விஜய நகரத்தில் ஒரு சேட் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான். அதாவது ரூபாய்க்கு ஐம்பது பைசா வட்டி இதனால் வட்டிக்கு அவனிடம் பணம் வாங்கும் மக்கள் அவதியுற்றனர். இதையறிந்த தெனாலிராமன் அந்த சேட்டை நயவஞ்சகமாக திருத்த திட்டம் தீட்டினான். அந்த சேட் பாத்திரங்களையும் வாடகைக்கு விடுவதுண்டு. ஒரு நாள் தெனாலிராமன் சேட்டைச் சந்தித்து “தன் மகனுக்குக் காதணி விழா நடைபெறுவதாகவும் அதற்குச் சில பாத்திரங்கள் வாடகைக்கு வேண்டுமென்றும் ... Read More »
Monthly Archives: April 2016
இன்றைய தகவல் :வெந்தயம்!!!
April 6, 2016
நமது முன்னோர் சமையலறையிலேயே வைத்தியத்தையும் வைத்திருந்தனர். அதில் முக்கியமானது வெந்தயம். வெந்தயத்தில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் சி, நியாசின், பொட்டாசியம், இரும்பு, ஆல்கலாய்டு போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.மேலும் கூட்டு டையோஸ்ஜெனின் உள்ளதால், ஈஸ்ட்ரோஜென் போன்ற குணங்கள் மற்றும் ஸ்டீராய்டல் சப்போனின் போன்றவைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. கொலஸ்ட்ராலை குறைக்க வெந்தயம் உதவி செய்கிறது. முக்கியமாக கொழுப்புப்புரதத்தை குறைக்க உதவுகிறது. இதய நோய்க்கு வெந்தயம் ஒரு சிறந்த மருந்து. வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து இதய அடைப்பு இடர்பாட்டை குறைக்கும். இதில் ... Read More »
குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி!!!
April 6, 2016
இன்றைய தகவல்: —————————- குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால், அடிக்கடி ஜலதோஷமும் சளித் தொந்தரவும் ஏற்படுகிறது. வீட்டு வைத்தியத்தில் இதற்கு வழி இருக்கிறதா? அரை இன்ச் அளவுள்ள சுக்கை நன்றாக நசுக்கி, அதை ஒரு கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள். அது கால் கப் ஆக வரும் வரை கொதிக்க விடவும். பிறகு அந்தத் தண்ணீரை வடிகட்டி, சம அளவு பால் கலந்து, அரை டீஸ்பூன் வெள்ளை கற்கண்டு பவுடர் கலந்து கொடுக்கலாம். ... Read More »
கண்களையும் கவனியுங்கள்!!!
April 5, 2016
கண்களையும் கவனியுங்கள் ************************* நமது சந்தோஷம், துக்கம் எதுவானாலும் அதை காட்டிக் கொடுப்பது கண்கள் தான். அப்படிப்பட்ட கண்கள் புத்துணர்ச்சியுடன் இருந்தால் தானே பார்க்க அழகாக இருக்கும். கண்களின் அழகை பராமரிக்க தினமும் எட்டு மணிநேரம் தூக்கம் மட்டுமல்லாமல் கால்சியம், விட்டமின்கள் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். அதாவது பால், பால் உணவுகள், கீரை வகைகள், முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப்பழங்கள் பச்சை காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். கண்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடிகாரம் சுற்றும் ... Read More »
தெனாலியின் விளக்கம்!!!
April 5, 2016
கிருஷ்ணதேவராயருக்கு ஒரு நாள் மிகவும் வருத்தமாக இருந்தது. “நாம் மக்களுக்கு எவ்வளவு செய்தாலும் அவர்களுக்கு அந்த பணம் ஏன் போய்ச் சேருவதில்லை?’ என்பதுதான் அந்த வருத்தம். இதன் காரணம் என்ன என்பது புரியாமல் தவித்தார் மன்னர். தன்னுடைய சந்தேகத்தை தெனாலிராமனிடம் கேட்டார் மன்னர். “”ராமா! இதற்கு என்ன காரணம்? உனக்கு தெரியுமா?” “”அரசே! இதனை நான் ஒரு நாடகம் போல் விளக்க விரும்புகிறேன். எனக்கு உடனே பனிக்கட்டி ஒன்றை கொண்டு வந்து தரச் சொல்லுங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு ... Read More »
நாக தேவதை!!!
