மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள். ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம். மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்கு பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர். பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் ... Read More »
Monthly Archives: April 2016
வெல்லம்!!!
April 11, 2016
ரத்த சோகையை நீக்கும் வெல்லம் ! வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் ரத்த சோகைக்கு மிகவும் நல்லது. தவிர இதிலுள்ள சத்துக்கள் பொட்டாஷியம், சோடியம், கால்ஷியம், பாஸ்பரஸ், மற்றும் ஜின்க் ஆகும். வெல்லத்தில் மினரல்ஸும் அதிகம் இருப்பதால் சத்துணவாக இது அமைந்துள்ளது. இதில் மேக்னிஷியம் இருப்பதால் நரம்பு மண்டலத்தை உறுதிப்படுத்தும், தசைகளை ரிலாக்ஸ் செய்யும். பலன்கள்: 1. எலுமிச்சைச் சாறு பிழிந்து அதில் வெல்லத்தை தட்டிப் போட்டு பருகினால் உடனடியாக சோர்வு நீங்கி உடல் புத்துணர்ச்சி ... Read More »
இதுதான் உலகம்..! இதுதான் வாழ்கை…!
April 11, 2016
ஒரு ஏரிக்கரையில் சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, “என்னை காப்பாற்று.., என்னை காப்பாற்று..!” என்று ஆற்றில்ஒரு குரல்கேட்டது. சிறுவன் எட்டிப்பார்த்தான். முதலையொன்று வலையில் சிக்கி துடித்துகொண்டுருந்தது. “இல்லை..! இல்லை..!உன்னை காப்பாற்றினால் நீ என்னை கொண்றுவிடுவாய்..!” என்றான் சிறுவன். “சத்தியமாய் கொல்ல மாட்டேன் என்னை காப்பாற்று.”என்றது முதலை. முதலையின் வார்த்தையை நம்பி வலையை அறுத்தான் சிறுவன். முதலையின் தலைவெளியே வந்ததும் உடனே சிறுவனின் காலைகவ்வி விழுங்க துவங்கியது. ஏய் நன்றிகெட்ட முதலையே நீ செய்வது உனக்கே நியாயமா ... Read More »
தாய்மொழியைக் கண்டுபிடித்த தெனாலிராமன்!!!
April 11, 2016
கிருஷ்ணதேவராயர் அரசவைக்கு ஒரு பன்மொழிப் புலவர் வந்தார். “உங்கள் அரசவையில் யாரேனும் என் தாய்மொழியைக் கண்டுபிடித்துச் சொல்ல முடியுமா?” என்று சவால் விட்டார். இராயர் அரசவையிலிருந்த அஷ்டதிக் கஜங்கள் எனப்பட்ட எட்டு பெரும் புலவர்களும் பல்வேறு மொழிகளில் அவரிடம் கேள்விகள் கேட்டனர். அவரும் அவரவர் கேட்ட மொழிகளில் தெளிவாகப் பதிலளித்தார். சப்ததிக் கஜங்கள் தோல்வி கண்டு தலைகுனிந்தனர். இராயர் அரசவையை ஏளனமாகப் பார்த்தார் அப் பன்மொழிப் புலவர். “அப்புலவனின் தாய்மொழியை நான் கண்டறிந்து நாளை அரசவையில் தெரிவிக்கிறேன்” என்றான் தெனாலிராமன். அரைகுறை நம்பிக்கையோடு ஒப்புக் கொண்ட ... Read More »
எதிரி!!!
April 11, 2016
குருவே இவ்வுலகில் எதிரிகளே இன்றி மனிதன் வாழ்வது எப்படி? குழந்தாய் எதிரி இன்றி வாழ்வா?அதற்கு அவன் இறந்து விடலாம்.! ஸ்வாமி..! என்ன சொல்கிறிர்கள்?? ஆம் மகனே மனிதனுக்கு எதிரி இன்றி வாழ்வு சிறக்காது..! எப்படி குரு… விளக்குங்கள்..! வாழ்வில் வெற்றி மட்டுமே இருந்தால் முதலில் கர்வம் வரும் தான் என்ற அகம்பாவம் வரும் யாரையும் மதிக்காத குணம் தலை தூக்கும்..!அதே நேரத்தில் எதிரி இருந்தால் உனக்கு அவன் மேலும் அவனுக்கு உன் மேலும் கவனம் இருக்கும்.. சிறு ... Read More »
குதிரையின் வேகம்!!!
