Home » படித்ததில் பிடித்தது » இறைவனைக் காண்பது எப்படி?
இறைவனைக் காண்பது எப்படி?

இறைவனைக் காண்பது எப்படி?

* புதிதாகப் பிறந்த கன்றுக்குட்டி, நிற்கக் கற்றுக் கொள்வதற்கு முன்னால் தட்டுத்தடுமாறிப் பலமுறை கீழே விழுவதுபோல, இறையருளைப் பெறுவதில் வெற்றி காண்பதற்கு முன் அநேக தவறுகள் பலமுறை நேரும்.

* எறும்பு விடாமுயற்சியுடன் இரை இருக்குமிடத்தை அடைந்து, அதைக் கவ்விக்கொண்டு, தனது இருப்பிடத்திற்கு கொண்டு சென்று உண்ணுகிறது. அதுபோல பக்தர்களும் இறைவனை விடாமுயற்சியுடன் வணங்கி, அவன் அருளைப் பெற வேண்டும்.

* பாலில் வெண்ணெய் இருக்கிறது என்று கத்தினால் வெண்ணெய் கிடைக்காது. அதை தயிராக்கிக் கடைய வேண்டும். “இறைவா! இறைவா!’ என்று சொல்வதால் மட்டும் பலனில்லை. அவனைக் காண விரும்பினால் அதற்கேற்ற முயற்சிகளை செய்ய வேண்டும்.

* மீனைப் பிடிக்க வேண்டும் என்ற ஆவலுடன் தூண்டில்காரன், இரையை விடாமுயற்சியுடனும் பொறுமையுடனும் தண்ணீரைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அதுபோல, பொறுமையுடன் மார்க்கங்களைக் கடைபிடிக்கும் ஒருவன் இறைவனைக் காண்பது நிச்சயம்.

– ராமகிருஷ்ணர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top