April 5, 2016
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மேல் ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின் கீழே இறங்கி அவன் அதைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில் அதனுள்இருந்த வேதாளம் எள்ளி நகைத்து, “மன்னனே, உன்னுடைய முயற்சி பாராட்டுக்குரியது. தனது லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக உயிரையும் பொருட்படுத்தாத உன்னைப் போல் வெகு சிலரே இருப்பர். ஆனால் உன்னுடைய லட்சியம் நிறைவேறுமா என்று தெரியவில்லை. லட்சியத்தை நிறைவேற்றக் கூடிய வாய்ப்பு இருந்தும் நீ அதைத் ... Read More »
வியாபார தந்திரம் நிஜ வாழ்க்கையில் வேடிக்கைக்காக மட்டும்
April 5, 2016
“வியாபார தந்திரம் நிஜ வாழ்க்கையில் (வேடிக்கைக்காக மட்டும். முயற்சி செய்ய வேண்டாம்!!! ) உரையாடல் 1 : அப்பா: மகனே நான் உனக்கு திருமணம் செய்து வைக்கபோகிறேன்; பெண்ணையும் நானே தேர்ந்தெடுக்கப் போகிறேன். மகன்: முடியாது. அப்பா: அந்தப் பெண் உலக கோடீஸ்வரர் பில்கேட்சின் மகளாக இருந்தால்… மகன்: அப்படியானால் சம்மதம். பின் அப்பா பில்கேட்சிடம் சென்று பேசினார். உரையாடல் 2 : அப்பா: நான் உங்கள் மகளை என் பையனுக்குத் திருமணம் பேசி முடிப்பதற்காக வந்திருக்கிறேன். ... Read More »
வெற்றி வேண்டுமா? இதோ 5 டிப்ஸ்
April 5, 2016
“எல்லாம் செய்துவிட்டேன், ஆனாலும் வெற்றி கழுவும் மீனில் நழுவும் மீனாக இருக்கிறது” என்பவர்கள் இங்கே வாருங்கள். இந்த 5 வழிமுறைகளில் ஒன்றைப் பற்றிக்கொண்டால் உங்கள் வாழ்க்கையில் இனி வெற்றி வெற்றி வெற்றி மட்டும்தான். வெற்றியைத் தேடுபவர்களுக்குப் புதிய பொன்மொழிகள் இதோ. 1 கைகளை நம்புவோம்! கைரேகையை அல்ல… சில சமயங்களில் எதேச்சையாக, அதிர்ஷ்டவசமாக, சில விஷயங்கள் உங்களுக்குச் சாதகமாக நிகழ்ந்துவிடலாம். அப்படிக் காற்று உங்கள் பக்கம் வீசும் சமயத்திற்காக நீங்கள் காத்திருந்தால், நல்ல விஷயங்கள் உங்கள் கல்லறையில்தான் ... Read More »
கிடைத்ததில் சம பங்கு
April 4, 2016
ஒருநாள் கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடகநாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத்தவிர மற்ற எல்லா முக்கியப்பிரமுகர்களுக்கும் அழைப்புவிடுத்திருந்தார். இந்நிகழ்ச்சியில் அரசியும் மற்றும் சில பெண்களும் கலந்துகொள்வதால் தெனாலிராமன் இருந்தால் ஏதாவது கோமாளித்தனம்செய்து நிகழ்ச்சியை நடைபெறா வண்ணம் தடுத்துவிடுவான் எனஎண்ணி தெனாலிராமனை மட்டும் நாடக அரங்கினுள் விடவேண்டாமென்று வாயிற்காப்போனிடம் கண்டிப்புடன் சொல்லிவிட்டார் மன்னர். இதை அறிந்தான் தெனாலிராமன் எப்படியாவது அரங்கத்தினுள்சென்று விடுவது என தீர்மானித்துக் கொண்டான். நாடகம் நடைபெறும், அரங்கின் வாயிலை நெருங்கினான்தெனாலிராமன். உள்ளே செல்ல முற்பட்டான். வாயில் காப்பானோ அவனை உள்ளே விட மறுத்து விட்டான்.