“வியாபார தந்திரம் நிஜ வாழ்க்கையில் (வேடிக்கைக்காக மட்டும். முயற்சி செய்ய வேண்டாம்!!! )
உரையாடல் 1 :
அப்பா: மகனே நான் உனக்கு திருமணம் செய்து வைக்கபோகிறேன்; பெண்ணையும் நானே தேர்ந்தெடுக்கப் போகிறேன்.
மகன்: முடியாது.
அப்பா: அந்தப் பெண் உலக கோடீஸ்வரர் பில்கேட்சின் மகளாக இருந்தால்…
மகன்: அப்படியானால் சம்மதம்.
பின் அப்பா பில்கேட்சிடம் சென்று பேசினார்.
உரையாடல் 2 :
அப்பா: நான் உங்கள் மகளை என் பையனுக்குத் திருமணம் பேசி முடிப்பதற்காக வந்திருக்கிறேன்.
பில்கேட்ஸ்: நடக்க இயலாத ஒன்று.
அப்பா: என்னுடைய மகன் உலக வங்கியின் துணைத்தலைவராக இருந்தால்…..
பில்கேட்ஸ்: அப்போ சம்மதம்.
அதன் பிறகு அப்பா உலகவங்கியின் தலைவரிடம் சென்று பேசியவை.
உரையாடல் 3 :
அப்பா: என்னுடைய மகனை உங்கள் உலகவங்கியின் துணைத் தலைவராக பணி நியமனம் செய்யுங்கள்.
உ வ தலைவர்: முடியாது.
அப்பா: என் மகன் பில்கேட்ஸின் மருமகன்.
உ வ தலைவர்: அப்படியென்றால் சரி நியமனம் செய்கிறேன்.
இது தான் வியாபார தந்திர யுக்தி.
இப்படியும் வாழ்க்கையில் முன்னுக்கு வரமுடியுமா?!!!!