ஒரு சமயம் விஜயநகர ராஜ்யத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவ மழை தவறி விட்டதால் குளம், குட்டை, ஏரி எல்லாம் வற்றிவிட்டது. தெனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் நீர் குறைந்து அதிக ஆழத்திற்குப் போய்விட்டது. இதனால் தினமும் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மிகவும் சிரமப்பட்டான் தெனாலிராமன். இந்த சமயத்தில் ஒரு நாள் இரவு நான்கு திருடர்கள் தன் தோட்டத்தில் பதுங்கி இருப்பதைக் கண்டான். உடனே வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம், “அடியே, நம் நாட்டில் பருவ மழை தவறிவிட்டதால், ... Read More »
Monthly Archives: April 2016
புடலங்காய்!!!
April 8, 2016
புடலங்காய் நம் தமிழர்கள் வீட்டில் நிச்சயம் சமைக்கும் காய். புடலங்காய் கூட்டு, புடலங்காய் பொறியல், புடலங்காய் குழம்பு என்று நம் மக்கள் தங்களது கைவண்ணத்தில் சமையலில் அசத்துவர். இந்த காய் நம் முன்னோர்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த காய். இதன் பயன் அறிந்து தான் சமையலில் வாரம் ஒரு முறை இக்காயை உண்டு வந்துள்ளனர். இது ஓர் அற்புதமான சத்துள்ள உணவு கிடைக்கும் போது வாங்கி சாப்பிடுங்கள். புடலன்க்காயில் நன்கு முற்றிய கையே உண்பது நல்லது அல்ல ... Read More »
கொழுப்பைக் கரைக்கும் தேங்காய்!
April 8, 2016
தேங்காயில் உள்ள கொழுப்பு அமிலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று ஓர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மருத்துவ உலகினர் அனை வரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தேங்காயில், தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம். உடலுக்கு ஆகாது. குறிப்பாக சர்க்கரை நோ யாளிகள், இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக்கூடாது என்ற பரப்புரைக்கு இந்த ஆய்வு பெரும் அறைகூவல் விடுத்துள்ளது. அதே வேளையில் தென்னையையும் அதன் முத்தான தேங்காயையும் சித்த மருத்துவம் உள்பட ... Read More »
நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை!!!
April 7, 2016
தெனாலிராமன் ஒரு முறை சந்தைக்குச் சென்று ஐம்பது நாணயங்கள் கொடுத்து குதிரை ஒன்று வாங்கி வந்தான்.அதில் ஏறி சவாரி செய்யப் பழகிக் கொண்டிருந்தான். ஒருநாள் அரசர் தன் விலை உயர்ந்த குதிரை மேல் ஏறிக் கொண்டு இராமனையும் உடன் வருமாறு அழைத்தார். தெனாலிராமனும் தன் குதிரை மீது ஏறிக் கொண்டு மன்னருடன் உலாவப் புறப் பட்டான். அரசரின் குதிரை அழகாக நடை போட இராமனின் குதிரையோ தளர்ந்த நடை போட்டது. கிருஷ்ணதேவராயர் இந்தக் குதிரையைப் பார்த்து கடகடவெனச் ... Read More »
எளிய பாட்டி வைத்தியம்:-
April 7, 2016
1. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும். 2. கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும். 3. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும். 4. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும். 5. தினமும் குடிநீரைக் காய்ச்சும் ... Read More »
கூனனை ஏமாற்றிய கதை!!!
April 7, 2016
ஒரு முறை ராஜகுருவை தெனாலிராமன் அவமானப் படுத்தி விட்டான் என்ற குற்றச் சாட்டு அரசவைக்குக் கொண்டு வரப்பட்டது. தெனாலிராமனின் எந்த சமாதானத்தையும் அரசர் கேட்கத் தயாராக இல்லை. இராமனுக்குத் தண்டனையை அளித்து விட்டார். இராமன் மீது பொறாமை கொண்ட ராஜகுருவும் மன்னனைத் தூண்டி விட்டார். ராஜகுருவை அவமதித்தது மன்னனையே அவமதித்ததாகும். எனவே இக்குற்றத்திற்கு மன்னிப்பே கிடையாதுஎன்று சொல்லி ராஜகுருவையே தண்டனையளிக்கும்படி கேட்டுக் கொண்டார் மன்னர் .ராஜகுரு தண்டனையைக் கூறினார்.” கழுத்து வரை தெனாலிராமனை மண்ணில் புதைத்து விட்டு யானையின் ... Read More »
எளிய இயற்கை வைத்தியம்-2
April 7, 2016
நார்த்தங்காய்: இதை ஊறுகாய் செய்து சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும், மலச்சிக்கலைப் போக்கும் சக்தி உண்டு. முருங்கைப் பிஞ்சு: இதை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து இரண்டு வேளை வீதம், 3 நாட்கள் சாப்பிட குணமாகும். காரட், பீட்ரூட்: சாப்பிட்டு வந்தால், மஞ்சள் காமாலை குணமாகும். உடல் வளர்ச்சி நன்றாக இருக்கும். வெண்டைக்காய்: உணவில் அடிக்கடி சேர்த்துவர மூளை பலமடையும், கண்கள் குளிர்ச்சியடையும், எலும்பு பலப்படும். பேரிக்காய்: தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், இதய படபடப்பு நின்றுவிடும். ... Read More »
மரணம் வென்ற நம்மாழ்வாருக்கு இன்று பிறந்த நாள்…!
