ஒரு ஏரிக்கரையில் சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, “என்னை காப்பாற்று.., என்னை காப்பாற்று..!” என்று ஆற்றில்ஒரு குரல்கேட்டது. சிறுவன் எட்டிப்பார்த்தான். முதலையொன்று வலையில் சிக்கி துடித்துகொண்டுருந்தது. “இல்லை..! இல்லை..!உன்னை காப்பாற்றினால் நீ என்னை கொண்றுவிடுவாய்..!” என்றான் சிறுவன். “சத்தியமாய் கொல்ல மாட்டேன் என்னை காப்பாற்று.”என்றது முதலை.
முதலையின் வார்த்தையை நம்பி வலையை அறுத்தான் சிறுவன். முதலையின் தலைவெளியே வந்ததும் உடனே சிறுவனின் காலைகவ்வி விழுங்க துவங்கியது. ஏய் நன்றிகெட்ட முதலையே நீ செய்வது உனக்கே நியாயமா இருக்கா என்றான் சிறுவன். முதலை கவ்வியபடியே, “இதுதான் உலகம்..! இதுதான் வாழ்கை…!” என்றது முதலை. சிறுவன், “இல்லை..! இல்லை..! நீ சொல்வதை ஏற்கமுடியாது!” மரத்தில் இருக்கும் பறவைகளை பார்த்து கேட்டான் “ஏய் பறவைகளே..! நீங்கள் சொல்லுங்கள் இந்த முதலை சொல்வதுபோல் இதுதான் உலகமா..? இதுதான் வாழ்கையா…?” என்றான். “ஆம் நாங்கள் எவ்வளவு உயரத்தில் பாதுகாப்பாக கூடுகட்டி முட்டை இட்டாலும் அதைபாம்புகள் வந்து குடித்து விடுகிறது முதலை சொல்வது போல் இதுதான் உலகம்..! இதுதான் வாழ்க்கை…!” என்றன பறவைகள்.
ஆனால் சிறுவனால் ஏற்றுகொள்ள முடியவில்லை. கரையில் படுத்திருந்த கழுதையிடம் கேட்டான், “ஏய் கழுதையே! இந்த முதலை சொல்வதுபோல் இதுதான் உலகம்.. இதுதான் வாழ்கையா…?” .கழுதை “ஆம் நான் இளமையாக இருக்கும் போது என் முதளாளி உணவு தந்து வேலை வாங்கினான். இப்போது என்னால் வயதுபோய் கிழன்டியவுடன் என்னை துரத்திவிட்டான். முதலை சொல்வது போல் இதுதான் உலகம்.. இதுதான் வாழ்கை..!” என்றது கழுதை. இப்பவும் சிறுவனால் ஏற்று கொள்ளமுடியவில்லை. கரையில் நின்ற முயலிடம் கேட்டான் சிறுவன், “ஏய் முயலே..! இந்த முதலை சொல்வதுபோல் இதுதான் உலகம்.. இதுதான் வாழ்கையா…?”
“இல்லை! முதலை சொல்வதை என்னால் ஏற்கமுடியாது..! என்றது முயல். முதலை, “இல்லை இதுதான் உலகம்..! இதுதான் வாழ்கை…! என வாதாடியது. முயல், “சிறுவனின் காலை விட்டுவிட்டு பேசு நீ பேசுவது புரியவில்லை!” என்றது முயல்.
“சிறுவன் ஒடிவிடுவான்!” என்றது முதலை. முயல் “அட முட்டாள் முதலையே உன் வாலின் பலத்தைகூடவா மறந்து விட்டாய் அவன் ஒடினால் வாலால் அடித்து பிடி!” என்று கூறியதும் முதலை தன்பிடியை விட்டது. “நில்லாதே..! ஒடிவிடு..ஒடிவிடு..!” என கத்தியது முயல். சிறுவன் ஒடினான் வாலால் அடிக்க முயற்சித்த போது தான் தன் வால் பகுதி இன்னும் வலையில் இருந்து விடுபடவில்லை என்பதை அறிந்தது முதலை. சிறுவன் ஒடிசென்று தன் கிராமத்வரை அழைத்துவந்தான். அவர்கள் அந்த முதலையை அடித்து கொன்றனர். அப்போது கிராமத்தவரகளுடன் வந்த ஒரு நாய் சிறுவனை காப்பாற்றிய அந்த புத்திசாலி முயலை கவ்வியது. சிறுவன் ஒடிசென்று தடுப்பதற்குள் முயல் இறந்து விடுகிறது. இதுதான் உலகம். இதுதான் வாழ்கை…! என்று பெருமூச்சு விடுகிறான் சிறுவன்.
இந்த ஜென்கதையை நன்றாக புரிந்து கொண்டால் எனக்கு மட்டும் ஏன் இந்த துன்பம் என்ற கேள்வி எழாது. யானையின் காலுக்கு கீழே நிக்கும் எறும்பால் யானையை முழுமையாக பாத்துவிட முடியாதது போல் இந்த உலகத்தையும் எம்மால் மழுமையாக அறிந்துவிட முடியாது