குருவே கவலை இல்லாத மனிதன் இவ்வுலகிலுண்டா?
குழந்தாய் முதலில் கவலை என்றால் என்ன?
என்ன ஸ்வாமி சிறுவன் என்னிடம் கேட்கிறிர்கள்?
பரவாயில்லை உனக்கு தெரிந்ததை சொல் மகனே..!
எனக்கு சொல்லத் தெரியவில்லை குருஜி நீங்களே கூறுங்கள்..!
நாம் நினைப்பது நடக்குமா என எதிர்பார்ப்பதே கவலை..!
நினைப்பது நடந்துவிட்டால் கவலை போய்விடுமா ஸ்வாமி?
அதுதான் இல்லை கவலைகள் எண்ணிலடங்காதவை…
அது எப்படி விளக்குங்கள் குருஜி..!
குடும்பம், உறவு, தொழில், நட்பு,சுற்றம், பணம், புகழ், அரசியல், கல்வி,வேலை, திருமணம், பந்தம், பாசம்,ஆரோக்கியம், நியாயம், அநியாயம், நீதி,நேர்மை,இன்னும் என்னனென்ன உண்டோ அத்தனையிலும் அது பற்றிய கவலையைப் பார்ப்பதே மனித இயல்பாகிறது.!
மனிதனுக்கு வாழ்வில் கவலை இல்லை என்பது தான் மிகப் பெரிய
கவலையாக இருக்கும்.! உழைக்காது எதிர்பார்ப்புகளை வளர்த்துக்
கொள்வது கவலையின் தொடக்கம்..திட்டமிடுபவன் கவலைகளை
விரட்டி அடிக்கிறான்.! சோர்வுற்றமனமே கவலைப்படும்..எப்போதும்
சுறுசுறுப்பாக இருந்தால் கவலையே வராது..!
பிரச்சனைகள் வரும்போது அதைக் கண்டு சோர்ந்துவிடாமல் அந்த
பிரச்சனைக்குள்ளும் ஒரு வாய்ப்பு ஒளிந்திருக்கிறதா எனக் கண்டு…
அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்பவனே சிறந்த மனிதன்..!
அவன் தான் கவலைஇல்லாத மனிதன்…!