நார்த்தங்காய்: இதை ஊறுகாய் செய்து சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும், மலச்சிக்கலைப் போக்கும் சக்தி உண்டு.
முருங்கைப் பிஞ்சு: இதை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து இரண்டு வேளை வீதம், 3 நாட்கள் சாப்பிட குணமாகும்.
காரட், பீட்ரூட்: சாப்பிட்டு வந்தால், மஞ்சள் காமாலை குணமாகும். உடல் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
வெண்டைக்காய்: உணவில் அடிக்கடி சேர்த்துவர மூளை பலமடையும், கண்கள் குளிர்ச்சியடையும், எலும்பு பலப்படும்.
பேரிக்காய்: தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், இதய படபடப்பு நின்றுவிடும்.
தக்காளி காய்: இதை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர உடல் வீக்கம் குறையும், தோல் நோய் குணமாகும்.
சேப்பங்கிழங்கு: உண்ணும் உணவில் வாரம் இரு முறை சேர்த்துக் கொண்டால் நரம்புகள் பலப்படும்.
வெள்ளை பூசணி: மூன்று மாசம் தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் இளைத்தவர் பெருக்கலாம். சாறு எடுத்து 100 மி.லி. வீதம் தினமும் சாப்பிட புற்றுநோய் குணமாகும்.
நீர்கடுப்பு, நீர் எரிச்சல்: வெங்காயத்தை, பச்சையாக சாப்பிட்டு தண்ணீர் குடிக்க தீரும்.
பாகற்காய் சாறு: சாப்பிட, சர்க்கரை வியாதி குணமாகும். வற்றல் செய்து வறுத்து உண்டு வர காமாலை, கல்லீரல் குறைபாடு நீங்கும்.
அவரைக்காய்: உணவில் அடிக்கடி சேர்த்து சமைத்து சாப்பிட, இரத்தம் சுத்தமாகும். இரத்த விருத்தி அதிகரிக்கும்.
===========
கணுக்கால் சுளுக்கு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்…. நடக்கும்போது ஓடும்போதுஅல்லது சாதாரண வேலைகளின் போது கூட சில தருணங்களில் கணுக்கால் சுளுக்கு ஏற்பட்டுவிடுவதுண்டு. சுளுக்கு ஏற்பட்டால் அந்த இடத்தில் வீக்கம் எற்படலாம், வலி ஏற்படும், சில நேரங்களில் செம்மை படர்ந்தது போலவும் இருக்கும். அத்துடன் அந்த இடத்தை ஆட்ட அசைக்க முடியாதபடி பிடித்தது போலவும் இருக்கலாம். அவ்வாறு கணுக்கால் சுளுக்கு ஏற்பட்டால் நீங்கள் செய்ய வேண்டியது என்ன? சுளுக்கு ஏற்பட்டதைத் தொடரும் அடுத்த மூன்று நாட்களுக்கு ஐஸ் தண்ணீரில் நனைத்தல், ஐஸ் பக் (ice pack) வைத்தல் அல்லது ஐஸ் மசாஸ் (ice massage) செய்வது அவசியம். அவற்றை செய்வது எப்படி? ஒரு பிளாஸ்டிக் பையினுள் ஐஸ் துண்டுகளை உடைத்துப் போடுங்கள். எடுத்த எடுப்பில் உடனடியாக வலியுள்ள இடத்தில் வைக்க வேண்டாம். முதலில் மெல்லிய நனைந்த துணியினை சுளுக்குப் பட்ட இடத்தின் மீது விரித்துவைத்துவிட்டு அதன் மேல் ஐஸ் பக்கை வைக்கவும். அது ஆடாமல் அசையாமல் இருப்பதற்கு ஒரு எலாஸ்டிக் பன்டேஜை (elastic bandage ) நீங்கள் பயன்படுத்தலாம். ஒரு பெரிய வாளியினுள் ஐஸ் கலந்த நீரை ஊற்றுங்கள். அதற்குள் சுளுக்குப்பட்ட காலை வையுங்கள். கால் மரப்பது போன்ற உணர்வு ஏற்படும்வரை அவ்வாறு வைத்திருங்கள் ஐஸ் மஸ்ஜ் கொடுப்பதற்கு ஸ்டைரோஃபோம் கப்களில் (Styrofoam cups) நீரை விட்டு ஐஸ் ஆக்குங்கள். அதன் நுனியில் படர்ந்திருக்கும் ஐஸ் கட்டிகளை உடைத்துவிட்டு. ஐஸ் உள்ள கப்பை சுளுக்கு பட்ட இடத்தின் மீது மசாஸ் பண்ணுவது போல மெதுவாக நீவி விடுங்கள்.ஒரு இடத்தில் தொடர்ந்து வைத்திருக்காமல் சுற்றுவட்டம் இடுவதுபோல சுற்றிச் சுற்றி வாருங்கள். ஒரே இடத்தில் 30 செகண்டிற்கு மேல் வைத்திருக்கக் கூடாது என்பது முக்கியம். இவை எவற்றையும் ஒரு தடவையில் 20 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து செய்ய வேண்டாம்.