சீரகம் / போசனகுடோரி
“ போசனகுடோரியைப் புசிக்கில் நோயெல்லாமருங்
காசமிராதக் காரத்திலுண்டிட” – தேரன் வெண்பா
இந்த போசனகுடோரி ஒரு அருமருந்து… மானிடத்திற்கு இயற்கை கொடுத்த கொடைகளில் ஒன்று… இதனை உணர்ந்த நம் முன்னோர்கள் இதனை தினசரி நாம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற அக்கறையிலும், நோய்நொடி இல்லாமல் வாழவேண்டும் என்ற பேராவலிலும் இதன் சுவையை நமக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்…
சைவ, அசைவ குழம்புகள், கூட்டு, பொரியல் முதல் ரசம் வரை எல்லாவற்றிலும் இந்த போசனகுடோரியை சேர்த்தால் மட்டுமே அதன் சுவையை முழுதாக ரசித்து உண்ணும் அளவிற்கு நாம் குழந்தை முதலே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம்…
அதெல்லாம் சரி… என்னமோ புரியாத பாஷைல ஒண்ண சொல்லிட்டு?.. இத நாம தினந்தோறும் சாப்பிட்றோம்னா?.. என்ன அது… நாங்க எப்போதுமே போசனகுடோரின்னு எதையும் குழம்பு ரசத்துல எல்லாம் சேர்த்ததே இல்லன்னு சொல்றீங்கதானே….??
போசன குடோரின்னா வேறொன்னும் இல்லீங்க.. சீரகம் தான் அந்த அருமருந்து…. இந்த சீரகம்தான் பலவிதமான நோய்களில் இருந்து நிவாரணம் தருது.. வந்த நோய்க்கு நிவாரணம் மட்டும் இல்ல.. நோய்கள் வராமலும் தடுக்க கூடியது…
சீரகம் என்னென்ன நோய்களை குணமாக்கும் / தடுக்கும்னு நம்ம முன்னோர்கள் பாட்டாவே பாடி இருக்காங்க…
“வாந்தியருசிகுன்மம் வாய் நோய் பீலிகமிரைப் பேற்றிருமல் கல்லடைப்பலாஞ்சன்முட்-சேந்தகம்மல்
ஆசனகுடோரியென்னும் அந்தக்கிரகயணியும்
போசன குடோரியுண்ண போம்”
வாந்தி, அருசி, குன்மம், வாய் நோய்கள், இரைப்பு, இருமல், கல்லடைப்பு, குரல் கம்மல், கிரகமணி என பல நோய்களில் இருந்து சீரகம் நம்மை காப்பாற்றும் அருமருந்து என்று இந்த பாடல் விளக்குகிறது