம் என்றுநின் வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல் நாதந் தானது நாரதர் வீணையோ? நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ? வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே ... Read More »
நாய்வாலை நேராக்கிய கதை!!!
April 15, 2016
ஒருநாள் அரசவையில் ”நாய் வாலை நேராக்க முடியுமா?” என்பது பற்றி சர்ச்சை ஏற்பட்டது. நாய் வாலை நேராக்க முடியாது என்று சிலரும் நாய் வாலை முறையான பயிற்சியின் மூலம் நேராக்கி விடலாம் என்று சிலரும் கூறினர். அதையும் சோதித்துப் பார்க்க மன்னர் விரும்பினார்.சிலருக்கு நாய்கள் கொடுக்கப்பட்டன. தெனாலிராமனும் ஒரு நாயைப் பெற்றுச் சென்றான். அவைகளைப் பராமரிக்க பணமும் கொடுக்கப்பட்டது. அவரவர்களுக்கு ஏற்பட்ட யோசனைப்படி நாய்வாலை நேராக்க முயற்சித்தனர். ஒருவர் நாய்வாலில் கனமான இரும்புத் துண்டைத் தட்டி விட்டார். ... Read More »