Home » 2016 » April (page 15)

Monthly Archives: April 2016

பிறந்த நாள் பரிசு!!!

பிறந்த நாள் பரிசு!!!

மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. ஆடம்பரமாக விழா நடந்தது. அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதைசெலுத்தினார்கள். தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம்மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்னபரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படிதெனாலிராமனிடம் கூறினார் அரசர். தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக்கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில்சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை. அதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறியபொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக்காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது. அவையினர் கேலியாகச் சிரித்தனர். அரசர் , “”ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம்என்ன?” எனக் கேட்டார். “”அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்றதத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராகஇருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப்போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராகஇருக்க வேண்டும். “”அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில்ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்தபுளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும்ஓடும்போல இருங்கள்!” என்றான். அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்கஆசனத்தைவிட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, “”ராமாஎனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்குஇத்தனை ஆடம்பரம் தேவையில்லை. “”பொக்கிஷப் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்துவிட்டேன். உடனே விசேசங்களை நிறுத்துங்கள். இனி என்பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனைசெய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச்செலவு செய்யக்கூடாது,” என உத்தரவிட்டார். தெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும்பாராட்டினர். Read More »

அழகுத் தெய்வம்!!!

அழகுத் தெய்வம்!!!

அழகுத் தெய்வம் மங்கியற்தோர் நிலவினிலே கனவிலிது கண்டேன் வயதுபதி னாறிருக்கும் இளவயது மங்கை பொங்கிவரும் பெருநிலவு போன்றவொளி முகமும் புன்னகையின் புதுநிலவும் போற்றவருந் தோற்றம் துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து தூங்காதே யெழுந்தென்னைப் பாரென்று சொன்னாள். அங்கதனிற் கண்விழித்தேன் அடடாவோ! அடடா! அழகென்னும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்தேன். 1 யோகந்தான் சிறந்ததுவோ தவம் பெரிதோ என்றேன்; யோகமே தவம் தவமே யோக மென உரைத்தாள். ‘ஏகமோ பொருளன்றி இரண்டாமோ’ என்றேன்; ‘இரண்டுமாம், ஒன்றுமாம், யாவுமாம்’ என்றாள். ‘தாகமறிந் ... Read More »

கிடைத்ததில் தர்மம்!!!

கிடைத்ததில் தர்மம்!!!

ஒருநாள் மாலைப்பொழுதில், அக்பரும் பீர்பாலும் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, ‘வழியில் ஏதேனும் ஒரு பொருளைக் கண்டு எடுத்தால் அதில் எவ்வளவு தருமம் செய்வீர்?” எனக் கேட்டார் அக்பர். ‘நான்கில் ஒரு பகுதியைக் கொடுத்து விடுவேன்’ என்றார் பீர்பால். சிறிது தூரம் சென்றதும், ஒரு ரூபாய் கிடைத்தது பீர்பாலுக்கு ! ஆனால் அதன் மதிப்பு முக்கால் ரூபாய்தான். அதைக் கண்ட அக்பர், ”நீர் அதிர்ஷ்டசாலி, கண்டெடுத்த ஒரு ரூபாயிலிருந்து நான்கின் ஒரு பகுதியை தர்மம் செய்துவிடும்’ எனக்கூறினார். ... Read More »

சீரகம் / போசனகுடோரி!!!

சீரகம் / போசனகுடோரி!!!

சீரகம் / போசனகுடோரி “ போசனகுடோரியைப் புசிக்கில் நோயெல்லாமருங் காசமிராதக் காரத்திலுண்டிட” – தேரன் வெண்பா இந்த போசனகுடோரி ஒரு அருமருந்து… மானிடத்திற்கு இயற்கை கொடுத்த கொடைகளில் ஒன்று… இதனை உணர்ந்த நம் முன்னோர்கள் இதனை தினசரி நாம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற அக்கறையிலும், நோய்நொடி இல்லாமல் வாழவேண்டும் என்ற பேராவலிலும் இதன் சுவையை நமக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்… சைவ, அசைவ குழம்புகள், கூட்டு, பொரியல் முதல் ரசம் வரை எல்லாவற்றிலும் இந்த போசனகுடோரியை சேர்த்தால் ... Read More »

புற்றுநோயை எதிர்க்கும் கேரட்!!!

புற்றுநோயை எதிர்க்கும் கேரட்!!!

கேரட் சாப்பிடுவதால் நம்முடைய உடலில் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் உருவாகிறது என்பது தெரிந்த செய்திதான். ஆனால் கேரட்டில் உள்ள எந்த பகுதி புற்றுநோய் கட்டிகளை அழிக்கிறது என்பது இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Carrot இங்கிலாந்திலும், டென்மார்க்கிலும் உள்ள நியூகாஸில் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுபற்றிய ஆராய்ச்சிகளை எலிகளைக் கொண்டு செய்துவருகிறார்கள். எலிகளில் காணப்படும் புற்றுநோய்க்கட்டிகள் மூன்றில் ஒருபங்காக குறைவது எதனால் என்பதற்கான விடை இப்போதுகிடைத்திருக்கிறது.காரட்களை சேமிக்கும்போது வேர்ப்பகுதிகளில் கறுப்பு நிற புள்ளிகள் தோன்றி அழுகல் தொடங்கி விடுகிறது. இந்த நோய்க்கு ... Read More »

தொட்டாற்சுருங்கி..!

