குருவே இவ்வுலகில் எதிரிகளே இன்றி மனிதன் வாழ்வது எப்படி?
குழந்தாய் எதிரி இன்றி வாழ்வா?அதற்கு அவன் இறந்து விடலாம்.!
ஸ்வாமி..! என்ன சொல்கிறிர்கள்??
ஆம் மகனே மனிதனுக்கு எதிரி இன்றி வாழ்வு சிறக்காது..!
எப்படி குரு… விளக்குங்கள்..!
வாழ்வில் வெற்றி மட்டுமே இருந்தால் முதலில் கர்வம் வரும் தான் என்ற
அகம்பாவம் வரும் யாரையும் மதிக்காத குணம் தலை தூக்கும்..!அதே
நேரத்தில் எதிரி இருந்தால் உனக்கு அவன் மேலும் அவனுக்கு உன்
மேலும் கவனம் இருக்கும்.. சிறு தவறு கூட செய்ய மாட்டீர்கள்..!
நீங்கள் வெற்றி பெறுவதை விட மற்றவர் வெற்றி பெறக் கூடாது என்று தான்
நினைப்பீர்கள்.!அவரை வீழ்த்தவேனும் பிறரை மதிப்பீர்கள்.!எதிரி ஜெயித்தால்
கிடைக்கின்ற தோல்வி உங்களுக்கு பாடங்கள் சொல்லித்தரும்..!தோல்வி
கற்றுத்தந்த பாடங்கள் தான் உலகை வெல்லும்..!
மனிதனுக்கு எதிரி அவசியம் குழந்தாய்..!