தெனாலிராமன் இராயரின் சபையில் பல வேடிக்கைகளைச் செய்தபடி இன்பமாக வாழ்ந்து வந்தான். ஒரு சமயம் இராயரிடம் பகை கொண்ட ஒருவன் அவரைக் கொல்ல ஒரு சதிகாரனை அனுப்பினான். சதிகாரனும் தெனாலிராமனின் உறவினன் என்று சொல்லிக் கொண்டு அவனது வீட்டில் தங்கியிருந்தான். ஒரு நாள் தெனாலிராமன் இல்லாத சமயம் பார்த்து அந்த சதிகாரன் இராயருக்குக் கடிதம் ஒன்று எழுதினான். அதில் அரசர் உடனே தன் வீட்டுக்கு வந்தால் அதிசயம் ஒன்றைக் காட்டுவதாக எழுதி தெனாலிராமன் என்று கையொப்பமிட்டு அனுப்பினான். ... Read More »
Daily Archives: April 10, 2016
சூடு பட்ட புரோகிதர்கள்!!!
April 10, 2016
மன்னர் கிருஷ்ணதேவராயருக்கு அவருடைய தாயார் மேல் அன்பும் மரியாதையும் உண்டு. தாய் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அவரது தாயாருக்கு வயோதிகம் ஆகிவிட்டபடியால் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். வைத்தியரை அழைத்து தன் தாயின் உடல் நிலையைப் பரிசோதிக்கச் செய்தார். பரிசோதனை செய்த வைத்தியரும் “தங்கள் தாயார் அதிக நாள் தாங்க மாட்டார்கள். விரைவில் சிவலோகப் பதவி அடைந்து விடுவார்கள்” என்று கூறினார். அது கேட்ட மன்னர் வேதனையுற்றார். தன் தாயாரிடம் சென்று “அம்மா, உங்களுக்கு சாபிட எது ... Read More »
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு!!!
April 10, 2016
ஓர் ஊரில் ஒரு சிவன் கோவில் இருந்தது.கணபதிசர்மா என்று ஒரு அந்தணர் அந்தக் கோவிலில் பூஜை செய்து வந்தார். அவருக்குப் பல ஆண்டுகளாகக் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. தினமும் இறைவனை மனமுருகப் பிரார்த்தித்து வந்தார்.அவர் மனைவியும் விரதங்கள் தானங்கள் என்று செய்து வந்தாள்.ஆனாலும் இவர்களுக்குப் பிள்ளையில்லை. வீட்டில் இருக்கையில் ஒரு மாலைவேளையில் கணபதியின் மனைவி முன் ஒரு சிறிய குட்டி கீரிப்பிள்ளை வீட்டுக்குப் போகத் தெரியாமல் நின்றது. அதைப் பார்த்த அந்தணர் மனைவி அதற்குப் பாலும் சோறும் ... Read More »
நான்கு திருடர்களும் ராமனின் திர்ப்பும்!!!
April 10, 2016
நான்கு திருடர்கள் கூட்டாக பொன்னும் பொருளும் திருடிக்கொண்டு வந்தார்கள். அவைகள் அனைத்தையும் ஒரு தோண்டியில் போட்டு நிரப்பி வைத்தார்கள். அதைப் பத்திரமாக ஓர் இடத்தில் வைக்க ஆசைப்பட்டார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வோர் இடத்தைச் சொன்னார்கள். ஒருவர் கூட மற்றொருவர் யோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் ஒருவருக்கொருவர் நம்பிக்கை இல்லாமல் இருந்தனர். கடைசியாக நால்வரில் ஒருவன், “நாம் வழக்கமாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோமே ஒரு கிழவி வீட்டில் அவளிடம் அதைக் கொடுத்து வைப்போம். நல்ல கிழவி. பத்திரமாகக் காப்பாற்றி வைப்பாள். நாம் நால்வரும் ... Read More »
அதிமதுரத்தின் சக்தி!!!
April 10, 2016
மூலிகையன் பெயர்: அதிமதுரம் தாவரவியல் பெயர்: GLYCYRRAIZA GLABRA. தாவரக்குடும்பம்: FABACEAE. பயன் தரும் பாகங்கள்: இலை மற்றும் உரித்த வேர்கள். வேறு பெயர்கள்: அதிங்கம், அஷ்டி, மதூகம், இரட்டிப்பு மதூரம். போன்றவை. வளரியல்பு: அதிமதுரம் ஒரு வகை செடியைச் சேர்ந்தது. காடுகளில் புதர் செடியாக வளரும். அதற்கு மித சீதோஸ்ணமான கால நிலை வேண்டும். வளமா மண்ணில் நன்கு வளரும். ஸ்பெயின் இத்தாலி போன்ற நாடுகளில் பயிர்களுக்கு இடையே களையாக வளரும். இது சுமார் 1.5 அடி ... Read More »
மாதுளையின் மகத்துவம்!!!
April 10, 2016
மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது. புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும். தொடர்ந்து நோயின் ... Read More »
கடன் வாங்கிய ஏழை!!!
April 10, 2016
முல்லா ஒரு நாள் ஒரு பெரிய பணக்காரரிடம் சென்றார். “ஒரு மனிதனுடைய கஷ்ட நிலைகண்டு மனம் பொறாமால் தங்களிடம் வந்திருக்கிறேன். அந்த மனிதன் ஒரு பணக்காரரிடம் கொஞ்சம் பணத்தை கடனாக வாங்கிவிட்டான் அது இப்பொழுது வட்டிக்கு வடடியெனக் கூடி இனறு இத்தொகையினைத் திருப்பிக்கொடுக்க முடியாது தினறுகின்றான். அவன் தற்கொலை செய்து விடுவானோ என்று கூட எனக்குப்பயமாக இருக்கின்றது. நீங்கள் ஒரு ஆயிரம் பொற்காசுகள் அந்த மனிதனுக்கு அவனின் கடனை அடைப்பதற்கு கொடுத்தால் அவன் உரிய காலத்தில் அதைத் ... Read More »