தொட்டாற்சுருங்கி..!

காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் காணப்படும் தொட்டாற்சுருங்கி செடி காந்த சக்தி உடையது என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தெய்வீக மூலிகையை தொடர்ந்து 48 நாட்டு தொட்டுவந்தால் மனோசக்தி அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 1300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிரேக்க மருத்துவத்தில் தொட்டாற்சுருங்கி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தற்போது ஆயுர்வேத மருத்துவத்திலும் யுனானி மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. தோல்வியாதிகள், குழந்தைப்பேறு பிரச்சனை, ஆண்மைகுறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கு மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாக உள்ளது தொட்டாற்சுருங்கி. ‘நமஸ்காரி’ என்று அழைக்கப்படும் இந்த மூலிகை காந்த சக்தி ... Read More »

புத்தகம்!!!

புத்தகம்!!!

தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்கப்பட்டபோது, ‘புத்தகங்களுடன் மகிழ்ச்சி-யாக வாழ்ந்து விட்டு வருவேன்’ என்று பதிலளித்தார் ஜவஹர்லால்நேரு ‘என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று’ என்றார் பெட்ரண்ட் ரஸல். மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் ‘புத்தகம்’ என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ‘கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும்’ என்றாராம் தந்தை பெரியார். ‘வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் ... Read More »

தற்பெருமை அழிவைத்தரும்!!!

தற்பெருமை அழிவைத்தரும்!!!

* மருத்துவர்கள் நோயாளிகளிடம் ‘எனக்கு வியாதியே இல்லை’ என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்கும்படி அறிவுரை கூறுகின்றனர். நோயாளிகள் அப்படிச் சொல்வதனால் வியாதிகள் அகலுவதற்கான சாதகமான நிலை உண்டாகிறது. அதுபோல, இவ்வுலகில் நீ தாழ்ந்தவன் என்று எண்ணிக் கொண்டால், சீக்கிரத்தில் தாழ்ந்தவனாகவே ஆகிவிடுவாய். அளவிட முடியாத அளவிற்குத் திறமை உன்னிடம் இருக்கிறது என்று எண்ணிக் கொண்டால், அவ்வாறே திறமைகள் மிகுந்தவனாய் ஆகிவிடுவாய். * கல்லானது தண்ணீருக்குள் வருடக்கணக்கில் கிடந்தாலும் அதனுள் தண்ணீர் நுழையாது. ஆனால், களிமண் தண்ணீருக்குள் ... Read More »

மீண்டும் வெளிநாட்டுப் பயணம்

மீண்டும் வெளிநாட்டுப் பயணம்

தந்தையின் மரணத்திற்குப் பின்னர் சுபாஷ் மீண்டும் வியன்னா பயணமானார். வியன்னாவில் நடைபெற்ற இந்திய மாணவர் மாநாட்டில் கலந்து கொண்டு சுபாஷ் சிறப்புரை ஆற்றினார். பின்னர் ரோம் நகரில் நடைபெற்ற ஆசிய மாணவர் சங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார் சுபாஷ். அப்போது அந்நிகழ்ச்சியில் தலைமை தாங்கிய முசோலினியை சந்தித்துப் பேசினார். இந்திய சுதந்திரப் போரைப்பற்றி இருவரும் கலந்தாலோசித்தார்கள். ரோம் நகரிலிருந்து யூகோஸ்லாவியா நாட்டிற்குச் சென்று அங்கு சிலகாலம் தங்கினார். 1935 ல் சுபாஷ் ஜெர்மனி நாட்டிற்குச் ... Read More »

மேயர் சுபாஷ்!!!!

மேயர் சுபாஷ்!!!!

சுபாஷ் சிறைக்குள் இருந்த சமயத்தில் கல்கத்தா நகர மாநகராட்சிக்கு மேயர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. சிறைக்குள் சுபாஷ் தாக்கப்பட்ட விஷயம் அறிந்த வங்காள மக்கள் பிரிட்டிஷ் அரசின் மீது கடும்கோபத்தில் இருந்தார்கள். அரசை பழிவாங்கக் காத்திருந்த மக்களுக்கு இந்த மேயர் தேர்தல் நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது. சிறைக்குள் இருந்த சுபாஷை கல்கத்தா நகர மேயராக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். எனவே சிறைக்குள் இருந்த சுபாஷ் சார்பாக மக்களே ஒரு மனுவை சுபாஷ் சார்பில் தாக்கல் செய்தார்கள். தேர்தல் ... Read More »

Scroll To Top