ஒரு கணவன் மனைவி இருவரும் ஒரு பூங்காவில் பேசிக் கொண்டிருந்தனர்..மனைவி மிகவும் முன் கோபக்காரர்…அவரிடம் அந்தக் கணவர் “நீ உன் கோபத்தை துறந்து விடுதல் நல்லது.. அப்போது தான் இல்லறம் சிறக்கும்”என்றார்…. அந்த அம்மாவும் பதிலுக்கு..
“எனக்கும் அது தாங்க ஆசை..ஆனா என்னால கோபம் வந்தா அடக்க முடியலையே” என்றார்.. உடனே கணவன் “நான் ஒரு புத்தகத்துல படிச்சேன் கோபம் வரும்போது ஒண்ணுல இருந்து நூறு வரைக்கும் எண்ணினா கோபம் போயிடுமாம்”எனச்சொல்ல…
மனைவி”அப்படியா நானும் இனி அதே மாதிரி நடந்துக்கிறேன்”என்றார்..மனைவியிடம் அதை சத்தியமாக வாங்கிக் கொண்டார்,இப்போது அவருக்கு அதை செயல் படுத்தி பார்க்க ஆசை “இப்ப நான் உன்னை கோபப்படுத்தப் போறேன் எங்க அதை அடக்கிக்காட்டு” என்றார்..
மனைவி “எதுக்குங்க அதான் இப்ப எனக்கு கோபம் வரலையே” என்று சொன்னதை காதில் வாங்காமல் ஓங்கி ஒரு அறை விட்டார்.. அந்தம்மாவும் கன்னத்தை பிடித்துக் கொண்டு கண்ணில் நீர் வர “ஒண்ண்ண்ணு,ர்ர்ரெண்டு,ம்ம்மூண்ணு என்று சொல்ல ஆரம்பித்தார்..
ஐம்பது வரும் வரை அந்த ஆவேசம் அடங்கவில்லை.. ஐம்பதுக்கு பிறகு அந்தம்மா உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்து பர பரவென அங்குமிங்கும் உலாத்திக் கொண்டே அய்ய்ய்ய்ம்ம்பத்த்த்த்தி ஓண்ணுணுணு… என்று அதிக ஆவேசமாக ஆரம்பித்தார்..
அவரது கண்கள் நாலாபுறமும் சுழன்று கொண்டிருந்தது… அவரை பீதியுடன் பார்த்துக் கொண்டிருந்தார் கணவர்.. அந்தம்மா இப்போது பல்லை நற நறன்னு கடித்துக் கொண்டே எழ்ழ்ழ்ழுவத்த்த்துஆஆஆறு… எழ்ழ்ழ்ழ்வத்த்த்துஏஏஏழ்ழ்ழ்ழ்ழ்ழு எனச் சொல்ல…
அந்த கணவர் சட்டென பின் வாங்கி வேகமாக பூங்கா வாசலுக்கு ஓடி வந்து சாலையில் கைதட்டி “ஆட்டோ” என்றார்…!
நீதி : பிறவியிலேயே உள்ள குணத்தை மாற்ற முடியாது..!