மீண்டும் மீண்டும் கெஞ்சினான். வாயிற்காப்போன்மசியவில்லை. இந்நிலையில் தெனாலிராமன் ஒரு தந்திரம் செய்தான். “ஐயா,வாயிற்காப்போரே என்னை உள்ளே விட்டால் என்னுடையதிறமையால் ஏராளமான பரிசு கிடைக்கும். அதில் பாதியை உனக்குத்தருகிறேன்” என்றான். இதைக் கேட்ட வாயிற் காப்போன் முதலில்சம்மதிக்காவிட்டாலும் பின்னர் கிடைப்பதில் பாதி பரிசு கிடைக்கிறதேஎன்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டான். அரங்கத்தினுள் செல்ல வேண்டுமானால் மீண்டும் இன்னொரு வாயிற்காப்போனை சமாளிக்க வேண்டியிருந்தது. அவனும் தெனாலிராமனைஉள்ளே விட மறுத்தான். முதற் வாயிற் காப்போனிடம்சொல்லியதையே இவனிடமும் சொன்னான். இவனும் பாதி பரிசுகிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டுவிட்டான். ஒருவருக்கும் தெரியாமல் தெனாலிராமன் ஓர் மூலையில் போய்உட்கார்ந்து கொண்டான். அப்போது கிருஷ்ணன் ஆக நடித்தவன் வெண்ணை திருடிகோபிகைகளிடம் அடி வாங்கும் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.உடனே மூலையில் இருந்த தெனாலிராமன் பெண் வேடம் அணிந்துமேடையில் தோன்றி கிருஷ்ணன் வேடம் போட்டு நடித்தவனைகழியால் நையப் புடைத்து விட்டான். கிருஷ்ண வேடதாரி வலிபொறுக்கமாட்டாமல் அலறினான். இதைப்பார்த்த மன்னர் கடுங்கோபமுற்று மேடையில் பெண்வேடமிட்டுள்ள தெனாலிராமனை அழைத்து வரச்செய்தார் பின் “ஏன்இவ்வாறு செய்தாய்” என வினவினார். அதற்குத் தெனாலிராமன்“கிருஷ்ணன் கோபிகைகளிடம் எத்தனையோ மத்தடி பட்டிருக்கிறான்இப்படியா இவன் போல் அவன் அலறினான்” இதைக் கேட்டமன்னருக்கு அடங்காக் கோபம் ஏற்பட்டது. தெனாலிராமனுக்கு 30கசையடி கொடுக்குமாறு தன் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். இதைக் கேட்ட தெனாலிராமன் “அரசே இப்பரிசை எனக்கு கொடுக்கவேண்டாம். ஏனென்றால் எனக்குக் கிடைக்கும் பரிசை ஆளுக்குப் பாதிபாதி தருவதாக நம் இரண்டு வாயிற்காப்போன்களிடம் உறுதியளித்துவிட்டேன். ஆகையால் இப்பரிசினை, அவர்கள் இருவருக்கும் சமமாகப் பங்கிட்டுக்கொடுங்கள் ” என்று கேட்டுக் கொண்டான். உடனே மன்னர் அவ்விரு வாயிற்காப்போன்களையும் அழைத்துவரச்செய்து இது குறித்து விசாரித்தார். அவ்விருவரும் உண்மையை ஒத்துக் கொண்டார்கள். அவ்விருவருக்கும் தலா 15 கசையடி கொடுக்குமாறு மன்னர்பணித்தார். மேலும் தெனாலிராமனின் தந்திரத்தைப் பாராட்டிஅவனுக்குப் பரிசு வழங்கினார். Read More »
இருளும் ஒளியும்!!!
April 4, 2016
இருளும் ஒளியும் வான நடுவிலே மாட்சியுற ஞாயிறுதான் மோனவெளி சூழ்ந்திடவும் மொய்ம்பிற் கொலுவிருந்தான். மெய்யெல்லாஞ் சோர்வு விழியில் மயக்கமுற, உய்யும் வழியுணரா துள்ளம் பதைபதைக்க, நாணுந் துயரும் நலிவுறுத்த நான்மீண்டு, 5 பேணும்மனை வந்தேன்; பிரக்கினைபோய் வீழ்ந்துவிட்டேன், மாலையிலே மூர்ச்சைநிலை மாறித் தெளிவடைந்தேன்; நாலுபுறமுமெனை நண்பர் வந்து சூழ்ந்துநின்றார். “ஏனடா மூர்ச்சையுற்றாய்? எங்கு சென்றாய்? ஏது செய்தாய்? வானம் வெளிறுமுன்னே வைகறையி லேதனித்துச் 10 சென்றனை என்கின்றாரச் செய்தி என்னே? ஊணின்றி நின்றதென்னே?” என்று நெரித்துவிட்டார் கேள்விகளை, ... Read More »