ஒருநாள் அரசவையில் ”நாய் வாலை நேராக்க முடியுமா?” என்பது பற்றி சர்ச்சை ஏற்பட்டது. நாய் வாலை நேராக்க முடியாது என்று சிலரும் நாய் வாலை முறையான பயிற்சியின் மூலம் நேராக்கி விடலாம் என்று சிலரும் கூறினர். அதையும் சோதித்துப் பார்க்க மன்னர் விரும்பினார்.சிலருக்கு நாய்கள் கொடுக்கப்பட்டன. தெனாலிராமனும் ஒரு நாயைப் பெற்றுச் சென்றான். அவைகளைப் பராமரிக்க பணமும் கொடுக்கப்பட்டது. அவரவர்களுக்கு ஏற்பட்ட யோசனைப்படி நாய்வாலை நேராக்க முயற்சித்தனர். ஒருவர் நாய்வாலில் கனமான இரும்புத் துண்டைத் தட்டி விட்டார். ... Read More »
Daily Archives: April 15, 2016
எங்கள் நாடு!!!
April 15, 2016
ராகம் – பூபாளம் மன்னும் இமயமலை யெங்கள் மலையே மாநில மீதிது போற்பிறி திலையே! இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே? பன்னரும் உபநிடநூ லெங்கள் நூலே பார் மிசை யேதொரு நூல்இது போலே? பொன்னொளிர் பாரதநா டெங்கள் நாடே போற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே. மாரத வீரர் மலிந்தநன் னாடு மாமுனி வோர்பலர் வாழ்ந்த பொன்னாடு நாரத கான நலந்திகழ் நாடு நல்லன யாவையும் நாடுறு நாடு பூரண ஞானம் பொலிந்தநன் ... Read More »
காலை வெட்டிய வீரம்!!!
April 15, 2016
ஒரு நாள் மாலை நேரம் அரண்மனை தோட்டத்தில் அரசரும் பெரிய தனவந்தர்களும் படைத் தளபதிகளும் கூடி இருந்தனர். ஒவ்வொருவரும் அவர்கள் சண்டையில் செய்த வீர தீரச் செயல்கள் பற்றி பேசிப் பெருமைபட்டுக் கொண்டிருந்தனர் . அப்போது தெனாலி ராமனும் அங்கு இருந்தான் . அவர்கள் பேச்சையும் கேட்டுக் கொண்டு இருந்தான் . அவர்கள் பேச்சு அவனுக்கு பிடிக்கவில்லை. போங்கள் அய்யா , நீங்கள் எல்லாம் என்ன பிரமாதமாக சாதித்து விட்டீர்கள் . நானும் போர்களம் சென்று இருக்கிறேன் ... Read More »
குளிரில் நின்றால் பரிசு!!!
April 15, 2016
ஒரு நாள் இரவு நேரத்தில் அக்பரும், பீர்பாலும் உரையாடிக்கொண்டிருந்தார்கள். குளிர் அதிகமாக இருந்ததால் சால்வையை இருக்கமாக இருவரும் போர்த்திக்கொண்டிருந்தனர். அப்படியும் குளிர் அக்பரை மிகவும் வாட்டியெடுத்தது. அக்பர் பீர்பாலை பார்த்து ” பீர்பால் இந்த குளிரின் கொடுமையை பார்த்தீரா… எதிரிகளுக்கு அஞ்சாத நெஞ்சம் இருந்தும் இந்த குளிருக்கு அஞ்சாமல் இருக்க முடியவில்லையே! இந்த குளிரை பொருட்படுத்தாமல், யமுனை ஆற்றில் ஒரு இரவு முழுக்க, கழுத்தளவு நீரில் யாராலும் நிற்க இயலுமோ! அவ்வாறு நின்றால், அவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் ... Read More »
சங்க நாதம்!!!
April 15, 2016
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! ... Read More »