ஒருத்தன் ஆபீஸ்ல லீவு வாங்கணும்……என்ன சொன்னா மேனேஜர் லீவு தருவாருன்னு ரொம்ப நேரம் யோசிச்சு…யோசிச்சு….ஒரு முடிவுக்கு வந்து…..டக்குன மேலே செவுத்துல ஏறி தலைகீழா தொங்கிட்டு…ஆய்ய்…ஊயி’னு சவுண்டு விடுறான். உடனே அவன் கூட வேலை செய்யுறவன் ஓடி வந்து…”டேய்..டேய்..என்னடா இப்படி தலை கீழா தொங்கிட்டு கத்திட்டு இருக்கே” அப்படின்னு கேக்குறான். அதுக்கு நம்மாளு……””பேசாம இரு…நான் மேனேஜர் கிட்ட லீவு கேக்க போறேன்னு…நீ போயி ஒன வேலையை பாரு””ன்னு சொல்றான்……அவனும் போயிட்டான்….
கொஞ்ச நேரம் கழிச்சு மேனேஜர் வர்றான்…ஆபீசிக்குள்ளே நம்மாளு தலைகீழா தொங்கிட்டு கண்டபடி கத்திட்டு இருக்கான்…..ஒடனே மேனேஜர் பயந்து..”தம்பி தம்பி என்னாச்சு..இபப்டி பண்றேன்னு கேக்க…..அதுக்கு நம்மாளு”‘ நான்தான் இந்த ஆபீசுக்கு பல்பு….என்னால்தான் இந்த ஆபீசுகுள்ளே வெளிச்சம் இருக்கு…..ஆய்ய்…ஊய்ய்..”அப்படீன்னு கத்திட்டே இருக்கான்….ஒடனே மேனேஜர்….””தம்பி…நீ ரொம்ப வேலை செஞ்சு கலைச்சு போயிட்டே……ஒனக்கு ரெஸ்ட் தேவைப்படுது…நீ போயி பத்து நாள் லீவ் எடுத்து நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறமா ஆபீஸ் வா”அப்படின்னு சொல்ல……உடனே நம்மாலும் டக்குனு எறங்கி வீட்டுக்கு ஓடிட்டான்……
இதை பாத்துட்டு இருந்த அந்த இன்னொருத்தன்….. அவனும் வெளிய போக……உடனே மேனேஜர்” டேய்…நீ எங்க போறே”ன்னு கேக்குறாரு…அதுக்கு அவன்…..””போங்க சார்…என்னால லைட்டு இல்லாம வேலை செய்ய முடியாது””ன்னு சொல்லிட்டு ஓடிட்டான்…