Home » படித்ததில் பிடித்தது » தமிழரின் சாதனைத் தேடல்……….!!!
தமிழரின் சாதனைத் தேடல்……….!!!

தமிழரின் சாதனைத் தேடல்……….!!!

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட “நன்னூல்” எனும் நூலில் தமிழ் எழுத்துக்கள் உடலில் எந்த இடத்தில பிறக்கிறது? பிறந்த எழுத்தை ஒலிக்க எந்த உறுப்பு துணை புரிக்கிறது ? துணை புரியும் உறுப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை படித்து அதிர்ச்சி அடைந்தேன் !!!

தமிழ் எழுத்துக்கள் உடலில் மார்பு,கழுத்து,தலை,மூக்கு, ஆகிய நான்கு இடங்களில் பிறக்கிறது. இதை ஒலிக்க உதடு,நாக்கு,பல்,அண்பல் (அதாவது மேற்பல் வரிசையின் அடிப்பகுதி ) அண்ணம் ( வாயின் மேல்பகுதி ) பயன்படுகின்றது,அங்காத்தல் ( வாய் திறத்தல் ) , உறல் ( பொருந்துதல் ), வருடல் ( தடவுதல் ), ஒற்றுதல்,குவிதல்,என்று செயல்படுகின்றது என விவரிக்கிறது .

அ,ஆ எனும் முதல் இரு எழுதும் கழுத்துப் பகுதியில் காற்று வெளிப்பட்டு – வாய் ஒலிப்பு உறுப்பாகி, வாய் திறத்தல் எனும் செயல்பாட்டில் பிறக்கின்றது !

இ,ஈ,எ,ஏ,ஐ ஆகிய ஐந்து உயிர் எழுத்தும், கழுத்துப் பகுதி காற்று பிறப்பிடமாகி, வாய்,அண்பல், அடிநாக்கு ஒலிப்பு உறுப்பாக, திறத்தல்-உறல் ( பொருந்துதல் ) செயலால் எழுத்தாகி ஒலிக்கிறது !.

உ,ஊ,ஒ,ஓ,ஒள ஆகிய ஐந்து உயிர் எழுத்தும் கழுத்தில் காற்று பிறப்பிடமாகி, ஒலிக்க உதடுகள் பயன்பட, குவிதல் செயல் மூலமாக பிறக்கின்றன !.

தமிழ் எழுத்துகளுக்கே இந்த சிறப்பா ? உலகில் வேறு ஏதாவது மொழிக்கு இந்த சிறப்பு உண்டா ?  இன்னும் என்ன தயக்கம் தமிழை பெருமையாய் பேச ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top