April 7, 2016
* கறுப்புச் சட்டை அணிந்த பகுத்தறிவுப் பெரியார் செய்தது அரசியல்- சமூகப் புரட்சி எனில், பச்சைத் துண்டு அணிந்த இந்தப் பசுமைப் பெரியார் செய்தது இயற்கை வேளாண் புரட்சி. நம் மண்ணின் மேன்மையை, பயிர்த் தொழிலின் தொன்மையை, இயற்கையின் பேராற்றலை… இந்தத் தலைமுறைக்கு உரத்துச் சொன்ன உழவன் கிழவன். ‘விவசாயம்’ என்ற முறிந்துகொண்டிருந்த கிளையை, மரத்துடன் ஒட்டவைத்த நம்மாழ்வார்… நம் காலத்தின் நாயகன்; தமிழ் நிலத்தின் தாய் விதை! * 1937-ல் பிறந்தது முதல் 2013 டிசம்பர் ... Read More »
ஒரு நிர்வாகியின் டைரிக் குறிப்பு
April 6, 2016
சர்வதேச அளவில், நிர்வாகவியல் நிபுணர்கள் ஒரு சர்ச்சையைப் பெரிதாக விவாதித்து முடிவு கண்டிருக்கிறார்கள். தரத்தைத் தக்க வைத்துக் கொள்வது எந்தத் துறையில் கடினம்? உற்பத்தித் துறையிலா? சேவைத் துறையிலா? உற்பத்தித் துறை என்றுதான் பலருக்கும் சொல்லத் தோன்றும். உண்மையில்,சேவையின் தரத்தைத் தக்க வைத்துக் கொள்வதுதான் மிகவும் கடினம். ஏனென்றால்உற்பத்தியான பொருள், வாடிக்கையாளரைச் சென்று சேர்வதற்கு முன்பாக“பரிசோதனை இடைவெளி” உள்ளது. இதன் காரணமாக, உற்பத்தியில் குறையிருந்தால்,அந்த பொருளைத் தூக்கியெறிந்துவிட்டுப் புதிதாக உற்பத்தி செய்து வெளியே அனுப்பவாய்ப்புண்டு. ஆனால், சேவைத் துறை அப்படியல்ல. சேவை, வாடிக்கையாளர் முன்புதான்வெளிப்படுகிறது. வெளிப்படும் கணமே வாடிக்கையாளரைச் சென்றடைகிறது. எனவே,சேவையின் தரத்தைக் கட்டிக் ... Read More »
வித்தைக்காரனை வென்ற கதை!!!
April 6, 2016
தெனாலி ராமன் கிருஷ்ணதேவராயரின் புகழைக் கேள்விப் பட்டு அவரைக் காண்பதற்காக விஜயநகரத்தை நோக்கிப் புறப்பட்டான். பல நாட்கள் அவ்வூரில் தங்கி முயற்சித்தும் அரசரைக் காண இயலவில்லை. எப்படியாவது அரசரைப் பார்த்து விடுவது என்று முயற்சித்துக் கொண்டே அவ்வூரிலேயே தங்கியிருந்தான். தினமும் அரண்மனைக்குப் போவதும் திரும்பி வருவதுமாக இருந்தான். ஒருநாள் வித்தைகள் செய்து வேடிக்கைகள் செய்து காட்டும் செப்படி வித்தைக்காரனைச் சந்தித்தான். அவனும் அரசரிடம் தன் வித்தைகளைக் காட்டிப் பரிசு பெரும் எண்ணத்துடன் இருப்பதைப் புரிந்து கொண்டான். அவனுடனேயே ... Read More »