April 11, 2016
மன்னர் ஒருவரை புகழ்ந்து பாடி பரிசு பெறச் சென்றார் ஒரு தமிழ்ப் புலவர். மன்னரும் அவரது பாடலைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்து,குதிரை லாயப் பொறுப்பாளரை அழைத்து,புலவருக்குஒரு குதிரையை பரிசாகக் கொடுத்து அனுப்பச் சொன்னார். அந்த பொறுப்பாளருக்கு, நல்ல குதிரை எதையும் புலவருக்குக் கொடுக்க மனதில்லை. எனவே அவர் புலவருக்கு இருப்பதிலேயே வயதானதும்.தொத்தலுமான ஒரு குதிரையை தேர்ந்தெடுத்து புலவரிடம் கொடுத்தார். மறுநாளும் மன்னரைக் காண புலவர் அரண்மனைக்கு வந்தார்.ஆனால் அவர் நடந்தேவந்தார். மன்னர் புலவரைப் பார்த்து,”ஏன் நடந்து ... Read More »
தெனாலிராமன் கேட்ட தண்டனை!!!
April 10, 2016
தெனாலிராமன் இராயரின் சபையில் பல வேடிக்கைகளைச் செய்தபடி இன்பமாக வாழ்ந்து வந்தான். ஒரு சமயம் இராயரிடம் பகை கொண்ட ஒருவன் அவரைக் கொல்ல ஒரு சதிகாரனை அனுப்பினான். சதிகாரனும் தெனாலிராமனின் உறவினன் என்று சொல்லிக் கொண்டு அவனது வீட்டில் தங்கியிருந்தான். ஒரு நாள் தெனாலிராமன் இல்லாத சமயம் பார்த்து அந்த சதிகாரன் இராயருக்குக் கடிதம் ஒன்று எழுதினான். அதில் அரசர் உடனே தன் வீட்டுக்கு வந்தால் அதிசயம் ஒன்றைக் காட்டுவதாக எழுதி தெனாலிராமன் என்று கையொப்பமிட்டு அனுப்பினான். ... Read More »
சூடு பட்ட புரோகிதர்கள்!!!
April 10, 2016
மன்னர் கிருஷ்ணதேவராயருக்கு அவருடைய தாயார் மேல் அன்பும் மரியாதையும் உண்டு. தாய் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அவரது தாயாருக்கு வயோதிகம் ஆகிவிட்டபடியால் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். வைத்தியரை அழைத்து தன் தாயின் உடல் நிலையைப் பரிசோதிக்கச் செய்தார். பரிசோதனை செய்த வைத்தியரும் “தங்கள் தாயார் அதிக நாள் தாங்க மாட்டார்கள். விரைவில் சிவலோகப் பதவி அடைந்து விடுவார்கள்” என்று கூறினார். அது கேட்ட மன்னர் வேதனையுற்றார். தன் தாயாரிடம் சென்று “அம்மா, உங்களுக்கு சாபிட எது ... Read More »
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு!!!
April 10, 2016
ஓர் ஊரில் ஒரு சிவன் கோவில் இருந்தது.கணபதிசர்மா என்று ஒரு அந்தணர் அந்தக் கோவிலில் பூஜை செய்து வந்தார். அவருக்குப் பல ஆண்டுகளாகக் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. தினமும் இறைவனை மனமுருகப் பிரார்த்தித்து வந்தார்.அவர் மனைவியும் விரதங்கள் தானங்கள் என்று செய்து வந்தாள்.ஆனாலும் இவர்களுக்குப் பிள்ளையில்லை. வீட்டில் இருக்கையில் ஒரு மாலைவேளையில் கணபதியின் மனைவி முன் ஒரு சிறிய குட்டி கீரிப்பிள்ளை வீட்டுக்குப் போகத் தெரியாமல் நின்றது. அதைப் பார்த்த அந்தணர் மனைவி அதற்குப் பாலும் சோறும் ... Read More »
நான்கு திருடர்களும் ராமனின் திர்ப்பும்!!!
April 10, 2016
நான்கு திருடர்கள் கூட்டாக பொன்னும் பொருளும் திருடிக்கொண்டு வந்தார்கள். அவைகள் அனைத்தையும் ஒரு தோண்டியில் போட்டு நிரப்பி வைத்தார்கள். அதைப் பத்திரமாக ஓர் இடத்தில் வைக்க ஆசைப்பட்டார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வோர் இடத்தைச் சொன்னார்கள். ஒருவர் கூட மற்றொருவர் யோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் ஒருவருக்கொருவர் நம்பிக்கை இல்லாமல் இருந்தனர். கடைசியாக நால்வரில் ஒருவன், “நாம் வழக்கமாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோமே ஒரு கிழவி வீட்டில் அவளிடம் அதைக் கொடுத்து வைப்போம். நல்ல கிழவி. பத்திரமாகக் காப்பாற்றி வைப்பாள். நாம் நால்வரும் ... Read More »